அப்படிபோடு... மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது!

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரின் முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து கார்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது!

இந்தியாவின் சொகுசு கார் மார்க்கெட்டில் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி கார் கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.1 கோடி செலவில் இந்த கார் விற்பனைக்கு வந்த நிலையில், எதிர்பாராத வகையில் வரவேற்பு கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது!

பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களுக்கு சரியான கட்டமைப்பு அம்சங்கள் இந்தியாவில் இல்லை என்று கூறி வந்த நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் துணிச்சலாக தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்கி சாதித்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது!

இதுகுறித்து கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மார்ட்டின் ஷ்வென்க் கூறுகையில்,"எங்களது இக்யூசி எலெக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட கார்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுவிட்டன," என்று தெரிவித்துள்ளார்.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது!

மேலும், புக்கிங்கை நிறுத்தவில்லை. புக்கிங் செய்து கொள்வதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு உள்ளது. ஆனால், கார் இருப்பு இல்லை என்பதால், டெலிவிரி பணிகள் சற்று தாமதமாகும். அதாவது, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மீண்டும் இக்யூசி எலெக்ட்ரிக் கார் டெலிவிரிப் பணிகள் திரும்ப துவங்கப்படும் என்று ஷ்வென்க் குறிப்பிட்டுள்ளார்.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் அடிப்படையில்தான் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த தோற்றத்தில் ஒற்றுமைகள் இருக்கின்றன. அதேநேரத்தில், குறிப்பிட்ட சில மாற்றங்களும், பல தொழில்நுட்ப வேறுபாடுகளும் இந்த காரை தனித்துவப்படுத்துகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது!

இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தில் இயங்குகிறது. முன்புற மற்றும் பின்புற ஆக்சில்களில் தலா ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இருக்கும் மின்மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 402 பிஎச்பி பவரையும், 765 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும்.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது!

இந்த காரில் 80kWh லித்தியம் அயான் பேட்டரி இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில், 450 முதல் 471 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் கார் சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி, புனே, பெங்களூர் ஆகிய நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பிற நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் புக்கிங் செய்து டெலிவிரி பெற முடியும்.

Most Read Articles
English summary
Mercedes Benz has revealed first lot of EQC electric SUV sold out in India.
Story first published: Saturday, January 16, 2021, 12:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X