மெர்சிடிஸின் 2022 ஏஎம்ஜி ஜிடி 4-கதவு கூபே கார்!! புத்துணர்ச்சியான தோற்றத்தில் வெளியீடு!

மெர்சிடிஸ் நிறுவனம் 2022 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி 4-கதவு கூபே ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய விபரங்களை படங்களுடன் வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

மெர்சிடிஸின் 2022 ஏஎம்ஜி ஜிடி 4-கதவு கூபே கார்!! புத்துணர்ச்சியான தோற்றத்தில் வெளியீடு!

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி 4-கதவு கார் ஆனது 6-சிலிண்டர் ஜிடி43, ஜிடி53 என்ற இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டும் அப்கிரேடாக சிறிய வெளிப்புற தோற்ற மாற்றங்கள், புதிய வசதிகள் மற்றும் சில புதிய நிறத்தேர்வுகளை பெற்றுள்ளன.

மெர்சிடிஸின் 2022 ஏஎம்ஜி ஜிடி 4-கதவு கூபே கார்!! புத்துணர்ச்சியான தோற்றத்தில் வெளியீடு!

இந்த வகையில் அப்டேட்டான ஓட்டுனர் உதவி அமைப்புகள் மற்றும் எம்பக்ஸ் மல்டிமீடியா சிஸ்டம் உள்பட அகலமான திரை காக்பிட்டை 2022 ஏஎம்ஜி ஜிடி 4-கதவு கூபே கார் பெற்றுள்ளது. இவற்றுடன் 20-இன்ச் அலாய் சக்கரங்கள் அல்லது 5-இரட்டை-ஸ்போக் டிசைன் உடன் 21-இன்ச் ஃபார்க்டு சக்கரங்களும் தேர்வாக இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் ஏற்றுள்ளது.

மெர்சிடிஸின் 2022 ஏஎம்ஜி ஜிடி 4-கதவு கூபே கார்!! புத்துணர்ச்சியான தோற்றத்தில் வெளியீடு!

இதன் 6-சிலிண்டர் மாடல்களில் ப்ரேக் காலிபர்களை சிவப்பு நிறத்தில் வாடிக்கையாளர்கள் பெறலாம் என்கிறது மெர்சிடிஸ். புதியதாக ஸ்டார்லிங் ப்ளூ மெட்டாலிக், ஸ்டார்லிங் ப்ளூ மேக்னோ மற்றும் காஷ்மீர் வெள்ளை மேக்னோ என்ற பெயிண்ட் தேர்வுகள் இந்த ஏஎம்ஜி காருக்கு வழங்கப்பட்டுள்ளன.

மெர்சிடிஸின் 2022 ஏஎம்ஜி ஜிடி 4-கதவு கூபே கார்!! புத்துணர்ச்சியான தோற்றத்தில் வெளியீடு!

இவற்றுடன் இந்த 4-கதவு கூபே காரில் கொண்டுவரப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான மாற்றம் எதுவென்று பார்த்தால், முன்பு இந்த காரில் 4 நபர்கள் மட்டுமே அமர முடியும். ஆனால் இந்த 2022 மாடலில் 5 பேர் வரையில் அமரலாம் என மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது.

மெர்சிடிஸின் 2022 ஏஎம்ஜி ஜிடி 4-கதவு கூபே கார்!! புத்துணர்ச்சியான தோற்றத்தில் வெளியீடு!

இதற்காக பின் இருக்கை வரிசையில் வழங்கப்பட்டு வந்த மைய கன்சோல் நீக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியும் இருக்கையாக மாற்றப்பட்டுள்ளது. வெளிபுறத்தை போல் உட்புறத்திற்கும் யாச்ட் நீலம் மற்றும் ஆழமான வெள்ளை என்ற நிறத்தேர்வுகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன.

மெர்சிடிஸின் 2022 ஏஎம்ஜி ஜிடி 4-கதவு கூபே கார்!! புத்துணர்ச்சியான தோற்றத்தில் வெளியீடு!

இந்த 2022 ஏஎம்ஜி ஜிடி காரை வெளியிட்டது குறித்து மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிரிவின் சிஇஒ பிலிப் ஸ்கீமர் கருத்து தெரிவிக்கையில், எங்கள் ஏஎம்ஜி ஜிடி 4-கதவு கூபேவை ஒரு சிறந்த மட்டத்தில் தொடர்ந்து பராமரிக்கிறோம். தற்போதைய புதுப்பிப்பு மற்றும் பிரத்யேக பதிப்பின் மூலம், தனித்தன்மை மற்றும் வெளிப்படையான வாழ்க்கை முறைக்கு பெரிய மதிப்பை கொடுக்க நாங்கள் விரும்புகின்றோம்.

மெர்சிடிஸின் 2022 ஏஎம்ஜி ஜிடி 4-கதவு கூபே கார்!! புத்துணர்ச்சியான தோற்றத்தில் வெளியீடு!

ஏனெனில் இந்த வகையில் தான் நாங்கள் எங்கள் சுயவிவரத்தை ஒரு ‘செயல்திறன் சொகுசு பிராண்ட்' ஆக தொடர்ந்து கட்டமைத்து வருகிறோம். இதன்படி விரைவில் எங்களது முதல் இ செயல்திறன்மிக்க ஹைப்ரீட் கார்களை வழங்குவதன் மூலம் பவர் ட்ரெயினின் மின்மயமாக்கலை முன்னோக்கி செலுத்துகிறோம்" என்றார்.

மெர்சிடிஸின் 2022 ஏஎம்ஜி ஜிடி 4-கதவு கூபே கார்!! புத்துணர்ச்சியான தோற்றத்தில் வெளியீடு!

2022 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி 43 4-கதவு காரில் வழக்கம்போல் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்லைன் 6-சிலிண்டர் என்ஜின் தான் தொடரப்பட்டுள்ளது. ஆனால் இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் 367 பிஎச்பி ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது.

மெர்சிடிஸின் 2022 ஏஎம்ஜி ஜிடி 4-கதவு கூபே கார்!! புத்துணர்ச்சியான தோற்றத்தில் வெளியீடு!

அதேபோல் ஜிடி53 காரிலும் இந்த என்ஜின் 435 எச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இந்த 6-சிலிண்டர் என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Mercedes-Benz AMG GT53 4-Door Coupe Officially Revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X