மெர்சிடிஸ் -மேபக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ்600 எஸ்யூவி இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்கு வர இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான மிக விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 மெர்சிடிஸ் -மேபக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மிக உயரிய வகை சொகுசு எஸ்யூவி சந்தையில் மெர்சிடிஸ் - மேபக் ஜிஎல்எஸ்600 எஸ்யூவி பெரும் கோடீஸ்வர்களின் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த உயர்வகை சொகுசு எஸ்யூவி கடந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து, அடுத்த வாரம் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

 மெர்சிடிஸ் -மேபக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி அடிப்படையில் அதிக சொகுசு அம்சங்கள் மற்றும் சிறப்பம்சங்களுடன் இந்த உயர்வகை எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. உயரிய தரத்திலான பாகங்களுடன் தனித்துவமான அம்சங்களுடன் பெரும் கோடீஸ்வரர்களின் அந்தஸ்தின் அடையாளமாக மாறி இருக்கிறது.

 மெர்சிடிஸ் -மேபக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதிய ஜிஎல்எஸ்600 மேபக் எஸ்யூவி வெளிப்புறத்தில் ஏராளமான க்ரோம் உதிரிபாகங்களுடன் வசீகரிக்கிறது. க்ரில் அமைப்பு, விண்டோ லைன், சைடு ஸ்டெப், பம்பர்கள், ரூஃப் ரெயில்கள், புகைப்போக்கி குழல்கள் க்ரோம் பூச்சுடன் மிளிர்கின்றன.

 மெர்சிடிஸ் -மேபக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்த பிரம்மாண்ட சொகுசு எஸ்யூவியில் 22 அங்குலம் அல்லது 23 அங்குல விட்டத்திலான மல்டி ஸ்போக் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரட்டை வண்ணக் கலவையும் கவர்கிறது.

 மெர்சிடிஸ் -மேபக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்த எஸ்யூவியில் பின் இருக்கைகள் சாய்மான வசதியுடன் மிகவும் உயர்தர லெதர் உறையுடன் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. வென்டிலேட்டட் மற்றும் மசாஜ் வசதிகள் இருக்கின்றன.

 மெர்சிடிஸ் -மேபக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பின் இருக்கை பயணிகளுக்காக பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. உயர்தர மியூசிக் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், சன் ஷேடுகள் உள்ளிட்ட பயணிகள் எதிர்பார்க்கும் அம்சங்கள் நிறைந்துள்ளன.

 மெர்சிடிஸ் -மேபக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்த காரில் 12.3 அங்குல எம்பியூஎக்ஸ் செயலியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பர்ம்ஸ்டெர் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், எல்இடி ஆப்டிகல் ஃபைபர் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

 மெர்சிடிஸ் -மேபக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்த எஸ்யூவியில் இ-ஆக்டிவ் பாடி கன்ட்ரோல் சஸ்பென்ஷன் இருப்பது இதன் மிக முக்கிய அம்சமாக இருக்கிறது. இதன்மூலமாக, சாலையில் முன்னால் உள்ள பள்ளம் மேடுகளுக்கு தக்கவாறு சஸ்பென்ஷன் அட்ஜெஸ்ட் செய்து செல்லும் என்பதால் சிறப்பான பயண அனுபவத்தை தரும்.

 மெர்சிடிஸ் -மேபக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ்600 எஸ்யூவியில் 4.0 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 550 பிஎச்பி பவரையும், 730 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேலும், இந்த எஸ்யூவியில் உள்ள இக்யூ பூஸ்டர் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் 21 பிஎச்பி பவரையும், 249 என்எம் டார்க் திறனையும் கூடுதலாக வழங்கும்.

 மெர்சிடிஸ் -மேபக் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்த எஸ்யூவியில் 9ஜி ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் பவர் செலுத்தப்படுகிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும்.

Most Read Articles

English summary
Mercedes-Benz will be launching the Maybach GLS600 ultra-luxury SUV in the country in the next week. The GLS600 is the first SUV offering from the brand in the Mercedes-Maybach line-up. It was first globally unveiled back in the year 2019 and went on sale in other international markets last year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X