Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எதிர்கால பென்ஸ் கார்களின் டேஸ்போர்டு இப்படிதான் இருக்குமாம்!! இந்தியாவிற்கு வர பல வருஷமாகும்..
மெர்சிடிஸ் எஸ் க்ளாஸ் எலக்ட்ரிக் காருக்கு வழங்கப்படவுள்ள முழு டேஸ்போர்டு அமைப்பை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய எஸ்-க்ளாஸின் எலக்ட்ரிக் வெர்சனில் கேபினின் அகலம் முழுவதையும் ஆக்கிரமிக்கும் விதத்தில் அதிக வளைவுகளை கொண்ட புதிய டேஸ்போர்டு அமைப்பை மெர்சிடிஸ் நிறுவனம் கொண்டுவரவுள்ளது.

எம்பக்ஸ் ஹைப்பர்திரை என்ற பெயரில் கொண்டுவரப்படும் இந்த தொடுத்திரை அமைப்பில் மூன்று திரைகள் புதிய தொழிற்நுட்பம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எதிர்கால பென்ஸ் கார்களில் இந்த திரைதான் பெரும்பானமையாக வழங்கப்படும்.

இந்த 3 திரைகளில் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் முன்பக்க பயணிகளுக்கு பொழுதுபோக்கு திரை உள்ளிட்டவை அடங்குகின்றன. இதில் பொழுதுபோக்கிற்கான திரையில் நல்ல தரத்தில் படங்களை காட்டுவதற்கு ஒஎல்இடி தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய டேஸ்போர்டு பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டிருப்பினும், சில வெவ்வேறான பாகங்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக டேஸ்போர்டு அமைப்பை சுற்றிலும் 3டி பரிமாணத்தில் ஸ்பெஷல் 3-லேயர் கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் நிறுவனம் இதனை ‘சில்வர் நிழல்' என அழைக்கிறது.

திரைகளின் மீது மேற்பரப்பு ஒளி எதிரொலிக்காத மற்றும் சுத்தம் செய்வதற்கு எளிமையான கண்ணாடி மேற்பரப்பு வழங்கப்பட்டுள்ளது. காரின் கேபினை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள விளக்குகளை பயன்படுத்தினால் டேஸ்போர்டில் ஒளி மிதப்பது போன்று தோன்றும் என மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது.

டேஸ்போர்டின் இரு முனைகளிலும் ஸ்பீக்கர் போன்றதான தோற்றத்தில் ஏசி துளைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸின் தொடுத்திரைகளை காட்டிலும் இந்த திரைகளை கண்ட்ரோல் செய்வது நிச்சயம் எளிமையானதாக இருக்கும்.

பூஜ்ஜிய-அடுக்கு மெனு அமைப்பானது பயனர் விருப்பங்களின் அடிப்படையில் தேவையான நேரத்தில் தேவையான தகவல்களைக் காண்பிக்கும், இதன் மூலம் தொடுத்திரையை உருட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது, அதற்கு பதிலாக குரல் கட்டளையைப் பயன்படுத்தும்.

எம்பக்ஸ் சிஸ்டத்தின் முந்தைய தலைமுறை நாவிகேஷன், மீடியா மற்றும் தொலைப்பேசியை ஒரே மைய திரையில் வழங்கி வருகிறது. ஆனால் புதிய தலைமுறை எம்பக்ஸ், இருக்கையை மடக்குதல், குறுஞ்செய்தி மற்றும் இயங்கும் சாலைக்கு ஏற்ப சஸ்பென்ஷன் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி உள்ளிட்டவற்றுடன் 20 கூடுதல் வசதிகளை வழங்கும்.

ஓட்டுனர் அல்லாத முன்பக்க பயணிக்கு வழங்கப்பட்டுள்ள திரை ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படவில்லை எனில் இந்த திரை நட்சத்திரங்களை காட்டும் அனிமேட்டட் திரையாக மாறிவிடும்.

இவ்வாறான தொழிற்நுட்ப வசதிகளை தயாரிப்பு மாடல்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்குவதில் மெர்சிடிஸ் எப்போதுமே முன் உதாரணமாக விளங்கக்கூடிய நிறுவனம் ஆகும். இதனால் இத்தகைய மேம்படுத்தப்பட்ட எதிர்கால டேஸ்போர்டுகளை மற்ற நிறுவனங்களும் வரும் ஆண்டுகளில் வெளியிட்டால் ஆச்சிரியப்படுவதற்கு எதுவுமில்லை.