பயன்படுத்திய கார்களை விற்க ஒரே நாளில் 75 புதிய ஸ்டோர்கள் திறப்பு... முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் அதிரடி!

பயன்படுத்திய கார்களை விற்க ஒரே நாளில் 75 புதிய விற்பனையகங்களை நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று திறந்து வைத்துள்ளது. இதுகுறித்த மேலும் முக்கிய விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

பயன்படுத்திய கார்களை விற்க ஒரே நாளில் 75 புதிய ஸ்டோர்கள் திறப்பு... முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் அதிரடி... இதுக்கு இவ்ளோ முக்கியத்துவமா?

இந்தியாவில் புதிய கார்களுக்கு இணையாக பயன்படுத்திய கார்களுக்கும் மிக அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றது. ஆகையால் இந்திய சந்தையில் சிறிய நிறுவனங்கள் மட்டுமின்றி பெரு நிறுவனங்களும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றன. அந்தவகையில், நாட்டின் முன்னணி மற்றும் மாபெரும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Mahindra குழுமமும் இந்த வர்த்தகத்தில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றது.

பயன்படுத்திய கார்களை விற்க ஒரே நாளில் 75 புதிய ஸ்டோர்கள் திறப்பு... முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் அதிரடி... இதுக்கு இவ்ளோ முக்கியத்துவமா?

நிறுவனம், Mahindra First Choice Wheels Ltd எனும் பெயரில் பயன்படுத்திய (used car) கார்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதன் மூலம் தன்னுடை தயாரிப்புகளை மட்டுமின்றி பிற நிறுவனங்களின் தயாரிப்புகளையும் நிறுவனம் விற்பனைக்கு வழங்குகின்றது.

பயன்படுத்திய கார்களை விற்க ஒரே நாளில் 75 புதிய ஸ்டோர்கள் திறப்பு... முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் அதிரடி... இதுக்கு இவ்ளோ முக்கியத்துவமா?

இத்தகைய ஓர் விற்பனை வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியிலேயே Mahindra First Choice தற்போது மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது. இதனடிப்படையிலேயே தற்போது ஒரே நாளில் 75 புதிய விற்பனையகங்களை நிறுவனம் திறந்திருக்கின்றது. நாடு முழுவதும் இந்த ஸ்டோர்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.

பயன்படுத்திய கார்களை விற்க ஒரே நாளில் 75 புதிய ஸ்டோர்கள் திறப்பு... முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் அதிரடி... இதுக்கு இவ்ளோ முக்கியத்துவமா?

ஒரே நாளில் அதுவும் பயன்படுத்திய (செகண்டு ஹேண்டு) கார்களை விற்பனைச் செய்ய இத்தனை நிலையங்கள் திறக்கப்படுவது இதுவே முதல் முறையாக கூறப்படுகின்றது. ஆகையால், மஹிந்திரா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை இந்திய செகண்டு ஹேண்டு கார்கள் விற்பனை சந்தையில் ஓர் புதிய மைல் கல்லாக அமைந்துள்ளது.

பயன்படுத்திய கார்களை விற்க ஒரே நாளில் 75 புதிய ஸ்டோர்கள் திறப்பு... முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் அதிரடி... இதுக்கு இவ்ளோ முக்கியத்துவமா?

புதிய ஸ்டோர்கள் வாயிலாக அனைத்து சேவைகளும் தடையின்றி வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, விற்பனைக்கு பிந்தைய சேவையான சர்வீஸ், வாரண்டி மற்றும் ஆர்டிஓ வேலைகள் அனைத்தும் செய்யப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

பயன்படுத்திய கார்களை விற்க ஒரே நாளில் 75 புதிய ஸ்டோர்கள் திறப்பு... முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் அதிரடி... இதுக்கு இவ்ளோ முக்கியத்துவமா?

தொடர்ந்து, Mahindra First Choice தாங்கள் விற்பனைச் செய்யும் கார்களுக்கு உரிய தர சான்று போன்ற முக்கிய ஆவணங்களை வழங்கி வருகின்றது. இத்துடன், பயன்படுத்திய கார்களை வாங்கிய சுலப கடன் மற்றும் வட்டி திட்டங்களையும் நிறுவனம் வழங்கி வருகிறது.

பயன்படுத்திய கார்களை விற்க ஒரே நாளில் 75 புதிய ஸ்டோர்கள் திறப்பு... முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் அதிரடி... இதுக்கு இவ்ளோ முக்கியத்துவமா?

தற்போது புதியதாக 75 ஸ்டோர்கள் நாட்டில் திறக்கப்பட்டதை அடுத்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையகங்களின் 1,100 உயர்ந்திருக்கின்றது. ஆகையால், செகண்டு ஹேண்டு கார் சந்தையில் மஹிந்திரா நிறுவனம் மிக ஆழமாக காலூன்யிருப்பது மிக தெளிவாக தெரிகின்றது. தொடர்ந்து, பயன்படுத்திய கார்கள் விற்பனை சந்தையில் நிறுவனம் தலைவனை ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதையும் இந்நிகழ்வு சுட்டிக் காட்டுகின்றது.

பயன்படுத்திய கார்களை விற்க ஒரே நாளில் 75 புதிய ஸ்டோர்கள் திறப்பு... முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் அதிரடி... இதுக்கு இவ்ளோ முக்கியத்துவமா?

புதிய விற்பனையகங்கள் தொடங்கியது குறித்து Mahindra First Choice Wheels Ltd நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக இயக்குனர் அசுதோஷ் பாண்டே கூறியதாவது, "புதிதாக 75 விற்பனையகங்களைத் திறந்திருப்பது எங்களுக்கு ஒரு முக்கியமான நிகழ்வாகும். தொற்றுநோய் (கொரோனா வைரஸ்) பாதிப்பு இருக்கின்ற போதிலும், மக்கள் மத்தியில் பயன்படுத்திய வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது" என்றார்.

Most Read Articles

English summary
Mfcwl launches 75 new franchise stores across india in single day
Story first published: Saturday, August 28, 2021, 15:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X