Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 9 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 9 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனை எம்ஜி மோட்டார் நிறுவனம் அமைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பொது 60 kW சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனை எம்ஜி மோட்டார் மற்றும் டாடா பவர் ஆகிய நிறுவனங்கள் அமைத்துள்ளன. மங்களூர் நகரில், இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மங்களூர் நகரில் உள்ள எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் டீலர்ஷிப்பில் இந்த சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. 50 kW மற்றும் 60 kW டிசி சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்கள் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் எம்ஜி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக டாடா பவர் நிறுவனத்துடன் எம்ஜி நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே மங்களூர் நகரில் தற்போது சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஒட்டுமொத்தமாக இந்தியாவின் 10 நகரங்களில் 15 சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் அமைத்துள்ளது.

மும்பை, பெங்களூர், டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம், அகமதாபாத், லக்னோ, ஆக்ரா, நாக்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் எம்ஜி நிறுவனத்தின் சார்ஜிங் ஸ்டேஷன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், கோவையில் கடந்த டிசம்பர் மாத கடைசியில்தான் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனை எம்ஜி மோட்டார் நிறுவனம் திறந்து வைத்தது.

அதை தொடர்ந்து தற்போது மங்களூரில் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்புவதற்கு வெறும் 50 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் எலெக்ட்ரிக் கார் இதுதான். கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஒரு எலெக்ட்ரிக் காரை மட்டுமே எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனையில் வைத்துள்ளது.

ஆனால் வரும் காலங்களில் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 20 லட்ச ரூபாய்க்குள் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதை எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் உறுதி செய்தது.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை தொடர்ந்தும் இந்திய சந்தைக்கு ஏற்றவாறு பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப தற்போதே சார்ஜிங் ஸ்டேஷன் கட்டமைப்பு வசதிகளை எம்ஜி மோட்டார் நிறுவனம் வேகமாக மேம்படுத்தி வருகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர் என்பதை மறுக்க முடியாது. சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதிய அளவில் இல்லாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணம். ஆனால் வாடிக்கையாளர்களின் இந்த தயக்கத்தை தகர்க்கும் வகையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகள் சிறப்பானது.