மற்ற எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடுகையில் எம்ஜி அஸ்டர் எந்தெந்த விதத்தில் சிறந்தது? ஓர் விரிவான அலசல்

இந்திய சந்தையில் மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு ஓர் முடிவாக இன்று (அக்டோபர் 11) எம்ஜி அஸ்டர் அறிமுகமானது. ரூ.9.78 லட்சத்தில் இருந்து ரூ.16.78 லட்சம் வரையிலான விலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நடுத்தர-அளவு எம்ஜி எஸ்யூவி காருக்கு ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹூண்டாய் க்ரெட்டா, ஸ்கோடா குஷாக் மற்றும் கியா செல்டோஸ் உள்ளிட்டவை போட்டியாக உள்ளன. இவற்றிற்கு இடையேயான வித்தியாசங்களை பற்றி தான் இனி இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

மற்ற எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடுகையில் எம்ஜி அஸ்டர் எந்தெந்த விதத்தில் சிறந்தது? ஓர் விரிவான அலசல்

என்ஜின் தேர்வுகள்

புதிய எம்ஜி அஸ்டர் நடுத்தர-அளவு எஸ்யூவி காருக்கு இரு பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளன. இதில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் மற்றும் 1.3 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு என்பவை அடங்குகின்றன. டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல், 8-ஸ்பீடு சிவிடி மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் (1.3 லிட்டர் டர்போ மட்டும்) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

மற்ற எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடுகையில் எம்ஜி அஸ்டர் எந்தெந்த விதத்தில் சிறந்தது? ஓர் விரிவான அலசல்
Specs MG Astor Volkswagen Taigun Kia Seltos
Engine 1.5L Petrol / 1.3L Turbo Petrol 1.0L Turbo Petrol/1.5L Turbo Petrol 1.5L Petrol / 1.4L turbo petrol
Power 110bhp / 140bhp 115bhp / 150bhp 115bhp / 148bhp
Torque 144Nm / 220Nm 178Nm / 250Nm 144Nm / 250Nm
Gearbox 6MT & 8-speed CVT (1.5L) / 6-speed AT (1.3L) 6MT / 6-AT (1.0L ) 6MT / 7DSG (1.5L Turbo Petrol) 6MT / CVT(1.5L Petrol) / 6iMT (1.5L petrol) /7 DCT (1.4L Turbo Petrol)

இதில் டர்போசார்ஜ்டு வெர்சன் ஆனது ஹூண்டாய் க்ரெட்டாவின் 1.4 லிட்டர், செல்டோஸின் 1.4 லிட்டர், ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் மற்றும் ஸ்கோடா குஷாக் & ஃபோக்ஸ்வேகன் டைகுனின் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினிற்கு போட்டியாக விளங்கவுள்ளது. இவற்றுடன் 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் உள்பட மேனுவல் & ஆட்டோமேட்டிக் தேர்வுகளில் டிரான்ஸ்மிஷன் அமைப்பு கொடுக்கப்படுகின்றது.

மற்ற எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடுகையில் எம்ஜி அஸ்டர் எந்தெந்த விதத்தில் சிறந்தது? ஓர் விரிவான அலசல்

விலைகள்

ரூ.9.78 லட்சத்தில் இருந்து ரூ.16.78 லட்சம் வரையிலான விலைகள் புதிய எம்ஜி அஸ்டருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன். இது அறிமுக விலையே இன்னும் சில மாதங்கள் கழித்து சிறிது அதிகரிக்கப்படலாம். ஹூண்டாய் க்ரெட்டாவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.16 லட்சத்தில் இருந்து ரூ.17.87 லட்சம் வரையில் உள்ளன.

மற்ற எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடுகையில் எம்ஜி அஸ்டர் எந்தெந்த விதத்தில் சிறந்தது? ஓர் விரிவான அலசல்

கியா செல்டோஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.95 லட்சம் - ரூ.18.10 லட்சம் வரையிலும், கடந்த ஜூன் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட குஷாக்கின் விலைகள் ரூ.10.51 - 17.62 லட்சங்கள் வரையிலும் உள்ளன. ஸ்கோடாவின் கூட்டணி நிறுவனமான ஃபோக்ஸ்வேகனின் டைகுன் சமீபத்தில் தான் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலைகள் ரூ.10.49 லட்சத்தில் இருந்து ரூ.17.50 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மற்ற எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடுகையில் எம்ஜி அஸ்டர் எந்தெந்த விதத்தில் சிறந்தது? ஓர் விரிவான அலசல்

பரிமாண அளவுகள்

விற்பனையில் உள்ள மற்ற எஸ்யூவி கார்கள் உடன் ஒப்பிடுகையில், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எம்ஜி அஸ்டர் நீளத்திலும், அகலத்திலும் பெரியதாக உள்ளது. உயரத்தில் அஸ்டர் உள்பட மற்றவை அனைத்தை காட்டிலும் கியா செல்டோஸ் பெரியதாக உள்ளது.

Dimensions MG Astor Volkswagen Taigun Kia Seltos
Length 4323mm 4221mm 4315mm
Width 1809mm 1760mm 1800mm
Height 1653mm 1612mm 1790mm
Wheelbase 2580mm 2651mm 2610mm
மற்ற எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடுகையில் எம்ஜி அஸ்டர் எந்தெந்த விதத்தில் சிறந்தது? ஓர் விரிவான அலசல்

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய அஸ்டரில் 6 காற்றுப்பைகள், இபிடி & ப்ரேக் உதவியுடன் ஏபிஎஸ், இஎஸ்பி (எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்), டிராக்‌ஷன் கண்ட்ரோல், சரிவான பகுதியில் வாகனம் சறுக்குவதை தடுக்கும் கண்ட்ரோல், மலைப்பாதைகளில் பிரச்சனையின்றி இயங்குவதற்கான கண்ட்ரோல், அவசரகால நிறுத்து சிக்னல், ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான கொக்கி மற்றும் 4 சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

மற்ற எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடுகையில் எம்ஜி அஸ்டர் எந்தெந்த விதத்தில் சிறந்தது? ஓர் விரிவான அலசல்

இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் எஸ்யூவி காராக விளங்கும் ஹூண்டாய் க்ரெட்டாவில் இந்த பாதுகாப்பு வசதிகளுடன், கார் இயங்குவதை அறிந்து தானாக லாக் ஆகும் கதவு, கார் பாதை மாறுவதை எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவற்றை பெறுகிறது. சமீபத்திய அறிமுகமான ஃபோக்ஸ்வேகன் டைகுனில் கார் மோதலுக்கு உள்ளாகவுள்ளதை அறிந்து செயல்படும் ப்ரேக்குகள் மற்றும் தானிச்சையாக டிம் ஆகக்கூடிய IRVMகள் உள்பட ஏகப்பட்ட நவீன பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மற்ற எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடுகையில் எம்ஜி அஸ்டர் எந்தெந்த விதத்தில் சிறந்தது? ஓர் விரிவான அலசல்

தானியங்கி நிலை-2 (ADAS)

புதிய அஸ்டர் பிரிவிலேயே முதல் மாடலாக அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்பை (ADAS) பெற்றுவந்துள்ளது. இதன் மூலம் வாகனம் ஒரே பாதையை தொடர்வது, பயணத்திற்கும் முன் வாகனத்தில் ஏதாவது சரியில்லை என்றால் இயக்கவிடாமல் நிறுத்தும் அம்சம், ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியை காட்டும் தொழிற்நுட்பம், ரிவர்ஸில் செல்லும்போது குறுக்கே வாகனம் வருவதை எச்சரிக்கும் வசதி என ஏகப்பட்ட வசதிகளை ஓட்டுனர் பெறலாம்.

Most Read Articles

English summary
MG Astor SUV Launched At Rs 9.78 Lak – Creta Rival Explained With Important Points.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X