ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற கார்

மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் ரூ.9.78 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எம்ஜி எஸ்யூவி காரின் சிறப்பம்சங்கள், விலைகள் உள்ளிட்டவற்றை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற கார்

நடுத்தர-அளவு எஸ்யூவி காராக, அதிகளவில் விற்பனையாகி வரும் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள எம்ஜி அஸ்டர் இந்தியாவின் முதல் தனிப்பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் பிரிவின்-முதல் தானியங்கி (நிலை-2) தொழிற்நுட்பத்தை கொண்ட காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற கார்

மேலும், கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பம் மற்றும் அருமையான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய எம்ஜி அஸ்டர், பிரிமீயம் தரத்திலான மிட்-சைஸ் எஸ்யூவி காராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு விதமான வேரியண்ட்களில் இந்த புதிய எம்ஜி காரினை தேர்வு செய்யலாம்.

ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற கார்

இதில் அறிமுக ஆரம்ப விலையான ரூ.9.78 லட்சம் (எக்ஸ்-ஷோரும்) என்பது மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வை கொண்ட ஸ்டைல் வேரியண்ட்டின் விலையாகும். சூப்பர் வேரியண்ட்டின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.28 லட்சத்தில் இருந்தும், ஸ்மார்ட் வேரியண்ட்டின் விலை ரூ.12.98 லட்சத்தில் இருந்தும், டாப் ஷார்ப் வேரியண்ட்டின் ஆரம்ப விலை ரூ.13.98 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. அதிகப்பட்சமாக ரூ.16.78 லட்சம் வரையில் அஸ்டருக்கான எக்ஸ்-ஷோரூம் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Style Super Smart Sharp
VTi-Tech MT ₹9,78,000 ₹11,28,000 ₹12,98,000 ₹13,95,000
VTi-Tech CVT ₹12,68,000 ₹14,18,000 ₹14,98,000
220 Turbo AT ₹15,88,000 ₹16,78,000
ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற கார்

எம்ஜி அஸ்டருக்கு நிலையாகன் 3-3-3 தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் மூன்று வருட/ முடிவிலா கிமீ-கள், 3-வருட சாலையோர உதவிகள் மற்றும் 3 பணியாளர்-கட்டணமில்லா சேவைகள் அடங்குகின்றன. தனித்துவமான மை எம்ஜி ஷீல்ட் திட்டத்தின் மூலம், அஸ்டர் வாடிக்கையாளர்கள் தங்கள் உரிமையாளர் தொகுப்பை உத்தரவாத நீட்டிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களுடன் தேர்ந்தெடுத்து தனிப்பயனாக்க நெகிழ்வுத்தன்மையை பெற முடியும்.

ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற கார்

அஸ்டருக்கு உரிமையாளராகுவதற்கான தொகை ஒரு கிமீ-க்கு 47 பைசா மட்டுமே என்கிறது எம்ஜி நிறுவனம். மேலும், அஸ்டரை பிரிவிலேயே முதல்முறையாக 3-60 திட்டத்துடன் கொண்டுவந்துள்ளனர். இதன்படி அஸ்டர் உரிமையாளர்கள் தங்களது மாதத்தவணைகள் அனைத்தையும் செலுத்திய பின்னர், 3 வருடங்கள் கழித்து காரை டீலர்ஷிப்பிடமே விற்கும்போது காருக்கான விலையில் சுமார் 60% தொகையினை திரும்ப பெற முடியும். இதற்காக கார்தேக்கோ நிறுவனத்துடன் எம்ஜி மோட்டார் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது.

ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற கார்

அஸ்டரின் அறிமுகத்தின்போது பேசிய எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராஜீவ் சாபா, ஆளுமை, நடைமுறை மற்றும் தொழிற்நுட்பத்தால் நிறுவப்பட்ட பிராண்ட் பாரம்பரியத்தின் அடிப்படையில் எதிர்கால போக்குவரத்திற்கான ஒரு கட்டாய வெளிப்பாடாக அஸ்டர் கொண்டுவரப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட அம்சங்கள் மற்றும் இந்திய மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் இதுவரை பார்த்திராத தொழிற்நுட்பங்களுடன் அஸ்டர் இந்த பிரிவில் ஓர் புதிய அளவுகோலை அமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற கார்

கவர்ச்சிகரமான விலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அஸ்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மை எம்ஜி ஷீல்ட் திட்டம் முழு மன அமைதியை வழங்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும், ஒவ்வொரு முறையும் அற்புதமான அனுபவங்களை வாடிக்கையாளர்கள் மத்தியில் உருவாக்கும் எங்கள் தத்துவத்துடன் இந்த திட்டம் மிகவும் ஒத்துப்போகிறது என்றார்.

ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற கார்

எம்ஜி-யின் உணர்ச்சி இயக்கம் (Emotional Dynamism)-இன் உலகளாவிய வடிவமைப்பு தத்துவத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளதால், அஸ்டர் எஸ்யூவி பலத்தரப்பட்ட இந்திய வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அஸ்டரின் டாப் வேரியண்ட்களான ஸ்மார்ட் & ஷார்ப்பில் வழங்கப்பட்டுள்ள ஐ-ஸ்மார்ட் தொழிற்நுட்பமானது 80க்கும் அதிகமான இணைப்பு கார் வசதிகளை வழங்கக்கூடியது.

ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற கார்

தானியங்கி நிலை-2 வசதிகளுடன் அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்புகள் (ADAS) கூடுதல் தேர்வாக அஸ்டர் ஷார்ப் வேரியண்ட்டை 220டர்போ ஆட்டோமேட்டிக் மற்றும் விடிஐ-டெக் சிவிடி டிரான்ஸ்மிஷன் உடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்டரை டெஸ்ட் ட்ரைவ் பெறுவதையும், முன்பதிவு செய்வதையும் வாடிக்கையாளர்கள் எம்ஜியின் டீலர்ஷிப் மையங்களின் மூலமாகவோ அல்லது எம்ஜி மோட்டாரின் அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கமான www.mgmotor.co.in மூலமாகவோ மேற்கொள்ளலாம்.

ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற கார்

எம்ஜி அஸ்டருக்கான முன்பதிவுகள் வருகிற அக்டோபர் 21ஆம் தேதியில் இருந்து அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முன்பதிவு செய்தவர்களுக்கு காரை டெலிவிரி வழங்குவது அடுத்த நவம்பர் மாதத்தில் இருந்து துவங்கவுள்ளது. அஸ்டருக்கான அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் சில டீலர்ஷிப் மையங்களில் ரூ.50 ஆயிரம் என்கிற டோக்கன் தொகையுடன் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ரூ.9.78 லட்சத்தில் புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகம்!! இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற கார்

அஸ்டரின் மேற்கூறப்பட்ட நான்கு வேரியண்ட்களிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்பட உள்ளது. ஆனால் இதே என்ஜின் உடன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது ஆரம்ப நிலை ஸ்டைல் வேரியண்ட்டில் மட்டும் வழங்கப்பட போவதில்லை. மற்றொரு பெட்ரோல் என்ஜின் தேர்வான 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் டாப் ஸ்மார்ட் & ஷார்ப் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

Most Read Articles
English summary
MG Motor India launches Astor at starting price of Rs 9.78 lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X