தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... பட்டைய கிளப்பும் எம்ஜி அஸ்டர் கார்... ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் சமீபத்தில் அஸ்டர் எஸ்யூவி காரை வெளியிட்டது. இது இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்படவுள்ளது. எம்ஜி அஸ்டர் எஸ்யூவி வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்த எஸ்யூவி கார் தொழில்நுட்ப ரீதியில் தலைசிறந்து விளங்குகிறது. லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) வசதியை எம்ஜி அஸ்டர் பெற்றுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த எஸ்யூவி காரை பார்வையிடுவதற்காக எம்ஜி டீலர்ஷிப்பிற்கு நாங்கள் அழைக்கப்பட்டோம். இந்த காரை பார்த்தவுடன், இந்த காரில் வழங்கப்பட்டுள்ள வசதிகள் எங்களை வெகுவாக கவர்ந்தது. எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... பட்டைய கிளப்பும் எம்ஜி அஸ்டர் கார்... ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

டிசைன்

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் பிளாட்பார்ம் அடிப்படையில், எம்ஜி அஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 வண்ண தேர்வுகளில் இந்த கார் கிடைக்கும். இந்த காரின் முன் பகுதியில், எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனை எம்ஜி நிறுவனம் Hawk-eye எல்இடி ஹெட்லேம்ப்ஸ் என அழைக்கிறது.

இந்த காரின் டிசைனை பொறுத்தவரை க்ரில் அமைப்புதான் மிக முக்கிய பங்காற்றுகிறது. எம்ஜி அஸ்டர் காருக்கு கம்பீரமான தோற்றத்தை க்ரில் அமைப்பு வழங்குகிறது. மேலும் முன் பகுதியில் பார்க்கிங் கேமரா வசதியையும் இந்த கார் பெற்றுள்ளது. இது 360 டிகிரி கேமராவின் ஒரு பகுதியாக உள்ளது. அத்துடன் ஐஆர்விஎம்-மின் பின் பகுதியிலும் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது அடாஸ் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.

தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... பட்டைய கிளப்பும் எம்ஜி அஸ்டர் கார்... ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இந்த காரின் க்ரில் அமைப்பின் கீழ் பகுதியில் ரேடார் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஐஆர்விஎம்-மின் பின் பகுதியில் வழங்கப்பட்டுள்ள கேமராவுடன் இணைந்து செயல்படுகிறது. லேன் கீப் அஸிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆக்டிவ் பிரேக் அஸிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை இது உறுதிபடுத்துகிறது.

மேலும் இந்த காரில் ஸ்போர்ட்டியான பம்பர் வழங்கப்பட்டுள்ளது. இதில், பனி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பனி விளக்குகளுக்கு ஹாலோஜன் பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பனி விளக்குகள் கார்னரிங் லைட்களாகவும் செயல்படுகின்றன. பனி விளக்குகள் அறை கருப்பு நிறத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் வெளிப்புறத்தில் க்ரோம் வேலைப்பாடுகள் பெரிய அளவில் செய்யப்படவில்லை.

தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... பட்டைய கிளப்பும் எம்ஜி அஸ்டர் கார்... ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

எம்ஜி அஸ்டர் காரில், 5 ஸ்போக் ட்யூயல்-டோன் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 215/55 அளவுடைய கான்டினென்டல் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் 4 சக்கரங்களிலும் சிகப்பு நிற காலிபர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது காரை கூடுதல் கவர்ச்சியாகவும் காட்டுகிறது.

பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை நுட்பமான பாடி லைன்கள் மற்றும் மடிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் கருப்பு நிற ஓஆர்விஎம்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் ஒருங்கிணைந்த இன்டிகேட்டர்களில் ஹாலோஜன் பல்புகள்தான் வழங்கப்பட்டுள்ளது. இதில், எல்இடி பல்புகளை வழங்கியிருக்கலாம்.

தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... பட்டைய கிளப்பும் எம்ஜி அஸ்டர் கார்... ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இந்த காரின் பின் பகுதியில் எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் எம்ஜி லோகோவிற்கு அப்படியே கீழாக அஸ்டர் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பூட் லிட்டின் இருபுறமும் அடாஸ் மற்றும் இஸட்எஸ் பேட்ஜ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த காரின் பூட் ஸ்பேஸ் எவ்வளவு? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும் இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் அதே 470 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது மிகப்பெரிய பூட் ஸ்பேஸ் என்பதில் சந்தேகமில்லை. மேலும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமராவையும் இந்த கார் பெற்றுள்ளது. நெருக்கடியான இடங்களில் பார்க்கிங் செய்வதை இது எளிதாக்குகிறது.

தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... பட்டைய கிளப்பும் எம்ஜி அஸ்டர் கார்... ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

உட்புறம்

இந்த காரின் உள்ளே செல்லும்போது, விசாலமான கேபின் நம்மை வரவேற்கிறது. அத்துடன் பெரிய பனரோமிக் சன்ரூஃப்பும், கேபினை பெரிதாக காட்டுகிறது. இந்த காரின் இன்டீரியர் ட்யூயல்-டோன் (கருப்பு மற்றும் சிகப்பு) வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டேஷ்போர்டின் மைய பகுதியில், 10.1 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்பட்டுள்ளன். டச் ஸ்க்ரீன் பயன்படுத்துவதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் ரிவர்ஸ் அல்லது 360 டிகிரி கேமராவின் இமேஜ் குவாலிட்டி இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.

தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... பட்டைய கிளப்பும் எம்ஜி அஸ்டர் கார்... ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

அதே நேரத்தில் இரண்டாவது திரை 7 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகும். காரை பற்றிய பல்வேறு தகவல்களை இது வழங்குகிறது. இந்த காரில் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதன் இரண்டு பக்கமும் பல்வேறு கண்ட்ரோல்களுக்கான பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... பட்டைய கிளப்பும் எம்ஜி அஸ்டர் கார்... ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

எனினும் இந்த காரின் மூன்றாவது திரைதான் இன்டீரியரின் ஹைலைட். இது செயற்கை நுண்ணறிவு வசதிக்கான திரை ஆகும். செயற்கை நுண்ணறிவுக்கான குரலை, பத்ம ஸ்ரீ, கேல் ரத்னா விருது வென்றவருமான மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவருமான டாக்டர் தீபா மாலிக் வழங்கியுள்ளார்.

தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... பட்டைய கிளப்பும் எம்ஜி அஸ்டர் கார்... ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இதுதவிர ப்ளூடூத் தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் கீ வசதியையும் எம்ஜி மோட்டார் நிறுவனம் வழங்குகிறது. இந்த காரின் இருக்கைகள் சௌகரியமாக உள்ளன. ஆனால் இருக்கைகளை மேனுவலாக மட்டுமே அட்ஜெஸ்ட் செய்ய முடியும். எனினும் ஓட்டுனரின் இருக்கைக்கு உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டியரிங் வீல் அட்ஜெஸ்ட்மெண்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளதால், ஓட்டுனரால் சரியான டிரைவிங் பொஷிஷனை எளிதாக கண்டறிய முடியும். பின் இருக்கைகளும் சௌகரியமாக உள்ளன. இங்கே கப் ஹோல்டர்கள் உடன் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. பின் பகுதியில் ஏசி வெண்ட்களும், 2 யூஎஸ்பி சார்ஜிங் சாக்கெட்களும் கொடுகப்பட்டுள்ளன. இந்த காரில் ஒட்டுமொத்தமாக 5 சார்ஜிங் போர்ட்கள் இருக்கின்றன.

தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... பட்டைய கிளப்பும் எம்ஜி அஸ்டர் கார்... ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ்

அஸ்டர் எஸ்யூவி காரில் மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் ஒன்றாகும். மற்றொன்று 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் யூனிட் ஆகும். இதில், டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 138 பிஹெச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் அதிகபட்சமாக 108 பிஹெச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 8 ஸ்டெப் சிவிடி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... பட்டைய கிளப்பும் எம்ஜி அஸ்டர் கார்... ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

பாதுகாப்பு வசதிகள்

அடாஸ் வசதியை பெறும் எம்ஜி நிறுவனத்தின் இரண்டாவது மாடல் என்ற பெருமையை அஸ்டர் பெறுகிறது. இந்த காரில் லெவல் 2 அடாஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில், ஓட்டுனருக்கு தேவையான பல்வேறு வசதிகள் அடங்குகின்றன. இதில், அடாப்டிவ் க்ருஸ் கண்ட்ரோல், ஃபார்வார்டு கொலிசன் வார்னிங், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங், லேன் கீப் அஸிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங் உள்ளிட்டவை மிகவும் முக்கியமானவை.

லெவல்-2 அடாஸ் தவிர 27 ஸ்டாண்டர்டு வசதிகளை அஸ்டர் காரில் எம்ஜி நிறுவனம் வழங்குகிறது. இதுதவிர 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், இபிடி உடன் ஏபிஎஸ், ஹில் டெசண்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன.

தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவல்... பட்டைய கிளப்பும் எம்ஜி அஸ்டர் கார்... ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள அதிநவீன மிட்-சைஸ் எஸ்யூவி என எம்ஜி அஸ்டர் காரை கூறலாம். லெவல் 2 அடாஸ் வசதி இருப்பதால், இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள பாதுகாப்பான கார்களில் ஒன்று என்ற பெருமையையும் எம்ஜி அஸ்டர் பெறுகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுடன், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், நிஸான் கிக்ஸ் உள்ளிட்ட கார்களுடன் எம்ஜி அஸ்டர் போட்டியிடும்.

Most Read Articles

English summary
Mg astor suv first look review design engine safety features
Story first published: Sunday, September 19, 2021, 12:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X