க்ளோஸ்டர் எஸ்யூவி காரின் விலைகளை உயர்த்தியது எம்ஜி!! எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா?

எம்ஜி மோட்டார் கடைசியாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய கார்களுள் ஒன்றான க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

க்ளோஸ்டர் எஸ்யூவி காரின் விலைகளை உயர்த்தியது எம்ஜி!! எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா?

கணிசமான எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை பெற்றுவரும் எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

க்ளோஸ்டர் எஸ்யூவி காரின் விலைகளை உயர்த்தியது எம்ஜி!! எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா?

அறிமுகமான தேதியில் இந்த எம்ஜி ப்ரீமியம் எஸ்யூவி காரின் விலைகள் ரூ.28.98 லட்சத்தில் இருந்து ரூ.35.38 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டன. இந்த விலைகளில் முதல் 2,000 க்ளோஸடர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.

க்ளோஸ்டர் எஸ்யூவி காரின் விலைகளை உயர்த்தியது எம்ஜி!! எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா?

அதன்பின் இந்த விலைகள் அதே அக்டோபர் மாத இறுதியில் முதன்முறையாக ரூ.1 லட்சம் வரையில் அதிகரிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தற்போது கிட்டத்தட்ட 4-5 மாதங்கள் கழித்து க்ளோஸ்டரின் விலைகள் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளன.

க்ளோஸ்டர் எஸ்யூவி காரின் விலைகளை உயர்த்தியது எம்ஜி!! எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா?

எம்ஜி க்ளோஸ்டர் சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் 6 அல்லது 7-இருக்கை தேர்வுகளில் கிடைக்கும் ஷார்ப் & 6-இருக்கை தேர்வில் மட்டுமே கிடைக்கும் சேவி என டாப் வேரியண்ட்களின் விலைகள் மட்டுமே ரூ.80,000 உயர்த்தப்பட்டுள்ளன.

க்ளோஸ்டர் எஸ்யூவி காரின் விலைகளை உயர்த்தியது எம்ஜி!! எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா?
MG Gloster New Prices Old Prices
Super 7-Seater ₹29.98 Lakh ₹29.98 Lakh
Smart 6-Seater ₹31.98 Lakh ₹31.98 Lakh
Sharp 7-Seater ₹35.38 Lakh ₹34.68 Lakh
Sharp 6-Seater ₹35.38 Lakh ₹34.68 Lakh
Savvy 6-Seater ₹36.38 Lakh ₹36.08 Lakh

இதன் காரணமாக எம்ஜி க்ளோஸ்டரின் ஆரம்ப விலையில் (7-இருக்கை சூப்பர் வேரியண்ட்) எந்த மாற்றமும் இல்லை. அப்படியே ரூ.29.98 லட்சம் என்றே தொடர்கிறது. ஆனால் அதிகப்பட்ச எக்ஸ்ஷோரூம் விலை ரூ.36.08 லட்சத்தில் இருந்து ரூ.36.88 லட்சமாக அதிகரித்துள்ளது.

க்ளோஸ்டர் எஸ்யூவி காரின் விலைகளை உயர்த்தியது எம்ஜி!! எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா?

எம்ஜி மோட்டாரின் ஐ-ஸ்மார்ட் இணைப்பு தொழிற்நுட்பத்தை பெறுகின்ற க்ளோஸ்டர் தன்னுள் 70 விதமான அட்வான்ஸ்டு வசதிகளை கொண்டுள்ளது. இதில் அட்வான்ஸ்டு ஓட்டுனர் உதவி அமைப்பும் ஒன்றாகும்.

க்ளோஸ்டர் எஸ்யூவி காரின் விலைகளை உயர்த்தியது எம்ஜி!! எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா?

இந்த அட்வான்ஸ்டு ஓட்டுனர் உதவி அமைப்பின் மூலமாக அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் உதவி, முன்பக்கமாக வாகனம் மோதுவதை தடுக்கும் ப்ரேக்கிங் வசதி, ஆட்டோமேட்டிக் அவசரகால ப்ரேக், ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் அமைப்பு மற்றும் இயங்கும் பாதையில் இருந்து வாகனம் விலகி சென்றால் எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவற்றை இந்த எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

க்ளோஸ்டர் எஸ்யூவி காரின் விலைகளை உயர்த்தியது எம்ஜி!! எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா?

இவற்றுடன் பயணிகளின் பாதுகாப்பிற்கு 6 காற்றுப்பைகள், 360 கோண கேமிரா, இஎஸ்பி, ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், இபிடியுடன் ஏபிஎஸ், ஆட்டோ ஹோல்ட் உடன் எலக்ட்ரிக் பார்க்கிங் ப்ரேக் மற்றும் ஏற்றம் இறக்கங்களில் வாகனத்திற்கு தேவையான கண்ட்ரோல் முதலியவற்றையும் க்ளோஸ்டரில் எம்ஜி நிறுவனம் வழங்குகிறது.

க்ளோஸ்டர் எஸ்யூவி காரின் விலைகளை உயர்த்தியது எம்ஜி!! எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா?

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி கார் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு மற்றும் 2.0 லிட்டர் இரட்டை-டர்போ என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

Most Read Articles

English summary
MG Gloster SUV Gets Expensive, New Vs Old Prices.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X