எம்ஜி க்ளோஸ்டர் சாவி 7-இருக்கை கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.37.28 லட்சம்

எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய க்ளோஸ்டர் சாவி (Savvy- அறிவாளி) 7-இருக்கை காரை இந்தியாவில் ரூ.37.28 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எம்ஜி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்ஜி க்ளோஸ்டர் சாவி 7-இருக்கை கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.37.28 லட்சம்

ஹெக்டர் காரின் மூலமாக இந்திய சந்தையில் நுழைந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரீமியம் தரத்திலான எஸ்யூவி காராக க்ளோஸ்டரை அறிமுகப்படுத்தியது. அப்போது சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் & சாவி என்கிற நான்கு விதமான வேரியண்ட்களில் க்ளோஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.

எம்ஜி க்ளோஸ்டர் சாவி 7-இருக்கை கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.37.28 லட்சம்

இந்த நிலையில் தற்போது எம்ஜி நிறுவனம் க்ளோஸ்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளை எந்தவொரு கூடுதல் தொகையும் இன்றி அறிமுகப்படுத்தியுள்ளது.

Variant Turbo Diesel Twin Turbo Diesel
6 Seater 7 Seater 6 Seater 7 Seater
Super - ₹29,98,000 - -
Smart ₹32,38,000 - - -
Sharp - - ₹35,78,000 ₹35,78,000
Savvy - - ₹37,28,000 ₹37,28,000

புதிய 7-இருக்கை க்ளோஸ்டர் சாவி வேரியண்ட் வாடிக்கையாளர்களின் விமர்சனங்களினால் கொண்டுவரப்பட்டுள்ளதாக எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எம்ஜி க்ளோஸ்டர் சாவி 7-இருக்கை கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.37.28 லட்சம்

முன்பு க்ளோஸ்டரின் ஷார்ப் வேரியண்ட்டில் மட்டுமே இரு விதமான இருக்கை தேர்வுகள் வழங்கப்பட்டன. சாவி வேரியண்ட்டில் 6-இருக்கை தேர்வு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த வேரியண்ட்டில் கேப்டன் இருக்கைகள் இரண்டாவது இருக்கை வரிசையில் மத்தியில் வழங்கப்பட்டன.

எம்ஜி க்ளோஸ்டர் சாவி 7-இருக்கை கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.37.28 லட்சம்

ஆனால் புதிய 7-இருக்கை சாவி வேரியண்ட்டில் இரண்டாவது வரிசையில் மூன்று பேர் நன்கு சவுகரியமாக அமரும் வகையில் மேசை இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இதில் மத்திய இருக்கை பயன்படுத்தப்படாமல் இருந்தால், கூடுதல் சவுகரியத்திற்காக மத்திய மேசை இருக்கை வரிசையில் சுழற்றக்கூடிய ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.

எம்ஜி க்ளோஸ்டர் சாவி 7-இருக்கை கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.37.28 லட்சம்

இவ்வாறு இருக்கை அமைப்புகளை தவிர்த்து இந்த புதிய க்ளோஸ்டர் காரின் மற்ற அம்சங்கள் எதிலிலும் எந்த மாற்றமும் இல்லை. வசதிகள் மற்றும் தொழிற்நுட்பங்கள் உள்ளிட்டவை அனைத்தும் வழக்கமாக வழங்கப்படுபவையே புதிய 7-இருக்கை சாவி வேரியண்ட்டிலும் வழங்கப்பட்டுள்ளன.

எம்ஜி க்ளோஸ்டர் சாவி 7-இருக்கை கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.37.28 லட்சம்

க்ளோஸ்டரின் டாப் வேரியண்ட்டான சாவியில் 2.0 லிட்டர், இரட்டை-டர்போ என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 4000 ஆர்பிஎம்-இல் 215 பிஎச்பி மற்றும் 2400 ஆர்பிஎம்-இல் 480 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

எம்ஜி க்ளோஸ்டர் சாவி 7-இருக்கை கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.37.28 லட்சம்

இந்த ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனின் உதவியுடன் என்ஜினின் ஆற்றல் காரின் நான்கு சக்கரங்களுக்கும் வழங்கப்படுகிறது. ஈக்கோ, ஆட்டோ, ஸ்போர்ட் என்கிற நான்கு ட்ரைவ் மோட்களை கொண்ட க்ளோஸ்டர் சாவி காரில் பனி, சேறு, மணல் மற்றும் பாறை என்ற பாதை மோட்களும் கொடுக்கப்படுகின்றன.

எம்ஜி க்ளோஸ்டர் சாவி 7-இருக்கை கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.37.28 லட்சம்

பயணிகளின் பாதுகாப்பை பொறுத்தவரையில், எம்ஜி க்ளோஸ்டர் நிலை-1 தானியங்கி தொழிற்நுட்பத்தை பெற்ற இந்தியாவின் முதல் பிரீமியம் எஸ்யூவி காராக விளங்குகிறது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்புகள் க்ளோஸ்டரில் வழங்கப்படுகின்றன.

எம்ஜி க்ளோஸ்டர் சாவி 7-இருக்கை கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.37.28 லட்சம்

இவற்றுடன் க்ளோஸ்டரில் வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்களாவன,

  • தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல் (ACC)
  • இயங்கும் பாதையில் இருந்து வாகனம் விலகி செல்வதை எச்சரிக்கும் அமைப்பு (LDW)
  • ஓட்டுனரால் பார்க்க முடியாத காரை சுற்றிய பகுதியினை கண்காணிக்கும் வசதி
  • தானியங்கி பார்க்கிங் உதவி அமைப்பு
  • எம்ஜி க்ளோஸ்டர் சாவி 7-இருக்கை கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.37.28 லட்சம்
    • முன்பக்கமாக வாகனம் மோதலுக்கு உள்ளாகவுள்ளதை எச்சரிக்கும் அமைப்பு
    • தானியங்கி அவசரகால ப்ரேக்கிங்
    • இவற்றுடன் 6 காற்றுப்பைகள், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், மேடுகளில் சறுக்கிவிடாமல் தடுக்கும் கண்ட்ரோல், இபிடியுடன் ஏபிஎஸ், 360 கோண கேமிரா, ஐசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான இருக்கை ஹேங்கர் உள்ளிட்ட வழங்கமான பாதுகாப்பு அம்சங்களும் க்ளோஸ்டரில் நிரப்பப்படுகின்றன.

      எம்ஜி க்ளோஸ்டர் சாவி 7-இருக்கை கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.37.28 லட்சம்

      ப்ரீமியம் ரக எஸ்யூவி காரான க்ளோஸ்டரின் கேபினில் மிக முக்கிய அம்சமாக பெரிய அளவிலான பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. இதன் உடன் க்ளோஸ்டரின் கேபினில் கொடுக்கப்படும் மற்ற அம்சங்களாக,

      • 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்
      • எம்ஜி க்ளோஸ்டர் சாவி 7-இருக்கை கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.37.28 லட்சம்
        • 8-இன்ச் ஓட்டுனர் தகவல் திரை
        • எம்ஜி ஐ-ஸ்மார்ட் குரல் உதவி
        • ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே
        • அப்ளிகேஷன் மூலமாக செயல்படுத்தக்கூடிய ரிமோட் கண்ட்ரோல்கள்
        • மடக்கும் வசதியுடன் இருக்கைகள்
        • எம்ஜி க்ளோஸ்டர் சாவி 7-இருக்கை கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.37.28 லட்சம்
          • மஸாஜிங் செயல்பாட்டுடன் ஓட்டுனர் இருக்கை
          • 3-நிலை க்ளைமேட் கண்ட்ரோல்
          • வயர் இல்லா ஸ்மார்ட்போன் சார்ஜர்
          • 3வது இருக்கை வரிசைக்கும் கண்ட்ரோல்களுடன் ஏசி
          • உள்ளிட்டவை அடங்குகின்றன.

            எம்ஜி க்ளோஸ்டர் சாவி 7-இருக்கை கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.37.28 லட்சம்

            எம்ஜி மோட்டார் நிறுவனம் க்ளோஸ்டர் எஸ்யூவி காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 3-வருட/ 1 லட்ச கிமீ உத்தரவாதம், 3-வருட சாலையோர உதவிகள் மற்றும் 3-வருட இலவச பணியாளர்கள் சேவையை வழங்கி வருகிறது. க்ளோஸ்டருக்கு சுமார் 200 விதமான கூடுதல் ஆக்ஸஸரீ தொகுப்புகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
MG Motor launches the new Gloster Savvy 7-seater variant in India priced at Rs 37.28 lakh, ex-showroom (India). The top variant of the premium SUV is now available with 6 and 7 seating configurations at no extra cost.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X