எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி விபரம் வெளியானது

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி விபரம் வெளியானது

இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. ஆரம்பம் முதலே விற்பனையிலும் கலக்கி வருகிறது. ஆளுமையான டிசைன், சிறந்த எஞ்சின் தேர்வுகள், தொழில்நுட்ப வசதிகள் இந்த காருக்கு மிகச் சிறந்த மதிப்பை வழங்கி வருகிறது.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி விபரம் வெளியானது

இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் விதத்தில் இந்த எஸ்யூவியில் சில புதிய மாற்றங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி விபரம் வெளியானது

அண்மையில் ஸ்பை படங்கள் மூலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்திய இந்த புதிய மாடல் வரும் 7ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோகார் தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி விபரம் வெளியானது

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர்களை இணைப்பதற்கான சிவப்பு வண்ண அலங்கார இணைப்பு கருப்பு வண்ணமாக மாற்றப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி விபரம் வெளியானது

மேலும் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய 18 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சிறிய வேறுபாடுகளுடன் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வர இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி விபரம் வெளியானது

ஹெக்டர் ப்ளஸ் மாடலைப் போன்று புதிய ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. பீஜ் மற்றும் கருப்பு வண்ணத்தில் வர இருக்கிறது. அத்துடன் உட்புறத்தில் ஆட்டோ டிம்மிங் வசதி கொண்ட ரியர் வியூ மிரர் இடம்பெற்றுள்ளது. மற்றபடி, வேறு எந்த மாற்றங்களும் பெரிதாக இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி விபரம் வெளியானது

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சாதாரண மாடலில் 6 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வும், மைல்டு ஹைப்ரிட் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்படுகிறது.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி விபரம் வெளியானது

டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரை வழங்கும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி விபரம் வெளியானது

ஜனவரி முதல் கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக எம்ஜி மோட்டார் அறிவித்துள்ள நிலையில், முந்தைய மாடலைவிட இந்த புதிய ஹெக்டர் எஸ்யூவி சற்று கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு: மாதிரிக்காக தற்போதைய ஹெக்டர் எஸ்யூவி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
According to report, MG Hector facelift model to be launched in India on 7th January, 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X