எம்ஜி ஹெக்டரில் புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!! நாளை அறிமுகமாகிறது...

எம்ஜி ஹெக்டரின் புதிய பெட்ரோல்-சிவிடி மாடல் நாளை (பிப்ரவரி 11) இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எம்ஜி காரை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!! நாளை அறிமுகமாகிறது...

2021 எம்ஜி ஹெக்டர் காரில் புதியதாக வழங்கப்படவுள்ள இந்த ட்ரிம்மில் சிவிடி ட்ரான்ஸ்மிஷன் தேர்வு 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் கொடுக்கப்படவுள்ளது.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!! நாளை அறிமுகமாகிறது...

அதிகப்பட்சமாக 141 பிஎச்பி/ 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஹெக்டரில் தற்சமயம் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டிசிடி என்ற கியர்பாக்ஸ் தேர்வு உடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!! நாளை அறிமுகமாகிறது...

புதிய சிவிடி ட்ரான்ஸ்மிஷனில் மேனுவல் மற்றும் ஸ்போர்ட் என்ற இரு விதமான மோட்கள் வழங்கப்படவுள்ளன. ஹெக்டரை பற்றி கூற வேண்டுமென்றால், எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் 2019ல் கால்பதித்த போது அறிமுகப்படுத்திய முதல் கார் மாடலாகும்.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!! நாளை அறிமுகமாகிறது...

கடந்த 2021 ஜனவரி மாதத்தில் இதன் 2021 வெர்சன் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விரிவான முதல் விமர்சனத்தையும் கடந்த மாதத்தில் நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் பதிவிட்டிருந்தோம்.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!! நாளை அறிமுகமாகிறது...

பிப்ரவரி 11ஆம் தேதி அறிமுகமாகும் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் வழக்கமான 1.5 லிட்டர் ஹைப்ரீட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் என்ஜின் தேர்விலும் எம்ஜி ஹெக்டர் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!! நாளை அறிமுகமாகிறது...

6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படும் இந்த என்ஜின்களில் 1.5 லிட்டர் ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 141 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனையும், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 168 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவைகளாக வழங்கப்படுகின்றன.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!! நாளை அறிமுகமாகிறது...

2021 எம்ஜி ஹெக்டரின் புதிய பெட்ரோல்-சிவிடி ட்ரிம்மின் எக்ஸ்ஷோரூம் விலை எந்த அளவில் நிர்ணயிக்கப்படும் என்பது இப்போதைக்கு தெரியவில்லை. ஹெக்டருக்கு விற்பனையில் டாடா ஹெரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் டக்ஸன் கார்கள் போட்டியாக உள்ளன.

Most Read Articles

English summary
Launch of yet another addition to the HECTOR Family by MG Motor India on 11th February.
Story first published: Wednesday, February 10, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X