ஷோரூமை வந்தடைந்தது 7-இருக்கை எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்!! இந்த ஜனவரியில் அறிமுகம்

7 இருக்கைகளை கொண்ட எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் கார் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் கவர்ச்சிகரமான சிவப்பு நிறத்தில் காட்சி தந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஷோரூமை வந்தடைந்தது 7-இருக்கை எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்!! இந்த ஜனவரியில் அறிமுகம்

எம்ஜி மோட்டார் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹெக்டர் ப்ளஸ் வேரியண்ட்டின் 7-இருக்கை வெர்சனை விரைவில் இந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஷோரூமை வந்தடைந்தது 7-இருக்கை எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்!! இந்த ஜனவரியில் அறிமுகம்

இதற்கு முன்னதாக தற்போது இந்த கார் டீலர்ஷிப் ஷோரூமை வந்தடைந்துள்ளது. பாஜ் அரேபல் என்ற யுடியூப் சேனலின் மூலமாக கிடைத்துள்ள இது தொடர்பான வீடியோவில் காரின் தோற்றத்தை முழுமையாக பார்க்க முடிகிறது.

காரின் முன்பக்கம் டைமண்ட் பேட்டர்னில் அப்டேட் செய்யப்பட்ட க்ரில் அமைப்புடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. பம்பரின் கீழ்பகுதியில் தற்போதைய ஹெக்டர் ப்ளஸை போல் ஹெட்லைட் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

ஷோரூமை வந்தடைந்தது 7-இருக்கை எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்!! இந்த ஜனவரியில் அறிமுகம்

காரின் பக்கவாட்டில் 18 இன்ச்சில் 5-ஸ்போக் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் நமக்கு காட்சி தருகின்றன. மற்றப்படி பக்கவாட்டிலும் காரின் பின்பக்கத்திலும் பெரிய அளவில் எந்த மாற்றமும் தெரியவில்லை. பின்பக்கத்தில் கவனிக்கக்கூடிய அம்சம் என்று பார்த்தால், டெயில்லேம்ப்களை கருப்பு நிற ஸ்ட்ரிப் இணைக்கிறது.

ஷோரூமை வந்தடைந்தது 7-இருக்கை எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்!! இந்த ஜனவரியில் அறிமுகம்

உட்புறம் கருப்பு மற்றும் பழுப்பு என்ற இரட்டை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நம்மை கவரும் விதமாக இரண்டாவது இருக்கை வரிசைக்கும் மத்தியில் மேசை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஹெக்டர் ப்ளஸ் காரில் ஒட்டுனருடன் சேர்த்து 7 பயணிகள் தாராளமாக பயணிக்கலாம்.

ஷோரூமை வந்தடைந்தது 7-இருக்கை எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்!! இந்த ஜனவரியில் அறிமுகம்

மடக்கும் வசதி கொண்ட முன்பக்க இருக்கைகள், வயர் இல்லா ஸ்மார்ட்போன் சார்ஜிங் மற்றும் புதிய லெதர் உள்ளமைவுகள் இந்த 7-இருக்கை வெர்சனில் புதியதாக வழங்கப்பட்டுள்ள அம்சங்களாகும். இந்த குறிப்பிட்ட 7-இருக்கை வெர்சனில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

ஷோரூமை வந்தடைந்தது 7-இருக்கை எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்!! இந்த ஜனவரியில் அறிமுகம்

அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ-டீசல் என்ஜின் மட்டுமில்லாமல் இந்த 2021 மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினையும் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் எம்ஜி நிறுவனம் வழங்கவுள்ளது.

ஷோரூமை வந்தடைந்தது 7-இருக்கை எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்!! இந்த ஜனவரியில் அறிமுகம்

ஏற்கனவே கூறியதுபோல் அடுத்த சில வாரங்களில் அறிமுகமாகவுள்ள 2021 எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7-இருக்கை காரின் விலை தற்போதைய 6-இருக்கை காரை காட்டிலும் ரூ.30,000-ல் இருந்து ரூ.60,000 வரையில் அதிகமான விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம்.

Most Read Articles
English summary
MG Hector Plus seven-seat variant spotted at dealerships ahead of official launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X