எம்ஜி ஹெக்டர் சூப்பர் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய சாவி வேரியண்ட் 2022ல் அறிமுகம்?

எம்ஜி ஹெக்டர் மாடலின் சூப்பர் வேரியண்ட்டின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

எம்ஜி ஹெக்டர் சூப்பர் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய சாவி வேரியண்ட் 2022ல் அறிமுகம்?

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் ஹெக்டர் நடுத்தர-அளவு எஸ்யூவி காரை நம் நாட்டு சந்தையில் கடந்த 2019ல் களமிறக்கியது. இந்த காருக்கான ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் இந்த ஆண்டு துவக்கத்தில் வழங்கப்பட்ட நிலையில், புதிய ஷைன் ட்ரிம் ஆனது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

எம்ஜி ஹெக்டர் சூப்பர் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய சாவி வேரியண்ட் 2022ல் அறிமுகம்?

சூப்பர் & ஸ்மார்ட் ட்ரிம்களுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட இந்த ட்ரிம் நிலை, இந்தியாவில் ஹெக்டரின் 2ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஸ்டைல், சூப்பர், ஷைன், ஸ்மார்ட் & ஷார்ப் என்ற ஐந்து விதமான வேரியண்ட்களில் எம்ஜி ஹெக்டர் வழங்கப்பட்டது.

எம்ஜி ஹெக்டர் சூப்பர் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய சாவி வேரியண்ட் 2022ல் அறிமுகம்?

இந்த நிலையில் தற்போது புதிய மேம்பாட்டிற்காக எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டரின் சூப்பர் வேரியண்ட்டின் விற்பனையை நிறுத்தியுள்ளது. பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்ட ஹெக்டர் சூப்பர் வேரியண்ட்டில் டிரான்ஸ்மிஷன் தேர்வாக ஒரே ஒரு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எம்ஜி ஹெக்டர் சூப்பர் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய சாவி வேரியண்ட் 2022ல் அறிமுகம்?

தொழிற்நுட்ப வசதிகளாக இந்த ட்ரிம் நிலையில், 10.4 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எல்இடி ஹெட் & டெயில்லேம்ப்கள், சாவி இல்லா நுழைவு, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பின்பக்க ஏசி உள்பட, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் & கேமிரா, இரட்டை முன்பக்க காற்றுப்பைகள் மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ், இபிடி & இஎஸ்ஓ உள்ளிட்டவை அடங்கும் பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டன.

எம்ஜி ஹெக்டர் சூப்பர் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய சாவி வேரியண்ட் 2022ல் அறிமுகம்?

எம்ஜி ஹெக்டரின் இந்த ட்ரிம் நிலையின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.14.17 லட்சத்தில் இருந்து ரூ.16 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. ஹெக்டரின் லைன்-அப்பில் சூப்பர் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தத்தால், ஷைன் வேரியண்ட் இந்த எஸ்யூவி காரின் இரண்டாவது மலிவான வேரியண்ட்டாக இடம் பெற்றுள்ளது.

எம்ஜி ஹெக்டர் சூப்பர் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய சாவி வேரியண்ட் 2022ல் அறிமுகம்?

ஆனால் அதன் விலை, ஆரம்ப ஸ்டைல் வேரியண்ட்டை காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் அதிகமாகும். ஹெக்டர் ஷைன் வேரியண்ட்டில் கதவு கைப்பிடிகள், என்ஜினை ஸ்டார்ட் & ஸ்டாப் செய்வதற்கு அழுத்து பொத்தான், ஸ்மார்ட் சாவி வாயிலாக சாவி இல்லா நுழைவு மற்றும் எலக்ட்ரிக் பார்க்கிங் ப்ரேக் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

எம்ஜி ஹெக்டர் சூப்பர் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய சாவி வேரியண்ட் 2022ல் அறிமுகம்?

அத்துடன் இந்த ஹெக்டர் ட்ரிம் ஆனது டெலெஸ்கோபிக் ஸ்டேரிங் மற்றும் சிங்கிள் பேன் சன்ரூஃப் போன்றவையையும் ஏற்கிறது. இந்த கூடுதல் வசதிகளினால் தான் இந்த ட்ரிம் நிலையின் விலை ரூ.35,000-இல் இருந்து ரூ.50,000 வரையில் அதிகமாக உள்ளது. ஹெக்டரின் ஷைன் வேரியண்ட்டில் 1.5 லிட்டர், டர்போ பெட்ரோல் & 2.0 லிட்டர் டீசல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

எம்ஜி ஹெக்டர் சூப்பர் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய சாவி வேரியண்ட் 2022ல் அறிமுகம்?

இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 143 பிஎச்பி பவரையும், டீசல் என்ஜின் 170 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இதில் பெட்ரோல் என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வும், டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வும் வழங்கப்படுகின்றன.

எம்ஜி ஹெக்டர் சூப்பர் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய சாவி வேரியண்ட் 2022ல் அறிமுகம்?

தற்சமயம் இந்திய சந்தையில் ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், க்ளோஸ்டர் & இசட்.எஸ் இவி என்கிற நான்கு கார் மாடல்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில் எம்ஜியின் முதல் இந்திய மாடலாக விளங்கும் ஹெக்டர் எஸ்யூவி மற்ற போட்டி மாடல்களுக்கு மத்தியில் சிறப்பாகவே விற்பனையாகி கொண்டிருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் சூப்பர் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய சாவி வேரியண்ட் 2022ல் அறிமுகம்?

விற்பனையில் இந்த எம்ஜி காருக்கு ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் உள்ளிட்ட கார்கள் போட்டியாக விளங்குகின்றன. அடுத்ததாக இந்தியாவில் ஆஸ்டர் எஸ்யூவி என்ற விற்பனையில் உள்ள இசட்.எஸ் இவி மாடலின் பெட்ரோல் வெர்சனை விற்பனைக்கு கொண்டுவர எம்ஜி தயாராகி வருகிறது.

எம்ஜி ஹெக்டர் சூப்பர் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!! புதிய சாவி வேரியண்ட் 2022ல் அறிமுகம்?

இந்த எஸ்யூவி காரில் மிக முக்கிய அம்சமாக நிலை-2 ஓட்டுனர் உதவி அம்சங்கள் வழங்கப்பட உள்ளன. ஆனால் இந்த வசதியினை வெளிநாட்டு சந்தைகளில் ஹெக்டரும் ஏற்கனவே பெற்றுவிட்டது. இதனால் இந்தியாவில் உள்ள ஹெக்டரிலும் இந்த தானியங்கி வசதிகள் வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது (ஆஸ்டரின் அறிமுகத்திற்கு பிறகே). இதற்காக சாவி என்ற பெயரில் புதிய டாப் வேரியண்ட் ஹெக்டரில் கொண்டுவரப்பட உள்ளதாம்.

Most Read Articles

English summary
MG Hector Super Discontinued, New Savvy Variant Comes in 2022?
Story first published: Monday, September 27, 2021, 11:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X