அடேங்கப்பா... 5ஜி நெட்வொர்க் உடன் எலக்ட்ரிக் காரா!! உலகிலேயே முதல்முறையாக சீனாவில் அறிமுகமானது!

உலகின் முதல் 5ஜி இணைய வசதி கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவி காராக எம்ஜி மார்வல் எக்ஸ்-இன் வாரிசு கார் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய எம்ஜி காரை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அடேங்கப்பா... 5ஜி நெட்வொர்க் உடன் எலக்ட்ரிக் காரா!! உலகிலேயே முதல்முறையாக சீனாவில் அறிமுகமானது!

சீனாவின் எஸ்ஏஐசி க்ரூப் ஆனது எம்ஜி மற்றும் ரோவ் என்ற இரு பிராண்ட்களை கொண்டுள்ளது. இந்த பிராண்ட்களில் இருந்து கார்கள் சந்தையை பொறுத்து இரு விதமான லோகோகளில் வெளிவருகின்றன.

அடேங்கப்பா... 5ஜி நெட்வொர்க் உடன் எலக்ட்ரிக் காரா!! உலகிலேயே முதல்முறையாக சீனாவில் அறிமுகமானது!

இந்த வகையில் தற்போது உலகின் முதல் 5ஜி இணைப்பு, சி-வி2எக்ஸ் தகவல்தொடர்பு மற்றும் நிலை 3 தானியங்கி ட்ரைவிங் திறன்களை கொண்ட காராக ரோவ் மார்வல் ஆர் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா... 5ஜி நெட்வொர்க் உடன் எலக்ட்ரிக் காரா!! உலகிலேயே முதல்முறையாக சீனாவில் அறிமுகமானது!

ரோவ் மார்வல் ஆர் எலக்ட்ரிக் எஸ்யூவி காரானது ரோவ் மார்வல் எக்ஸ் (எம்ஜி மார்வல் எக்ஸ்)-இன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. 5ஜி இணையத்திற்காக இந்த எலக்ட்ரிக் காரில் ஹவாய் பலோங் 5000 மல்டி-மோட் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.

அடேங்கப்பா... 5ஜி நெட்வொர்க் உடன் எலக்ட்ரிக் காரா!! உலகிலேயே முதல்முறையாக சீனாவில் அறிமுகமானது!

இந்த சிப்செட், எல்லாவற்றிற்கும் வாகனம் (வி2எக்ஸ்) தகவல்தொடர்பை பெறுவதற்கு உதவியாக இருக்கும். வி2எக்ஸ் என்பது வி2என் (வாகனம் - இணையம்), வி2ஐ (வாகனம்- உள்கட்டமைப்பு), வி2பி (வாகனம் - பாதசாரி) மற்றும் வி2வி (வாகனம் - வாகனம்) உள்ளிட்ட தகவல்தொடர்புகளை உள்ளிடக்கியதாகும்.

அடேங்கப்பா... 5ஜி நெட்வொர்க் உடன் எலக்ட்ரிக் காரா!! உலகிலேயே முதல்முறையாக சீனாவில் அறிமுகமானது!

5ஜி சிப்செட்டின் மற்றொரு பயன் என்னவென்றால், குறைவான மின்சார ஆற்றலில் சற்று தாமதங்களுடன் வி2எக்ஸ்-ஐ பயணிகள் பயன்படுத்த இது அனுமதிக்கும். நிலை 3 தானியங்கி ட்ரைவிங் திறனிற்காக காரை சுற்றிலும் 28 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அடேங்கப்பா... 5ஜி நெட்வொர்க் உடன் எலக்ட்ரிக் காரா!! உலகிலேயே முதல்முறையாக சீனாவில் அறிமுகமானது!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ரோவ் மார்வல் ஆர் எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் 69.9 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முழு சார்ஜில் காரை 505கிமீ தூரத்திற்கு இயக்க செல்ல முடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடேங்கப்பா... 5ஜி நெட்வொர்க் உடன் எலக்ட்ரிக் காரா!! உலகிலேயே முதல்முறையாக சீனாவில் அறிமுகமானது!

ஸ்டாண்டர்ட் சார்ஜர் மூலம் இதன் பேட்டரியை சார்ஜ் ஏற்றினால் முழுவதுமாக சார்ஜ் ஆக கிட்டத்தட்ட 12 மணிநேரங்கள் ஆகும். அதுவே விரைவான சார்ஜரின் மூலம் 30-ல் இருந்து 80 சதவீதத்தை வெறும் 30 நிமிடங்களில் நிரப்பிவிடலாம். பேட்டரியின் ஆற்றலை கார் பெறுவதற்கு இரு மோட்டார்கள் காரின் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன.

அடேங்கப்பா... 5ஜி நெட்வொர்க் உடன் எலக்ட்ரிக் காரா!! உலகிலேயே முதல்முறையாக சீனாவில் அறிமுகமானது!

இவற்றின் உதவியுடன் அதிகப்பட்சமாக 184 பிஎச்பி மற்றும் 410 என்எம் டார்க் திறனை பெற முடியும். இந்த பேட்டரி உடன் எதிர்காலத்தில் இந்த எலக்ட்ரிக் காரில் 700கிமீ ரேஞ்சை வழங்கும் 93kWh பேட்டரி தொகுப்பையும் வழங்க எஸ்ஏஐசி க்ரூப் திட்டமிட்டுள்ளது.

அடேங்கப்பா... 5ஜி நெட்வொர்க் உடன் எலக்ட்ரிக் காரா!! உலகிலேயே முதல்முறையாக சீனாவில் அறிமுகமானது!

2021 மார்வல் ஆர் காரின் விலை குறைவான வேரியண்ட்டின் விலை 219,800 சீன யுவான் ரென்மின்பி (CNY) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.24.7 லட்சமாகும். அதுவே டாப் ப்ரோ வேரியண்ட்டின் விலை ரூ.27 லட்சம் என்ற அளவில் வரையறுக்கப்பட்டுள்ளது.

5ஜி இணைப்பு மற்றும் சி-வி2எக்ஸ் தகவல் தொடர்பு தொழிற்நுட்பங்கள் அடங்கிய ஆர் பைலட் தொகுப்பின் விலை 30,000 CNY-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ப்ரோ வேரியண்ட் உடன் மட்டுமே கூடுதல் தேர்வாக வாங்க முடியும். ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் இந்த தொகுப்பை பெற முடியாது.

Most Read Articles
English summary
MG Marvel X Successor Launched In China – As First 5G Electric SUV (MG Marvel R)
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X