சென்னை சாலையை அதிர வைத்த எம்ஜி கார்கள்... 42 கார்களின் பேரணிவகுப்பு எதற்காக தெரிஞ்சா நிச்சயம் வாழ்த்துவீங்க!!

சென்னையை சாலையை அதிர வைக்கும் வகையில் 42 எம்ஜி நிறுவன கார்கள் பேரணி வகுப்பு எடுத்துச் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சென்னை சாலையை அதிர வைத்த எம்ஜி கார்கள்... 42 கார்களின் பேரணிவகுப்பு எதற்காக தெரிஞ்சா நிச்சயம் வாழ்த்துவீங்க!!

எம்ஜி மோட்டார் நிறுவனம் மற்றும் எம்ஜி கார் க்ளப் மையம் (MG Car Club Chennai Centre) ஆகிய இரண்டும் இணைந்து தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஓர் தரமான சம்பவத்தை அரங்கேற்றியிருக்கின்றன. எம்ஜிசிசிசிசி இது எம்ஜி கார் பயனர்களால் உருவாக்கப்பட்ட க்ளப் ஆகும். இதன் 40க்கும் மேற்பட்ட உறுப்பினர்களே எம்ஜி நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து வாகன பேரணியை நடத்தியிருக்கின்றனர்.

சென்னை சாலையை அதிர வைத்த எம்ஜி கார்கள்... 42 கார்களின் பேரணிவகுப்பு எதற்காக தெரிஞ்சா நிச்சயம் வாழ்த்துவீங்க!!

ஒட்டுமொத்தமாக இந்த பேரணியில் 42 கார்கள் பங்கேற்றிருக்கின்றன. அவை அனைத்தும் எம்ஜி நிறுவன தயாரிப்புகள் மட்டுமே ஆகும். இவர்கள் அனைவரும் பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்காக நன்கொடை சேகரிக்கும் விதமாக இப்பேரணியைச் சென்னையில் நிகழ்த்தியிருக்கின்றனர். அகய் பவுண்டேஷன் முன்னெடுப்பின் பேரிலேயே இந்த எம்ஜி கார் பேரணி நடைபெற்றிருக்கின்றது.

சென்னை சாலையை அதிர வைத்த எம்ஜி கார்கள்... 42 கார்களின் பேரணிவகுப்பு எதற்காக தெரிஞ்சா நிச்சயம் வாழ்த்துவீங்க!!

சென்னை இசிஆர் சாலையில் தொடங்கி நகரத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளின் சாலையில் இந்த ஊர்வலம் நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது. எம்ஜி நிறுவனம் மற்றும் எம்ஜி கார் பயனர்களின் இந்த சமூக நல பணி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

சென்னை சாலையை அதிர வைத்த எம்ஜி கார்கள்... 42 கார்களின் பேரணிவகுப்பு எதற்காக தெரிஞ்சா நிச்சயம் வாழ்த்துவீங்க!!

எம்ஜி நிறுவனம் இதுபோன்று சமூக நல பணியில் ஈடுபடுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்பு தலைவிரித்தாடத் தொடங்கிய நாட்களில் பல்வேறு முக்கிய சேவைகளையும், உதவிகளையும் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் மேற்கொண்டது.

சென்னை சாலையை அதிர வைத்த எம்ஜி கார்கள்... 42 கார்களின் பேரணிவகுப்பு எதற்காக தெரிஞ்சா நிச்சயம் வாழ்த்துவீங்க!!

மிக சமீபத்தில்கூட நாக்பூரில் உள்ள நங்கியா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸாக மாற்றப்பட்ட ஐந்து ஹெக்டர் கார்களை நிறுவனம் வழங்கியது. இந்த வாகனத்தில் உயிர்காக்க உதவும் அத்தியாவசிய கருவிகள் உட்பட பல்வேறு முக்கிய கருவிகளையும் நிறுவனம் வழங்கியிருந்தது.

சென்னை சாலையை அதிர வைத்த எம்ஜி கார்கள்... 42 கார்களின் பேரணிவகுப்பு எதற்காக தெரிஞ்சா நிச்சயம் வாழ்த்துவீங்க!!

இதனால் எம்ஜி நிறுவனம் மேலும் இந்தியர்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்து விட்டது. சீன நிறுவனத்திற்கு சொந்தமான இந்நிறுவனம் இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்நிறுவனம் இந்தியாவில் ஹெக்டார், ஹெக்டர் ப்ளஸ் மற்றும் இசட்எஸ் இவி (மின்சார கார்) ஆகிய கார்களை விற்பனைச் செய்து வருகின்றது.

சென்னை சாலையை அதிர வைத்த எம்ஜி கார்கள்... 42 கார்களின் பேரணிவகுப்பு எதற்காக தெரிஞ்சா நிச்சயம் வாழ்த்துவீங்க!!

இந்த கார் மாடல்களைப் பயன்படுத்தி வரும் உரிமையாளர்களே சென்னையில் நடைபெற்ற கார் பேரணியில் கலந்துக் கொண்டனர். தலைநகர் சென்னையின் சாலைகளை அதிர வைக்கும் வகையில் இக்கார் பேரணி நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது.

Most Read Articles

English summary
MG Motor And MG Car Club Chennai Centre Recently Organised A Fund Raiser Drive In Chennai. Read In Tamil.
Story first published: Wednesday, March 10, 2021, 16:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X