டிசம்பரில் எம்ஜி மோட்டார் கார் விற்பனை அமோகம்... ஹெக்டருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது!

கடந்த மாதம் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கார் விற்பனை அமோகமாக அமைந்தது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

டிசம்பரில் எம்ஜி மோட்டார் கார் விற்பனை அமோகம்... ஹெக்டருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது!

கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்த எம்ஜி மோட்டார் நிறுவனம், துவக்கத்தில் இருந்தே இந்திய வாடிக்கையாளர்களை மனம் கவர்ந்த கார் பிராண்டாக மாறி இருக்கிறது. முதல் மாடலாக அந்நிறுவனம் வெளியிட்ட ஹெக்டர் எஸ்யூவி இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற அடைமொழியுடன் வந்ததால், விரைவாக கவனத்தை ஈர்த்தது.

டிசம்பரில் எம்ஜி மோட்டார் கார் விற்பனை அமோகம்... ஹெக்டருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது!

இதற்கு அடுத்து அந்நிறுவனம் கொண்டு வந்த இசட்எஸ் இவி, ஹெக்டர் ப்ளஸ், க்ளோஸ்டர் ஆகிய கார் மாடல்களுக்கும் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. தொடர்ந்து வர்த்தகத்தில் சிறப்பான வளர்ச்சியையும் பதிவுசெய்து வருகிறது.

டிசம்பரில் எம்ஜி மோட்டார் கார் விற்பனை அமோகம்... ஹெக்டருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது!

அந்த வகையில், கடந்த மாதம் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கார் விற்பனை அமோகமாக அமைந்தது. கடந்த மாதத்தில் அந்நிறுவனம் 4,010 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் விற்பனையை ஒப்பிடும்போது, இது 33 சதவீதம் கூடுதலாகும்.

டிசம்பரில் எம்ஜி மோட்டார் கார் விற்பனை அமோகம்... ஹெக்டருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது!

மேலும், கடந்த மாதத்தில் 3,430 ஹெக்டர் எஸ்யூவிகளை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது எம்ஜி மோட்டார் நிறுவனம். தவிரவும், இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் மற்றும் க்ளோஸ்ட்டர் எஸ்யூவிகளும் விற்பனையில் வலு சேர்த்துள்ளன.

டிசம்பரில் எம்ஜி மோட்டார் கார் விற்பனை அமோகம்... ஹெக்டருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது!

மேலும், கடந்த 2019ம் ஆண்டு விற்பனையை ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு விற்பனை 77 சதவீதம் கூடுதலானதாக எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது. இந்த விற்பனை வளர்ச்சி உற்சாகத்தை தந்துள்ளதால், அடுத்து புதிய கார் மாடல்களை இந்தியாவில் களமிறக்கும் முனைப்பில் உள்ளது.

டிசம்பரில் எம்ஜி மோட்டார் கார் விற்பனை அமோகம்... ஹெக்டருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது!

கடந்த மாத விற்பனை குறித்து எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனர் ராகேஷ் சிதனா கூறுகையில்,"வாடிக்கையாளர்கள் எம்ஜி நிறுவனத்தின் பிரிமீயம் தயாரிப்புகள் மீது அதிக ஆதரவு கொடுத்தது வருவதால், ஆண்டு இறுதியை சிறப்பான வர்த்தகத்துடன் நிறைவு செய்துள்ளோம். இதே விற்பனை வளர்ச்சியை ஜனவரியிலும், இந்த ஆண்டு தொடரும் எதிர்பார்க்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் எம்ஜி மோட்டார் கார் விற்பனை அமோகம்... ஹெக்டருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது!

கடந்த 2020ம் ஆண்டு 25,000 ஹெக்டர் எஸ்யூவிகளும், 1,243 இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், அறிமுகம் செய்யப்பட்டது முதல் 1,085 க்ளோஸ்ட்டர் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசம்பரில் எம்ஜி மோட்டார் கார் விற்பனை அமோகம்... ஹெக்டருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது!

இதுதவிர்த்து, எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு டிசம்பரில் மட்டும் 5,000 புக்கிங்குகளும், இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு 200 புக்கிங்குகளும் வந்துள்ளதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, அடுத்த வாரம் ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
MG Motor India has announced its sales report for the month of December 2020. The company has announced its highest-ever retail sales figures of 2020 with 4,010 units; marking a 33 per cent growth in yearly comparison.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X