Just In
- 1 hr ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 1 hr ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 2 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 3 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- News
இறக்கும் முன்னர் கொரோனா விழிப்புணர்வு.. இறந்த பின் விவேக் மக்களுக்கு சொல்லும் அறிவுரை "இதுதான்!"
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எம்ஜி கார்களின் விற்பனை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிப்பு!! இசட்எஸ் இவி-யின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டது
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பார்க்கும்போது, இந்த நிறுவனம் இந்திய சந்தையில் கார்களின் விற்பனையில் சுமார் 264 சதவீத வளர்ச்சியை 2020 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் கண்டுள்ளது.

கடந்த 2021 மார்ச் மாதத்தில் மொத்தம் 5,528 கார்களை இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை வெறும் 1,518 ஆகும்.

இதற்கு கொரோனா வைரஸ் பரவலும் ஒரு வகையில் காரணம் என்றாலும், அந்த சமயத்தில் ஹெக்டர், இசட்.எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி என்ற இரு கார்கள் மட்டுமே எம்ஜி பிராண்டில் இருந்து விற்பனையில் இருந்தன.

ஆனால் அதன்பின் விற்பனை கார்களின் எண்ணிக்கையை ஹெக்டர் ப்ளஸ், க்ளோஸ்டர் உள்ளிட்டவற்றுடன் இந்த நிறுவனம் அதிகரித்தது. ஹெட்க்டர் & இசட்.எஸ் இவி கார்களின் விற்பனையில் கடந்த மாதத்தில் எம்ஜி நிறுவனம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

2020 மார்ச் மாதம் மட்டுமில்லாமல் இதற்கு முந்தைய 2021 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எம்ஜி கார்களுடன் ஒப்பிடும்போதும் கடந்த மார்ச்சில் 1,199 எம்ஜி கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த வகையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனையில் 27 சதவீத முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எம்ஜி கார்களுக்கான காத்திருப்பு காலம் தற்சமயம் இரண்டு மாதங்களில் இருந்து மூன்று மாதங்கள் வரையில் உள்ளன.

ஒரே ஒரு எலக்ட்ரிக் காராக விற்பனை செய்யப்படும் இசட்.எஸ் இவி எஸ்யூவி காரை மைல்ஸ், ஜூம்கார் மற்றும் ஜப்பானை சேர்ந்த ஒரிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து மாதத்தவணை திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு எம்ஜி நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்த திட்டங்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், கடந்த ஆண்டு அறிமுகத்தில் இருந்து எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்த நிறுவனம் கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது.

இதுகுறித்து எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் சிதானா கருத்து தெரிவிக்கையில், 2021 மார்ச்சில் எட்டப்பட்ட மிக உயர்ந்த மாத விற்பனை எண்ணிக்கை எங்களது தயாரிப்புகளில் இதே சூழலை தொடர எங்களுக்கு மிகவும் உந்துதலாக அமைகிறது.

ஹெக்டர் எஸ்யூவி காருக்கு மட்டும் கடந்த மாதத்தில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவு ஏற்று கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலை உள்ளிட்ட சில காரணங்களினால் இந்த ஏப்ரலில் சில நாட்களை தயாரிப்பு பணிகள் இல்லாத நாட்களாக நாங்கள் எதிர்கொள்ளலாம் என தெரிவித்தார்.

குறைகடத்திகளுக்கு ஏற்பட்டுள்ள உலகளவிய தேவையால் மற்ற நிறுவனங்களை போல் சரியான நேரத்தில் கார்களை டெலிவிரி செய்ய முடியாமல் எம்ஜி நிறுவனமும் கடந்த மாதத்தில் சற்று கஷ்டப்பட்டுள்ளது. இந்த நிலை இல்லையென்றால், எம்ஜி நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை இன்னும் அதிகரித்து இருக்கும்.