கார் விற்பனையில் அபார வளர்ச்சியை பதிவு செய்தது எம்ஜி மோட்டார்!

கடந்த மாதம் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கார் விற்பனை புதிய உச்சத்தை எட்டி அசத்தி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

கார் விற்பனையில் அபார வளர்ச்சியை பதிவு செய்தது எம்ஜி மோட்டார்!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியர்களின் மனம் கவர்ந்த பிராண்டாக மாறி இருக்கிறது. அசத்தலான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகள், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மிக சரியான விலையில் கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற பிராண்டாக மாறி இருக்கிறது.

கார் விற்பனையில் அபார வளர்ச்சியை பதிவு செய்தது எம்ஜி மோட்டார்!

இதனால், எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் விற்பனையும் மிகச் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் விற்பனை புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது.

கார் விற்பனையில் அபார வளர்ச்சியை பதிவு செய்தது எம்ஜி மோட்டார்!

கடந்த மாதம் எம்ஜி மோட்டார் நிறுவனம் 5,528 கார்களை விற்பனை செய்துள்ளது. முதல்முறையாக எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் விற்பனை 5,500 யூனிட்டுகள் என்ர புதிய எண்ணிக்கையை தொட்டு அசத்தி இருக்கிறது. அதாவது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில், விற்பனை கடந்த மாதம் 264 சதவீதம் அதிகரித்துள்ளது.

கார் விற்பனையில் அபார வளர்ச்சியை பதிவு செய்தது எம்ஜி மோட்டார்!

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் கார் மாடல்களை அறிமுகம் செய்து வருவதுடன், வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் பை பேக் மற்றும் மாதச் சந்தாவில் பெறும் வாய்ப்பு தரும் திட்டங்களையும் வழங்கி வருகிறது. இதனால், எம்ஜி மோட்டார் விற்பனை சிறப்பாக அமைந்து வருகிறது.

கார் விற்பனையில் அபார வளர்ச்சியை பதிவு செய்தது எம்ஜி மோட்டார்!

கடந்த மாதத்தில் ஹெக்டர் எஸ்யூவிக்கு மட்டும் 6,000க்கும் மேற்பட்ட புக்கிங்குகளை மார்ச் மாதத்தில் பெற்றுள்ளதாக எம்ஜி மோட்டார் விற்பனைப் பிரிவு தலைமை அதிகாரி ராகேஷ் சிதனா தெரிவித்துள்ளார். க்ளோஸ்ட்டர் எஸ்யூவிக்கும் சிறப்பான வரவேற்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கார் விற்பனையில் அபார வளர்ச்சியை பதிவு செய்தது எம்ஜி மோட்டார்!

இந்த நிலையில், கார்களுக்கு தேவைப்படும் செமி கன்டக்டர் என்ற மின்னணு சாதன தட்டுப்பாட்டால் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கார் உற்பத்தி மந்தமடைந்துள்ளது. இந்த மாதத்தில் தனது ஹலோல் ஆலையில் சில நாட்கள் உற்பத்தி இல்லா தினம் கடைபிடிக்க எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது.

கார் விற்பனையில் அபார வளர்ச்சியை பதிவு செய்தது எம்ஜி மோட்டார்!

இதனால், அந்நிறுவனத்தின் ஹெக்டர் உள்ளிட்ட முன்னணி கார் மாடல்களுக்கான காத்திருப்பு காலம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 2 முதல் 3 மாதங்கள் வரை நீட்டிக்கிறது. எனவே, இந்த மாதத்தில் விற்பனையும் குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
MG Motor India has registered highest monthly sales ever in March, 2021.
Story first published: Friday, April 2, 2021, 13:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X