எம்ஜி ஹெக்டரில் புதிய ஷைன் வேரியண்ட் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.51 லட்சம், புதிய நிறத்தில் வாங்கலாம்

எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டரில் புதிய ஷைன் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.14.51 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய எம்ஜி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஷைன் வேரியண்ட் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.51 லட்சம், புதிய நிறத்தில் வாங்கலாம்

இந்தியாவில் முதன்முதலாக நுழைந்த போது எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்திய முதல் மாடல் ஹெக்டர் ஆகும். ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் & ஷார்ப் என்கிற 4 விதமான வேரியண்ட்களில் ஹெக்டர் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது புதியதாக ஷைன் என்கிற வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஷைன் வேரியண்ட் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.51 லட்சம், புதிய நிறத்தில் வாங்கலாம்

சூப்பர் மற்றும் ஸ்மார்ட் வேரியண்ட்களில் இடையே ஹெக்டரின் புதிய மத்திய வேரியண்ட்டாக கொண்டுவரப்பட்டுள்ள ஷைனையும் மற்ற வேரியண்ட்களை போல் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் தேர்வில் பெறலாம். ரூ.14.51 லட்சம் என்பது ஹெக்டர் ஷைன் மேனுவல் காரின் விலையாகும்.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஷைன் வேரியண்ட் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.51 லட்சம், புதிய நிறத்தில் வாங்கலாம்

ஆட்டோமேட்டிக் தேர்வில் புதிய ஷைன் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.15.71 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஷைன் மேனுவல் ட்ரிம்-ஐ பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் தேர்வுகளில் பெறலாம். ஆனால் ஷைன் ஆட்டோமேட்டிக் ட்ரிம்-ஐ பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே பெற முடியும்.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஷைன் வேரியண்ட் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.51 லட்சம், புதிய நிறத்தில் வாங்கலாம்

பெட்ரோல்-ஹைப்ரீட் தேர்வை இந்த புதிய வேரியண்ட்டிற்கு எம்ஜி நிறுவனம் வழங்கவில்லை. பெட்ரோல் ஹைப்ரீட் தேர்வு ஹெக்டரின் சூப்பர் மேனுவல், ஸ்மார்ட் மேனுவல் மற்றும் ஷார்ப் மேனுவல் என்ற மேனுவல் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஷைன் வேரியண்ட் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.51 லட்சம், புதிய நிறத்தில் வாங்கலாம்

மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படுகின்ற இந்த பெட்ரோல் ஹைப்ரீட் தேர்வில் மேனுவல் டிரான்ஸ்மிஷனை மட்டுமே பெற முடியும். ஆனால் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல், 7-ஸ்பீடு டிசிடி, சிவிடி என ஏகப்பட்ட டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை பெறலாம்.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஷைன் வேரியண்ட் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.51 லட்சம், புதிய நிறத்தில் வாங்கலாம்

மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பத்தை பெற்றாலும், டர்போ-பெட்ரோல் என்ஜினின் ஆற்றலில் தான் ஹெக்டரின் ஹைப்ரீட் ட்ரிம்கள் இயங்குகின்றன. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினானது அதிகப்பட்சமாக 5,000 ஆர்பிஎம்-இல் 142 பிஎச்பி மற்றும் 3,600 ஆர்பிஎம்-இல் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஷைன் வேரியண்ட் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.51 லட்சம், புதிய நிறத்தில் வாங்கலாம்

2.0 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் மூலம் 3,750 ஆர்பிஎம்-இல் 168 பிஎச்பி மற்றும் 2,500 ஆர்பிஎம்-இல் 350 என்எம் டார்க் திறன் வரையில் பெற முடியும். டீசல் என்ஜினுடனும் எந்தவொரு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வும் வழங்கப்படுவதில்லை. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்படுகின்றன.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஷைன் வேரியண்ட் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.51 லட்சம், புதிய நிறத்தில் வாங்கலாம்

புதிய ஹெக்டருக்கான முன்பதிவுகள் இன்று (ஆகஸ்ட் 12) முதல் துவங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த புதிய வேரியண்ட்டை முன்பதிவு செய்பவர்களுக்கு வாகனம் டெலிவிரி செய்யப்படுவது இன்னும் சில வாரங்களில் துவங்கப்படவுள்ளன. வாடிக்கையாளர்கள் ஹெக்டரின் இந்த புதிய வேரியண்ட்டை புதிய ஹவானா க்ரே என்ற ஒற்றை நிறத்திலும் வாங்கலாம்.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஷைன் வேரியண்ட் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.51 லட்சம், புதிய நிறத்தில் வாங்கலாம்

இந்த புதிய பெயிண்ட் தேர்வை தவிர்த்து ஹெக்டரின் புதிய ஷைன் வேரியண்ட்டிற்கும், மற்ற மிட்-வேரியண்ட்களுக்கும் இடையில் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. இதனால் க்ரோம் பதிக்கப்பட்ட க்ரில், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ஃபாக்ஸ் சறுக்கு தட்டுகள் போன்றவற்றை தான் ஹெக்டர் ஷைன் மாடலும் பெற்றுள்ளது.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஷைன் வேரியண்ட் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.51 லட்சம், புதிய நிறத்தில் வாங்கலாம்

இதேபோல் எல்இடி டெயில்லேம்ப்கள், ஃபாக் விளக்குகள், 17-இன்ச் அலாய் சக்கரங்கள், பாடி க்ளாடிங், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா, மேற்கூரை தண்டவாளங்கள் போன்றவையும் ஹெக்டரின் ஷைனில் தொடரப்பட்டுள்ளன.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஷைன் வேரியண்ட் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.51 லட்சம், புதிய நிறத்தில் வாங்கலாம்

எம்ஜி ஹெக்டரின் உட்புற கேபினில் டேஸ்போர்டில் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய 10.4 இன்ச்சில் பெரிய அளவில் இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் செமி-டிஜிட்டல் செட்-அப்பில் 3.5 இன்ச் திரை உடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

எம்ஜி ஹெக்டரில் புதிய ஷைன் வேரியண்ட் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.51 லட்சம், புதிய நிறத்தில் வாங்கலாம்

ஹெக்டரில் வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்களாக,

 • எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம்
 • டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம்
 • ஹில் ஹோல்ட் கண்ட்ரோல்
 • இபிடியுடன் ஏபிஎஸ்+ ப்ரேக் உதவி
 • ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா
 • கார்னரிங் முன்பக்க ஃபாக் விளக்குகள்
 • பின்பக்க பார்க்கிங் சென்சார்கள்
 • ஐசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான இருக்கை கொக்கி
 • உள்ளிட்டவை அடங்குகின்றன.

  எம்ஜி ஹெக்டரில் புதிய ஷைன் வேரியண்ட் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.51 லட்சம், புதிய நிறத்தில் வாங்கலாம்

  ஹெக்டர் அதன் பிரிவிலேயே குறைந்த எரிபொருள் செலவை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. எம்ஜி நிறுவனம் ஹெக்டர் ஷைனிற்கு 5 வருட/ 1.5 லட்ச கிமீ உத்தரவாதம், 5-வருட சாலையோர உதவி மற்றும் 5 பணியாளர் இலவச சேவைகள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளது.

Most Read Articles

English summary
MG Hector Shine Variant Launched In India At Rs 14.51 Lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X