‘குட்டி ரோபோட்’!! ஆஸ்டர் எஸ்யூவி காரில் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் அசத்தலான வசதி!

க்ரெட்டாவிற்கு போட்டியாக எம்ஜி மோட்டார் நிறுவனம் கொண்டுவர உள்ள ஆஸ்டர் எஸ்யூவி காரில் அறிமுகப்படுத்தப்பட உள்ள செயற்கை நுண்ணறிவு வசதியை பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

‘குட்டி ரோபோட்’!! ஆஸ்டர் எஸ்யூவி காரில் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் அசத்தலான வசதி!

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் புதிய ஆஸ்டர் எஸ்யூவி காரின் அறிமுகத்தில் தீவிரமாக உள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் போன்ற தற்சமயம் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகி கொண்டிருக்கும் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்படும் எம்ஜி ஆஸ்டரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைகள் வருகிற செப்டம்பரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

‘குட்டி ரோபோட்’!! ஆஸ்டர் எஸ்யூவி காரில் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் அசத்தலான வசதி!

இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 18) விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த எஸ்யூவி காரில் வழங்கப்படவுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு உதவி வசதி மற்றும் தானியங்கி நிலை-2 ஓட்டுனர் உதவி அமைப்புகளை எம்ஜி மோட்டார் நிறுவனம் இணையம் வழியாக வெளியீடு செய்துள்ளது.

‘குட்டி ரோபோட்’!! ஆஸ்டர் எஸ்யூவி காரில் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் அசத்தலான வசதி!

எம்ஜி நிறுவனம் பிரத்யேகமாக உருவாகியுள்ள இவை இரண்டும் எஸ்யூவி பிரிவிற்கு புதியவை ஆகும். அதுமட்டுமின்றி, தனிப்பயன்பாட்டு AI உதவியை பெறும் முதல் உலகளாவிய எம்ஜி மாடலாக ஆஸ்டர் விளங்கவுள்ளது. இந்த தொழிற்நுட்பத்தினை அமெரிக்காவை சேர்ந்த ‘ஸ்டார் டிசைன்' என்கிற நிறுவனம் வடிவமைத்துள்ளது.

‘குட்டி ரோபோட்’!! ஆஸ்டர் எஸ்யூவி காரில் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் அசத்தலான வசதி!

படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று காரின் உட்புற டேஸ்போர்டின் மீது சிறிய அளவிலான ரோபோட் போன்று இந்த செயற்கை நுண்ணறிவு உதவி வசதி வழங்கப்பட உள்ளது. ஐ-ஸ்மார்ட் ஹப் மூலமாக இயங்கும் இந்த AI தொழிற்நுட்பத்திற்கு மனிதனை போன்று சில உணர்வுகள் & குரல்கள் வழங்கப்பட்டுள்ளதாக எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘குட்டி ரோபோட்’!! ஆஸ்டர் எஸ்யூவி காரில் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் அசத்தலான வசதி!

இது, கார் மட்டுமின்றி எந்தவொரு விஷயத்தை பற்றியும் விக்கிபீடியாவின் மூலம் பதிலளிக்கக்கூடியது. இவ்வளவு ஏன், கூட பேச ஆள் இல்லாத போது ஒரு நல்ல நண்பனாகவும் இது செயல்படக்கூடியது. ஆதலால், கார் ஒரு வாகனம் என்பதை தாண்டி பல்வேறு விஷயங்களுக்கான ஒரு ப்ளாட்ஃபாரமாகவும் மாறும் என எம்ஜி தெரிவித்துள்ளது.

‘குட்டி ரோபோட்’!! ஆஸ்டர் எஸ்யூவி காரில் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் அசத்தலான வசதி!

பிளாக்செயின், இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழிற்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் கார்-ஒரு-ப்ளாட்ஃபாரம் என்ற கான்செப்ட்டை பெறும் முதல் கார் ஆஸ்டர் ஆகும். இதனால் பயணம் மட்டுமின்றி வெவ்வேறான தனிப்பயன்பாட்டு சேவைகளையும் வாடிக்கையாளர்கள் காரிலேயே பெற முடியும்.

‘குட்டி ரோபோட்’!! ஆஸ்டர் எஸ்யூவி காரில் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் அசத்தலான வசதி!

அத்துடன் மேப் மை இந்தியா உடன் வரைப்படங்கள் & நாவிகேஷன், ஜியோ இணைப்பு போன்றவற்றையும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் கொண்டுள்ளது. இதனுடன் ஆஸ்டர் எஸ்யூவி கார் பெற்றுவரும் மற்றொரு முக்கிய சிறப்பம்சம், நிலை-2 தானியங்கி ஓட்டுனர் உதவி அமைப்புகளாகும்.

‘குட்டி ரோபோட்’!! ஆஸ்டர் எஸ்யூவி காரில் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் அசத்தலான வசதி!

மிட்-ரேஞ்ச் ரேடார்கள் & கேமிராக்கள் மூலமாக செயல்படும் இந்த அமைப்புகளில் தகவமைத்து கொள்ளக்கூடிய அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், முன்பக்கமாக வாகனம் மோதலுக்கு உள்ளாகுவதை எச்சரிக்கும் வசதி, அவசரகாலத்தில் தன்னிச்சையாக இயங்கும் ப்ரேக், சாலையில் வாகனம் ஒரே பாதையில் தொடர்ந்து இயங்குவதற்கு உதவி செய்யும் வசதி உள்ளிட்டவை அடங்குகின்றன.

‘குட்டி ரோபோட்’!! ஆஸ்டர் எஸ்யூவி காரில் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் அசத்தலான வசதி!

இவை மட்டுமின்றி, ஸ்டார்ட் செய்தவுடன் கார் பாதையில் இருந்து விலகி சென்றால் எச்சரிக்கும் & தடுக்கும் வசதிகள், புத்திசாலித்தனமான ஹெட்லேம்ப் கண்ட்ரோல், ரிவர்ஸில் செல்வதற்கு தேவையான உதவி மற்றும் ஒரே வேகத்தை கடைப்பிடிப்பதற்கான உதவி போன்றவற்றையும் தானியங்கி நிலை-2 ஓட்டுனர் உதவி அமைப்புகளின் வாயிலாக பெறலாம்.

‘குட்டி ரோபோட்’!! ஆஸ்டர் எஸ்யூவி காரில் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் அசத்தலான வசதி!

எம்ஜி க்ளோஸ்டர் பிரீமியம் எஸ்யூவி கார் இத்தகைய அமைப்புகளை ஒன்றாம் நிலையில் கொண்டுள்ளது. ஆனால் ஆஸ்டருக்கு இரண்டாம் நிலையே வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய நடுத்தர-அளவு எஸ்யூவி பிரிவில் இந்த தானியங்கி ஓட்டுனர் உதவி வசதிகள் முதல்முறையாக ஆஸ்டரின் மூலமாகவே அறிமுகமாகவுள்ளன.

‘குட்டி ரோபோட்’!! ஆஸ்டர் எஸ்யூவி காரில் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் அசத்தலான வசதி!

இவற்றுடன், ஆஸ்டரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆனது ஜியோ இ-சிம் மூலமாக இயங்கக்கூடிய இன்-கார் இணைப்பு வசதி உடன் வழங்கப்பட உள்ளதாக எம்ஜி நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் எலக்ட்ரிக் எஸ்யூவி காராக விற்பனையில் உள்ள இசட்.எஸ் மாடலின் பெட்ரோல்-ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் தான் ஆஸ்டர் ஆகும்.

‘குட்டி ரோபோட்’!! ஆஸ்டர் எஸ்யூவி காரில் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் அசத்தலான வசதி!

இசட்.எஸ் மாடலின் பெட்ரோல் வெர்சன் ஏற்கனவே ஐரோப்பாவில் விற்பனையில் உள்ளது. இருப்பினும் ஆஸ்டர் இந்திய வாடிக்கையாளர்களின் இரசனைக்கேற்ப சில தோற்ற வேறுபாடுகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த எம்ஜி எஸ்யூவி காரின் விலையினை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.16 லட்சம் வரையில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

English summary
MG Astor Unveiled With Drive AI.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X