நாட்டின் மலிவு விலை மின்சார கார் டாடா நெக்ஸானுக்கு போட்டி தயாராகிறது! புதிய மின்சார காரை களமிறக்கும் எம்ஜி?

நாட்டின் மலிவு விலை மின்சார காரான டாடா நெக்ஸானுக்கு போட்டியாக எம்ஜி நிறுவனம் குறைந்த விலை எலெக்ட்ரிக் காரை களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

நாட்டின் மலிவு விலை மின்சார கார் டாடா நெக்ஸானுக்கு போட்டி தயாராகிறது! புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்க தயாராகும் எம்ஜி!

இந்தியாவின் மலிவு விலை மின்சார காராக டாடா நிறுவனத்தின் நெக்ஸான் இவி இருக்கின்றது. ரூ. 13.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலையிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதை விட குறைந்த விலை மின்சார காரை களமிறக்க ஓர் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் மலிவு விலை மின்சார கார் டாடா நெக்ஸானுக்கு போட்டி தயாராகிறது! புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்க தயாராகும் எம்ஜி!

சீன நிறுவனம் கையகப்படுத்தியிருக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி நிறுவனமே டாடா நெக்ஸான் இவிக்கு போட்டிாக குறைந்த விலை எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கும் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இது நாட்டின் மிக மலிவு விலைக் கொண்ட காராக இருக்கும் என தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் மலிவு விலை மின்சார கார் டாடா நெக்ஸானுக்கு போட்டி தயாராகிறது! புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்க தயாராகும் எம்ஜி!

எம்ஜி நிறுவனம் ஏற்கனவே எம்ஜி இசட்எஸ் இவி எனும் பிரீமியம் தர மின்சார எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதற்கு தற்போது இந்தியாவில் மிக கணிசமான வரவேற்பே நிலவி வருகின்றது. இதைக் காட்டிலும் டாடா நெக்ஸான் இவி மிகக் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் என்பதனால் இதற்கு சற்று வரவேற்பு அதிகம்.

நாட்டின் மலிவு விலை மின்சார கார் டாடா நெக்ஸானுக்கு போட்டி தயாராகிறது! புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்க தயாராகும் எம்ஜி!

இந்த நிலையை மாற்றியமைப்பதற்காகவே எம்ஜி நிறுவனம் நெக்ஸான் இவிக்கு இணையான குறைந்த விலை காரை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனம் தெரிவித்திருப்பதாவது, "நாட்டில் இன்னும் சில மின்சார வாகனங்களைக் களமிறக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

நாட்டின் மலிவு விலை மின்சார கார் டாடா நெக்ஸானுக்கு போட்டி தயாராகிறது! புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்க தயாராகும் எம்ஜி!

ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான விலையுள்ள எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் சில முக்கிய கூறுகளின் பற்றாக்குறை தற்போது தலைவிரித்தாடி வருகின்றது. ஆகையால், இன்னும் இரண்டு வருடங்கள் இந்த குறைந்த விலை மின்சார கார் அறிமுகமாக எடுத்துக் கொள்ளும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மலிவு விலை மின்சார கார் டாடா நெக்ஸானுக்கு போட்டி தயாராகிறது! புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்க தயாராகும் எம்ஜி!

தற்போது நாட்டில் இன்னும் மின்சார வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிகக் குறைவாகவே தென்படுகின்றன. ஆனால், இதனை போக்கும் பணியில் அரசும், தனியார் நிறுவனங்கல் ஈடுபட்டு வருகின்றன. ஆகையால், மிக விரைவில் சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கைக் கணிசமாக உயரும் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.

நாட்டின் மலிவு விலை மின்சார கார் டாடா நெக்ஸானுக்கு போட்டி தயாராகிறது! புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்க தயாராகும் எம்ஜி!

இந்த நிலையிலேயே குறைந்த விலை மின்சார கார் மாடலைக் களமிறக்க இருப்பதாக எம்ஜி அறிவித்திருக்கின்றது. ஒன்றிய அரசு மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மானியம், வரி குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை அறிவித்து வருவதும் குறிப்பிடத்தகுந்தது.

நாட்டின் மலிவு விலை மின்சார கார் டாடா நெக்ஸானுக்கு போட்டி தயாராகிறது! புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்க தயாராகும் எம்ஜி!

நிறுவனத்தின் முதல் மின்சார காரான எம்ஜி இசட்எஸ் இவி அறிமுகத்தில் இருந்த தற்போது வரை 3 ஆயிரம் யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 20.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், 44.5kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் மலிவு விலை மின்சார கார் டாடா நெக்ஸானுக்கு போட்டி தயாராகிறது! புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்க தயாராகும் எம்ஜி!

இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 419 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும். இந்த காரில் மூன்று-ஃபேஸ் நிரந்தர காந்தக சிங்க்ரோனஸ் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. 142 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த கார் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Source: timesnow

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

English summary
MG Planning To Launch Second eCar In India Within Two Years. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X