எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் விரைவில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி பல இந்தியர்களின் கனவு மாடலாக மாறி இருக்கிறது. டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் மிக அசத்தலான இந்த எஸ்யூவிக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக கடுமையான சந்தைப் போட்டி ஏற்பட்டுள்ளதால், ஹெக்டர் மதிப்பை கூட்டும் முயற்சிகளில் எம்ஜி மோட்டார் ஈடுபட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வை வழங்கும் விதத்தில், பெட்ரோல் மாடலில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை வழங்குவதற்கு எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளதாக டீம் பிஎச்பி செய்தி தெரிவிக்கிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், பெட்ரோல் மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும், டீசல் மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்படுகிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், பெட்ரோல் மாடலில் கூடுதலாக சிவிடி கியர்பாக்ஸ் தேர்வையும் அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அடுத்த வாரம் இந்த புதிய சிவிடி மாடல் தேர்வு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 169 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

2021 மாடலாக மேம்படுத்தப்பட்ட புதிய எம்ஜி ஹெக்டர் கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டிசைனில் சில மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் வந்தது. இந்த காரில் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரூ.12.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Most Read Articles

English summary
MG is planning to launch Hector SUV with a CVT automatic in India soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X