Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
500 கிமீ ரேஞ்ச்... சந்தையை அதகளப்படுத்த தயாராகும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்!
500 கிமீ ரேஞ்ச் கொண்ட புதிய இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருப்பதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய வாடிக்கையாளர்களின் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

முந்தைய மாடலின் பேட்டரியானது ஒருமுறை சார்ஜ் செய்தால் 340 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கிய நிலையில், தற்போது மேம்படுத்தப்பட்ட மாடலின் பேட்டரியானது 419 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று எம்ஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், க்ரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், புதிய வாய்ஸ் கமாண்ட் தொழில்நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், விலை சற்றே அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகத்திற்கு பின்னர் சில முக்கியத் தகவல்களை எம்ஜி மோட்டார் இந்தியா நிர்வாக இயக்குனர் ராஜீவ் சாபா பகிர்ந்து கொண்டார்.

அதில், மிக முக்கியமாக 500 கிமீ தூரத்திற்கு மேல் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் புதிய பேட்டரியை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார். தற்போது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் 44.5kWh பேட்டரி பயன்படுத்தப்படும் நிலையில், புதிய பேட்டரி 73kWh திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த புதிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரத்திற்கும் மேல் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த புதிய பேட்டரி கொண்ட இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் மாடலானது அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதும் தெரிய வந்துள்ளது.

சோதனை நிலைகளின் அடிப்படையில் 500 கிமீ தூரத்திற்கு மேல் பயணிக்கும் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் 400 கிமீ முதல் 430 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். எனவே, நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்றதாக இது அமையும்.

இதுதவிர்த்து, ரூ.20 லட்சத்திற்கும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளதாக ராஜீவ் சாபா தெரிவித்துள்ளார். எனவே, இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையை அதகளப்படுத்தும் திட்டங்களில் எம்ஜி மோட்டார் இறங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.