ZS எலெக்ட்ரிக் காரின் விலையை குறைக்க MG கையில் எடுத்த அஸ்திரம்... இனி எல்லாருக்கும் இந்த காரை வாங்க ஆசை வரும்!

MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை தடாலடியாக குறையவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ZS எலெக்ட்ரிக் காரின் விலையை குறைக்க MG கையில் எடுத்த அஸ்திரம்... இனி எல்லாருக்கும் இந்த காரை வாங்க ஆசை வரும்!

இந்திய சந்தையில் காலடி பதித்ததில் இருந்தே சற்றும் கூட சுணக்கம் காட்டாமல், MG Motor நிறுவனம் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. புதிய கார்களை அறிமுகம் செய்வதுடன், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கார்களில் புதிய வேரியண்ட்கள், புதிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் என MG Motor நிறுவனம் பிஸியாக இயங்கி கொண்டுள்ளது.

ZS எலெக்ட்ரிக் காரின் விலையை குறைக்க MG கையில் எடுத்த அஸ்திரம்... இனி எல்லாருக்கும் இந்த காரை வாங்க ஆசை வரும்!

இதன் மூலம் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய MG Motor நிறுவனம் முயன்று வருகிறது. இந்த சூழலில், ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை சுருக்குவதற்கான பணிகளில் MG Motor தற்போது ஈடுபட்டுள்ளது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் MG Motor விற்பனை செய்து வரும் ஒரே ஒரு எலெக்ட்ரிக் கார் இது மட்டும்தான்.

ZS எலெக்ட்ரிக் காரின் விலையை குறைக்க MG கையில் எடுத்த அஸ்திரம்... இனி எல்லாருக்கும் இந்த காரை வாங்க ஆசை வரும்!

இந்த எலெக்ட்ரிக் காரில் சிறிய பேட்டரியை வழங்குவதற்கான பணிகளில் MG Motor நிறுவனம் தற்போது ஈடுபட்டு வரும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி ஆர்டிஓ அலுவலகத்தில், MG Motor நிறுவனம் சமர்ப்பித்துள்ள Type Approval Document மூலமாக இந்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது. இந்த தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ZS எலெக்ட்ரிக் காரின் விலையை குறைக்க MG கையில் எடுத்த அஸ்திரம்... இனி எல்லாருக்கும் இந்த காரை வாங்க ஆசை வரும்!

தற்போதைய நிலையில் MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 44.5 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 419 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பதிலாக சிறிய பேட்டரி தொகுப்பை வழங்குவதன் மூலம், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் பயணிக்கும் தூரம் குறையும்.

ZS எலெக்ட்ரிக் காரின் விலையை குறைக்க MG கையில் எடுத்த அஸ்திரம்... இனி எல்லாருக்கும் இந்த காரை வாங்க ஆசை வரும்!

ஆனால் கூடவே விலையும் குறையும் என்பது வாடிக்கையாளர்களுக்கு சாதகமான அம்சம். தற்போது வெளியாகியுள்ள ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால், MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 40kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது சிறிய பேட்டரி என்பதால், சார்ஜ் செய்வதற்கான நேரமும் குறையும்.

ZS எலெக்ட்ரிக் காரின் விலையை குறைக்க MG கையில் எடுத்த அஸ்திரம்... இனி எல்லாருக்கும் இந்த காரை வாங்க ஆசை வரும்!

தற்போதைய நிலையில் 7.4kW AC சார்ஜர் மூலமாக சார்ஜ் செய்தால், MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை முழுமையாக நிரப்புவதற்கு 6 முதல் 8 மணி நேரம் வரை ஆகும். மறுபக்கம் 50kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால், வெறும் 50 நிமிடங்களுக்கு உள்ளாகவே, இந்த காரின் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விடலாம்.

ZS எலெக்ட்ரிக் காரின் விலையை குறைக்க MG கையில் எடுத்த அஸ்திரம்... இனி எல்லாருக்கும் இந்த காரை வாங்க ஆசை வரும்!

தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் காராக, Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில், MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இருக்கிறது. இதில், Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், 14 லட்ச ரூபாய் முதல் 16.65 லட்ச ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது.

ZS எலெக்ட்ரிக் காரின் விலையை குறைக்க MG கையில் எடுத்த அஸ்திரம்... இனி எல்லாருக்கும் இந்த காரை வாங்க ஆசை வரும்!

அதே சமயம் MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், 21 லட்ச ரூபாய் முதல் 24.21 லட்ச ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது. ஆனால் பேட்டரியின் அளவை குறைப்பதன் மூலமாக, Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்டிற்கு நெருக்கமாக, ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேஸ் வேரியண்ட் விலையை MG Motor நிறுவனத்தால் நிர்ணயம் செய்ய முடியும்.

ZS எலெக்ட்ரிக் காரின் விலையை குறைக்க MG கையில் எடுத்த அஸ்திரம்... இனி எல்லாருக்கும் இந்த காரை வாங்க ஆசை வரும்!

விலை குறையும்பட்சத்தில், MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை உயரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதே சமயம் பேட்டரி அளவு குறைக்கப்படுவதை தவிர, MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது நிச்சயம் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும்.

ZS எலெக்ட்ரிக் காரின் விலையை குறைக்க MG கையில் எடுத்த அஸ்திரம்... இனி எல்லாருக்கும் இந்த காரை வாங்க ஆசை வரும்!

வசதிகளை பொறுத்தவரை, புதிய MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 8 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பனரோமிக் சன்ரூஃப், கனெக்டட் கார் தொழில்நுட்பம், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும்.

ZS எலெக்ட்ரிக் காரின் விலையை குறைக்க MG கையில் எடுத்த அஸ்திரம்... இனி எல்லாருக்கும் இந்த காரை வாங்க ஆசை வரும்!

மேலும் க்ரூஸ் கண்ட்ரோல், ஏர் ப்யூரிஃபையர் போன்ற வசதிகளும் இடம்பெற்றிருக்கும். பாதுகாப்பை பொறுத்தவரை, MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், பிரேக் அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் டெசண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

ZS எலெக்ட்ரிக் காரின் விலையை குறைக்க MG கையில் எடுத்த அஸ்திரம்... இனி எல்லாருக்கும் இந்த காரை வாங்க ஆசை வரும்!

இதே வசதிகள் புதிதாக விற்பனைக்கு வரவுள்ள MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி காரிலும் தொடரலாம். தற்போதைய நிலையில் Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு, MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் நேரடி போட்டி கிடையாது. ஆனால் விலை குறைக்கப்படும்போது, இந்த 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கும் நேரடி போட்டி ஏற்படும்.

Most Read Articles
English summary
Mg zs electric suv could get smaller battery pack here are all the details
Story first published: Saturday, August 28, 2021, 16:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X