எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு சந்தா திட்டம் அறிமுகம்... மாதம் எவ்வளவு தெரியுமா?

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு மாத சந்தா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எந்த பிரச்னையும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு சந்தா திட்டம் அறிமுகம்... மாதம் எவ்வளவு தெரியுமா?

கொரோனாவுக்கு பிறகு கார் சந்தையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிக சுமை இல்லாமல் கார் வாங்கும் வாய்ப்பை வழங்குவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் பல புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது பல கார் நிறுவனங்கள் தங்களது புதிய கார்களுக்கு மாத சந்தா திட்டத்தை அறிவித்து வருகின்றன.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு சந்தா திட்டம் அறிமுகம்... மாதம் எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில், எம்ஜி நிறுவனமும் தனது கார்களுக்கு மாத சந்தா திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு மாத சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு சந்தா திட்டம் அறிமுகம்... மாதம் எவ்வளவு தெரியுமா?

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக உள்ளது. அதிக சிறப்பம்சங்களுடன் மிகச் சரியான விலையில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு சந்தா திட்டம் அறிமுகம்... மாதம் எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில், எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு மாத சந்தா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முதல்கட்டமாக மும்பை, புனே, டெல்லி- என்சிஆர் பிராந்தியம் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் இந்த மாத சந்தா திட்டத்தை வாடிக்கையாளர்கள் பெற முடியும். வரவேற்பை பொறுத்து சென்னை உள்ளிட்ட இதர நகரங்களிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு சந்தா திட்டம் அறிமுகம்... மாதம் எவ்வளவு தெரியுமா?

ஸூம் மற்றும் ஓரிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை எம்ஜி மோட்டார் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டம் 12, 18, 24, 36 ஆகிய மாதங்களுக்கு இந்த திட்டத்தை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு சந்தா திட்டம் அறிமுகம்... மாதம் எவ்வளவு தெரியுமா?

எம்ஜி இசட்எஸ் காருக்கு ரூ.49,999 மாத சந்தா நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதில், காரை மாதம் முழுவதும் சொந்தமாக பயன்படுத்துவதற்கான ஒரு திட்டமும், இதர நபர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான மற்றொரு திட்டமும் உள்ளது. இரண்டாவது திட்டத்தின்படி, மாத சந்தா வெகுவாக குறையும்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு சந்தா திட்டம் அறிமுகம்... மாதம் எவ்வளவு தெரியுமா?

இந்த திட்டத்தின் கீழ் டவுன்பேமண்ட், மாதாந்திர பராமரிப்பு, இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் சந்தா கட்டணத்திலேயே அடங்கி விடும். இதனால், வாடிக்கையாளர்கள் தனியாக செலவழிக்கும் நிலை தவிர்க்கப்படும். இதனால், எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் வர்த்தகம் கூடுதலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாத சந்தா திட்டத்தின் மூலமாக வரிச் சலுகை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

Most Read Articles
English summary
MG Motor has launched subscription plan for ZS electric SUV in India.
Story first published: Friday, January 29, 2021, 10:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X