Just In
- 2 hrs ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 2 hrs ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 2 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 3 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- Education
ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO-வில் பணியாற்றலாம் வாங்க!
- News
இறக்கும் முன்னர் கொரோனா விழிப்புணர்வு.. இறந்த பின் விவேக் மக்களுக்கு சொல்லும் அறிவுரை "இதுதான்!"
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு ஆஸ்டர் எனும் பெயரில் பெரும் கண்டத்தை கொண்டு வரும் எம்ஜி... என்ன நடக்க போகுதோ!
ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டியாக ஆஸ்டர் எனும் பெயரில் புதிய காரை களமிறக்க எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

எம்ஜி நிறுவனம் விற்பனைச் செய்து வரும் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் இசட்எஸ் காரும் ஒன்று. இது ஓர் மின்சார காராகும். இக்காரை மின்சார மோட்டார் இயக்கத்தில் மட்டுமின்றி பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட வாகனமாகவும் விற்பனைக்குக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியில் அண்மைக் காலங்களாக எம்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இக்காரை கடந்த சில மாதங்களாக தீவிர சாலை சோதனையோட்டத்தில் நிறுவனம் ஈடுபடுத்தி வருகின்றது. அவ்வாறு, அக்கார் பலபரீட்சையில் ஈடுபடுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போதும் இணையத்தில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன.

இக்கார் எம்ஜி இசட்எஸ் மின்சார காரின் அடிப்படை உருவ தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும் மாற்று பெயரிலேயே விற்பனைக்கு வரவிருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்டோகார் இந்தியா வெளியிட்டிருக்கும் தகவலின்படி, பெட்ரோல் எஞ்ஜினுடன் விற்பனைக்கு வரவிருக்கும் எம்ஜி இசட்எஸ் கார் 'ஆஸ்டர்' (Astor) எனும் பெயரில் களமிறங்கும் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கான வர்த்தக பதிவை நிறுவனம் ஏற்கனவே செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்ஜி நிறுவனம் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் இடத்தை காலி செய்யும் நோக்கிலேயே இசட்எஸ் காரை பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. எனவே இந்த கார் மிகப் பெரிய போட்டியினை க்ரெட்டாவிற்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களின் பட்டியலில் ஹூண்டாய் க்ரெட்டா காருக்கே முதல் இடம். இந்த இடத்தைப் பிடிக்கும் நோக்கிலேயே ஆஸ்டர் மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கின்றது. இதன் வருகையை எதிர்நோக்கி இந்திய எஸ்யூவி கார் பிரியர்கள் மற்றும் வாகன ஆர்வலர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதேசமயம், இதன் வருகையை எண்ணி ஹூண்டாய் நிறுவனம் லேசான பதற்றத்தில் இருக்கின்றது. எம்ஜி இசட்எஸ் (ஆஸ்டர்) பன்முக எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 1.5 லிட்டர், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளிலேயே ஆஸ்டர் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கார் பற்றியும், காரில் இடம்பெற இருக்கும் சொகுசு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் பற்றியும் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இக்கார் பற்றிய பல்வேறு தகவல்கள் பிற தகவல்களின் அடிப்படையிலேயே வெளியாகி வருகின்றன. அதேசமயம், இக்காரை எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் எனும் பெயரில் கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது.

அப்போது நமக்கு கிடைத்து தகவலின்படி, இக்காரில் தேன்கூடு போன்ற க்ரில், எல்இடி ஹெட்லேம்ப், டிஆர்எல்கள், அலுமினியம் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், 17 இன்சிலான டயமண்ட் கட் அலாய் என எக்கசக்க அம்சங்கள் இடம்பெற இருப்பது தெரியவந்தது.

இதுதவிர, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் கூடிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மழை பொழிந்தால் தானாகவே இயங்கக் கூடிய வைப்பர்கள், லெதர் இருக்கைகள், க்ளைமேட் கன்ட்ரோல், ஸ்டார்ட்-ஸ்டாப் புஷ் பட்டன் உள்ளிட்ட சில சிறப்பு வசதிகளுடன் இக்கார் விற்பனைக்கு வரவிருக்கின்றது. மேலும், சிறப்பு வசதியாக நிறுவனத்தின் ஐ-ஸ்மார்ட் எனப்படும் அதிநவீன இணைப்பு வசதியும் வழங்கப்படும் என தெரிகின்றது.