ஹூண்டாய் க்ரெட்டாவின் ஆதிக்கத்தை முறியடிக்க எம்ஜி-யின் இசட்எஸ் பெட்ரோல் கார்!! மும்பையில் சோதனை...

கியா செல்டோஸுக்கு போட்டியாக வரும் எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் கார் மும்பை சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் வெளியாகியுள்ள இதுகு்றித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஆதிக்கத்தை முறியடிக்க எம்ஜி-யின் இசட்எஸ் பெட்ரோல் கார்!! மும்பையில் சோதனை...

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்படும் கார்களுள் இசட்எஸ் மாடலின் பெட்ரோல் வெர்சனும் ஒன்று. 2020 ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்த கார் செல்டோஸ் மட்டுமின்றி ஹூண்டாய் க்ரெட்டாவிற்கும் போட்டியாக கொண்டுவரப்படுகிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஆதிக்கத்தை முறியடிக்க எம்ஜி-யின் இசட்எஸ் பெட்ரோல் கார்!! மும்பையில் சோதனை...

இந்த நிலையில் மும்பை சாலையில் இந்த பெட்ரோல் எம்ஜி கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஐரோப்பாவில் விற்பனையாகும் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற்ற இசட்எஸ் பெட்ரோல் காராகவே இது இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஆதிக்கத்தை முறியடிக்க எம்ஜி-யின் இசட்எஸ் பெட்ரோல் கார்!! மும்பையில் சோதனை...

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினால் புதிய க்ரில், எல்இடி டிஆர்எல்களுடன் திருத்தியமைக்கப்பட்ட ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஸ்போர்டியரான பம்பர், அதில் அகலமான காற்று ஏற்பான் மற்றும் கருப்பு நிற தொடுதல்களுடன் மூடுபனி விளக்குகள் உள்ளிட்டவற்றுடன் காரின் முன்பக்கத்தை மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஆதிக்கத்தை முறியடிக்க எம்ஜி-யின் இசட்எஸ் பெட்ரோல் கார்!! மும்பையில் சோதனை...

பின்புறத்திலும், எல்இடி டெயில்லைட்கள் மற்றும் ஸ்போர்டியர் பம்பரும் புதியதாக வழங்கப்படலாம். அதேபோல் இந்த காரில் புதிய அலாய் சக்கரங்களையும் எதிர்பார்க்கலாம் என்றாலும், சமீபத்தில் அறிமுகமான 2021 எம்ஜி இசட்எஸ் இவி கார் ஃபேஸ்லிஃப்ட்டை பெறாத இசட்எஸ் மாடலை போலவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஆதிக்கத்தை முறியடிக்க எம்ஜி-யின் இசட்எஸ் பெட்ரோல் கார்!! மும்பையில் சோதனை...

எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் காரின் வெளிப்புறத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினால் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலும், உட்புறம் பெரும்பான்மையாக முந்தைய தலைமுறையையே ஒத்திருக்கும்.

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஆதிக்கத்தை முறியடிக்க எம்ஜி-யின் இசட்எஸ் பெட்ரோல் கார்!! மும்பையில் சோதனை...

யுகேவில் அப்டேட் செய்யப்பட்ட இசட்எஸ் காரில் 10.1 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ரீ-டிசைனில் மைய கன்சோல் போன்றவை புதியதாக வழங்கப்பட்டன. அவை இந்திய வெர்சனிலும் வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஆதிக்கத்தை முறியடிக்க எம்ஜி-யின் இசட்எஸ் பெட்ரோல் கார்!! மும்பையில் சோதனை...

வெளிநாட்டு சந்தைகளில் இசட்எஸ் எரிபொருள் என்ஜின் காரில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்பட்டாலும், இந்தியாவில் இந்த மூன்றில் ஏதேனும் ஒரு என்ஜின் தேர்வில் தான் இந்த எம்ஜி கார் வழங்கப்படும்.

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஆதிக்கத்தை முறியடிக்க எம்ஜி-யின் இசட்எஸ் பெட்ரோல் கார்!! மும்பையில் சோதனை...

அதேநேரம் தற்போதைய ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் கார்களில் வழங்கப்படும் 141 எச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் இசட்எஸ் பெட்ரோல் காரில் எம்ஜி நிறுவனம் தொடரலாம். என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படலாம்.

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஆதிக்கத்தை முறியடிக்க எம்ஜி-யின் இசட்எஸ் பெட்ரோல் கார்!! மும்பையில் சோதனை...

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்த புதிய பெட்ரோல் காரின் அறிமுகம் இந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.12 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
MG ZS Petrol (Kia Seltos-rival) Spied On Test in Mumbai
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X