உலகின் முதல் எலக்ட்ரிக் ஸ்டேஷன் வேகன் கார்... எம்ஜி5 எலக்ட்ரிக்!! 400கிமீ ரேஞ்சில் அறிமுகம்!

உலகின் முதல் எலக்ட்ரிக் ஸ்டேஷன் வேகன் காராக எம்ஜி5 எலக்ட்ரிக் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகின் முதல் எலக்ட்ரிக் ஸ்டேஷன் வேகன் கார்... எம்ஜி5 எலக்ட்ரிக்!! 400கிமீ ரேஞ்சில் அறிமுகம்!

ரோவ் ஐ5 காரின் அடிப்படையிலான இஐ5 என்ற எலக்ட்ரிக் காரை எம்ஜி பிராண்ட் கடந்த 2017ல் சீனாவில் அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டில் யுனிடெட் கிங்டமில் எம்ஜி5 இவி என்ற பெயரிலும் தாய்லாந்தில் எம்ஜி இபி என்ற பெயரிலும் இந்த எலக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டது.

உலகின் முதல் எலக்ட்ரிக் ஸ்டேஷன் வேகன் கார்... எம்ஜி5 எலக்ட்ரிக்!! 400கிமீ ரேஞ்சில் அறிமுகம்!

ஸ்டேஷன் வேகன் ரக தோற்றத்தை கொண்ட எம்ஜியின் இந்த எலக்ட்ரிக் காரில் அதிகப்பட்சமாக 184 எச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய ஒற்றை எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் எலக்ட்ரிக் ஸ்டேஷன் வேகன் கார்... எம்ஜி5 எலக்ட்ரிக்!! 400கிமீ ரேஞ்சில் அறிமுகம்!

இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்பட்டுள்ள 52.2 kWh பேட்டரி தொகுப்பின் மூலம் சிங்கிள்-முழு சார்ஜில் 400கிமீ ரேஞ்சை பெறலாம் என தெரிவித்துள்ள பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி அதன் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையை உலகம் முழுவதிலும் விரிவுப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.

உலகின் முதல் எலக்ட்ரிக் ஸ்டேஷன் வேகன் கார்... எம்ஜி5 எலக்ட்ரிக்!! 400கிமீ ரேஞ்சில் அறிமுகம்!

குறிப்பாக ஐரோப்பாவில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் இந்த நிறுவனம் கூடுதலாக 200 டீலர்ஷிப் மையங்களை ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டிற்குள் திறக்க திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் எம்ஜியின் விற்பனை மையங்களின் எண்ணிக்கை ஐரோப்பாவில் இரட்டிப்பாக உள்ளது.

உலகின் முதல் எலக்ட்ரிக் ஸ்டேஷன் வேகன் கார்... எம்ஜி5 எலக்ட்ரிக்!! 400கிமீ ரேஞ்சில் அறிமுகம்!

உலகின் முதல் முழு-எலக்ட்ரிக் ஸ்டேஷன் வேகன் கார் என்ற அடைமொழியுடன் கொண்டுவரப்படும் எம்ஜி5 எலக்ட்ரிக் கார் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களின் தேர்வாக மாறும் என இந்த நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

உலகின் முதல் எலக்ட்ரிக் ஸ்டேஷன் வேகன் கார்... எம்ஜி5 எலக்ட்ரிக்!! 400கிமீ ரேஞ்சில் அறிமுகம்!

578 லிட்டர்களில் பின்பக்கத்தில் பொருட்களை வைப்பதற்கான இடத்தை கொண்டுள்ள இந்த ஸ்டேஷன் வேகன் எலக்ட்ரிக் காரின் இந்த பூட் ஸ்பேஸ் அளவை பின் இருக்கை வரிசையை மடக்கினால் சுமார் 1,456 லிட்டர்கள் வரையில் கொண்டுவரலாம்.

உலகின் முதல் எலக்ட்ரிக் ஸ்டேஷன் வேகன் கார்... எம்ஜி5 எலக்ட்ரிக்!! 400கிமீ ரேஞ்சில் அறிமுகம்!

எம்ஜி5 எலக்ட்ரிக் காரின் நீளம் 4,544மிமீ, அகலம் 1,811மிமீ, உயரம் 1,513மிமீ ஆகும். காரின் வீல்பேஸ் நீளம் 2,665மிமீ-ஆக உள்ளது. இந்த எலக்ட்ரிக் காரில் லித்தியம்-இரும்பு பேட்டரி ஆனது முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையில் பொருத்தப்பட்டுள்ளது.

உலகின் முதல் எலக்ட்ரிக் ஸ்டேஷன் வேகன் கார்... எம்ஜி5 எலக்ட்ரிக்!! 400கிமீ ரேஞ்சில் அறிமுகம்!

இந்த பேட்டரியை விரைவு சார்ஜரின் மூலமாக வெறும் அரை மணிநேரத்தில் 80 சதவீத சார்ஜ் நிரப்பி விட முடியும். எம்ஜி எலக்ட்ரிக்கில் அதிகப்பட்சமாக 500கிலோ வரையிலான எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்லலாம். அதிலும் மேற்கூரையில் 75 கிலோவிற்கு அதிகமாக ஏற்ற கூடாது.

Most Read Articles
English summary
MG5 Electric Unveiled; Claimed To Be World’s 1st e-Station Wagon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X