ஒரேடியாக எகிறியுள்ள ஸ்கார்பியோ கார்களின் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார் இதுதான்!

இந்திய சந்தையில் கடந்த 2021 மார்ச் மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒரேடியாக எகிறியுள்ள ஸ்கார்பியோ கார்களின் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார் இதுதான்!

ஹேட்ச்பேக், செடான் என அனைத்தையும் சேர்த்து மொத்தமாக கடந்த மார்ச்சில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் லிஸ்ட்டில் 5வது இடத்தில் இருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா இந்த நடுத்தர-அளவு எஸ்யூவி கார் லிஸ்ட்டில் முதலிடத்தில் உள்ளது.

ஒரேடியாக எகிறியுள்ள ஸ்கார்பியோ கார்களின் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார் இதுதான்!

ஏற்கனவே நமக்கு தெரிந்ததுதான், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதத்தில் மொத்தம் 12,640 க்ரெட்டா கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் க்ரெட்டாவின் புதிய தலைமுறை காரை ஹூண்டாய் அறிமுகம் செய்தது.

ஒரேடியாக எகிறியுள்ள ஸ்கார்பியோ கார்களின் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார் இதுதான்!

அப்போதில் இருந்து க்ரெட்டாவின் விற்பனை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால், 2020 மார்ச் மாதத்தில் மேற்கூறிய எண்ணிக்கையை காட்டிலும் சுமார் 88 சதவீதம் குறைவாக 6,706 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

Rank Toyota

Mar'21

Mar'20 Growth (%)
1 Hyundai Creta 12,640 6,706 88
2 Kia Seltos 10,557 7,466 41
3 MG Hector 4,720 1,402 237
4 Maruti S-Cross 2,535 0 -
5 Mahindra Scorpio 2,331 40 5728
6 Tata Harrier 2,284 632 261
7 Tata Safari 2,148 0 -
8 Jeep Compass 1,360 163 734
9 Mahindra XUV500 603 9 6600
10 Renault Duster 252 150 68

Source: Autopunditz

ஒரேடியாக எகிறியுள்ள ஸ்கார்பியோ கார்களின் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார் இதுதான்!

இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள கியா செல்டோஸ் 10,557 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது இதன் 2020 மார்ச் மாத விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 41 சதவீதம் அதிகம். இவை இரண்டு மட்டுமே விற்பனையில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளன.

ஒரேடியாக எகிறியுள்ள ஸ்கார்பியோ கார்களின் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார் இதுதான்!

இவற்றிற்கு அடுத்துள்ள மற்றவைகளின் விற்பனை எண்ணிக்கை 5 ஆயிரத்தை கூட தொடவில்லை. அதிகப்பட்சமாக மூன்றாவது இடத்தில் உள்ள எம்ஜி ஹெக்டர் 4,720 மாதிரிகள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டு மார்ச் மாத விற்பனையை காட்டிலும் சுமார் 237 சதவீதம் அதிகமாகும்.

ஒரேடியாக எகிறியுள்ள ஸ்கார்பியோ கார்களின் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார் இதுதான்!

எம்ஜி ஹெக்டரின் விற்பனை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நல்லப்படியாக இருந்து வருவதாக சமீபத்தில் கூட நமது செய்திதளத்தில் இதன் விற்பனையை டாடா ஹெரியர் உடன் ஒப்பிட்டு பதிவிட்டு இருந்தோம். இதனால் டாடா ஹெரியர் நான்காவது இடத்தில் இருப்பதாக நினைத்துவிட வேண்டாம்.

ஒரேடியாக எகிறியுள்ள ஸ்கார்பியோ கார்களின் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார் இதுதான்!

2,284 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு ஆறாவது இடத்தில் டாடா ஹெரியர் உள்ளது. இருப்பினும் இதன் விற்பனையும் 2020 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 261 சதவீதம் அதிகரித்துள்ளது. இடைப்பட்ட 4வது மற்றும் ஐந்தவாது இடங்களில் மாருதி எஸ்-க்ராஸ் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல்கள் உள்ளன.

ஒரேடியாக எகிறியுள்ள ஸ்கார்பியோ கார்களின் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார் இதுதான்!

இவற்றின் விற்பனை எண்ணிக்கையும் ஹெரியரை காட்டிலும் சில நூறுகள் மட்டுமே அதிகமாக 2,535 மற்றும் 2,331 என உள்ளன. இதில் ஸ்கார்பியோவின் 2020 மார்ச் மாத விற்பனை எண்ணிக்கை வெறும் 40 என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரேடியாக எகிறியுள்ள ஸ்கார்பியோ கார்களின் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார் இதுதான்!

டாடா சஃபாரி மற்றும் ஜீப் காம்பஸ் முறையே 2,148 மற்றும் 1,360 யூனிட்களின் விற்பனை உடன் 7வது மற்றும் எட்டாவது இடத்தில் உள்ளன. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ரெனால்ட் டஸ்டர் கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Mid Size SUV Sales March 2021. Read Full Details In Tamil.
Story first published: Thursday, April 8, 2021, 1:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X