அந்த கார் மாடலை மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்கிறது Mini... எது அது? முழு விபரம்!

மினி (Mini) தனது நிறுவனம் குறிப்பிட்ட கார் மாடலை மின்சார வெர்ஷனில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக சமூக வலை தளம் வாயிலாக தகவல் வெளியிட்டுள்ளது. அது என்ன மாடல் என்பது பற்றிய விரிவான தகவலைக் கீழே காணலாம், வாங்க.

அந்த கார் மாடலை மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்கிறது Mini... எது அது? முழு விபரம்!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. பெருவாரியான மக்கள் மின் வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையைக் கருத்தில் கொண்டு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை நாட்டில் அறிமுகம் செய்ய தொடங்கியிருக்கின்றன.

அந்த கார் மாடலை மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்கிறது Mini... எது அது? முழு விபரம்!

அந்தவகையில், முன்னணி மற்றும் அதிக பிரீமியம் தர வாகனங்களை உற்பத்தி செய்து வரும் மினி (Mini) நிறுவனம் விரைவில் அதன் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூப்பர் கார் மாடலிலேயே அதன் எலெக்ட்ரிக் வாகனம் விற்பனைக்கு வர இருக்கின்றது.

அந்த கார் மாடலை மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்கிறது Mini... எது அது? முழு விபரம்!

அது, கூப்பர் எஸ்இ (Cooper SE) அல்லது மினி எலெக்ட்ரிக் (Mini Electric) எனும் பெயரில் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்று கதவுகள் மட்டுமே கொண்ட ஸ்போர்ட்ஸ் ரக ஹேட்ச்பேக் காராக இது விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது. மின்சார வெர்ஷனுக்கும், எரிபொருளால் இயங்கும் (combustion) எஞ்ஜின் கொண்ட வெர்ஷனுக்கு உருவத்தில் பெரியளவில் மாற்றம் இருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த கார் மாடலை மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்கிறது Mini... எது அது? முழு விபரம்!

இதை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் வெளியாகிய டீசர் படங்கள் காட்சியளிக்கின்றன. அதேநேரத்தில் மினி கூப்பர் எஸ்இ ஓர் மின்சார வெர்ஷன் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கணிசமான சிலா மாற்றங்கள் இடம் பெறும். அந்தவகையில், மஞ்சள் நிற அணிகலன்கள், புதிய ஸ்டைலிலான வீல், வழக்கமான கிரில்லிற்கு பதிலாக ஸ்மூத்தான பேனல், சார்ஜிங் செய்யும் பகுதி உள்ளிட்டவை இடம் பெற இருக்கின்றன.

அந்த கார் மாடலை மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்கிறது Mini... எது அது? முழு விபரம்!

5.5 அங்குல வட்ட வடிவ டிஜிட்டல் திரை காருக்குள் இடம் பெற இருக்கின்றது. இது இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராக செயல்படும். இந்த திரையை சுற்றிலும் மஞ்சள் நிற ஹைலைட்டர்கள் வழங்கப்படும். தொடர்ந்து, பிரீமியம்தர இருக்கைகள், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட கன்சோல், ரீஜெனரேட்டீவ் பிரேக்கிங் மற்றும் டிரைவ் மோட்கள் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றன.

அந்த கார் மாடலை மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்கிறது Mini... எது அது? முழு விபரம்!

மினி கூப்பர் எஸ்இ மின்சார வாகனத்தில் 32.6kWh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும். இது, தற்போது விற்பனையில் இருக்கும் டாடா நெக்ஸான் இவியைக் காட்டிலும் 2.4 kWh அதிக திறன் கொண்டது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 233கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது ஓர் டபிள்யூஎல்டிபி தர பேட்டரி ஆகும்.

அந்த கார் மாடலை மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்கிறது Mini... எது அது? முழு விபரம்!

இதேபோல் எலெக்ட்ரிக் காரில் 184 பிஎஸ் மற்றும் 270 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது வெறும் 3.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இத்தகைய உச்சபட்ச வேகத்தைக் கருத்தில் கொண்ட இந்த எலெக்ட்ரிக் வாகனத்தை ஸ்போர்ட்டி தர இவி என குறிப்பிடுகின்றனர்.

அந்த கார் மாடலை மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்கிறது Mini... எது அது? முழு விபரம்!

எலெக்ட்ரிக் காரை 11kW சார்ஜிங் பாயிண்ட் வாயிலாக சார்ஜ் செய்தால் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீத வரை சார்ஜை 2.5 மணி நேரங்களை எடுத்துக் கொள்ளும். இதுவே, 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பாயிண்ட் வாயிலாக சார்ஜ் செய்தால் 35 நிமிடங்களிலேயே 80 சதவீத சார்ஜை இதன் பேட்டரிகள் பெற்று விடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அந்த கார் மாடலை மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்கிறது Mini... எது அது? முழு விபரம்!

நடப்பாண்டின் இறுதிக்குள் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்திவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ரூ. 50 லட்சத்திற்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மினி கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் கார் ஓர் பிரீமியம் தர வாகனம் என்பதால் இத்தகைய உச்சபட்ச விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த கார் மாடலை மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்கிறது Mini... எது அது? முழு விபரம்!

வழக்கமான மாடலில் இருந்து மாறுபட்டு தென்படும் விதமாக இந்த காரை மினி நிறுவனம் லேசான மாற்றத்துடன் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதன் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் மினி நிறுவனம் கூப்பர் எஸ்இ காரின் டீசர் படங்களை அதன் சமூக வலைதளத்தில் வெளியிட்டது. இத்துடன், இக்காரை மிக விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஹிண்டையும் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #மினி #mini
English summary
Mini planning to launch ev soon in india
Story first published: Saturday, October 23, 2021, 13:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X