Just In
- 10 min ago
இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க
- 33 min ago
எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவுகள் துவக்கம்!! இந்தியாவின் முதல் செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ கார்..!
- 1 hr ago
பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... முக்கிய விபரங்கள் வெளியானது
- 2 hrs ago
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
Don't Miss!
- Movies
சட்டையைக் கழற்றி .. சும்மா தெறிக்க விட்ட ஷிவானி.. செம கெட்டப்!
- News
பாஜக பிரமுகர் "கோட்டைக்குள்" களமிறங்கும் மமதா பானர்ஜி.. நந்திகிராமில் போட்டி.. அதிரடி அறிவிப்பு
- Lifestyle
சிவனின் முழு அருளும் கிடைக்கணுமா? அப்ப உங்க ராசிக்கு ஏற்ற சிவ மந்திரத்தை சொல்லுங்க...
- Sports
தோனியுடன் கைகோர்த்த விராட் கோலி.... இதுல கூடவா ஒற்றுமை... 4வது டெஸ்டில் அரங்கேறிய சுவாரஸ்ய சாதனை
- Finance
மார்ச் 31க்கு முன் கட்டாயம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சஸ்பென்ஸ் ட்வீட் போட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரி! எதிர்பார்ப்பின் உச்சத்தில் விவசாயிகள்... என்ன தெரியுமா?
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி போட்ட புதிய ட்வீட்டால் விவசாயிகள் எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு சென்றிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

உலகமே மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றது. இந்தியாவிலும் மின் வாகனத்தை நோக்கி மக்களை நகர்த்தும் முயற்சிகள் மிக அதி-தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை தற்போதைய மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், விவசாயப் பணிகளுக்கு பயன்படக்கூடிய வகையில் உருவாகியிருக்கும் மின்சார இயக்கம் கொண்ட எலெக்ட்ரிக் டிராக்டரை வரும் மார்ச் மாதம் மத்திய அமைச்சர் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலமாக உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையுயர்வில் இருந்து இது விவசாயிகளை காப்பாற்ற உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே புதிய வேளாண் சட்டம், கடன், பஞ்சம், வறுமை என பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவித்து வரும் விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை (தலை வலியை) ஏற்படுத்தும் வகையில் பெட்ரோல், டீசல் விலையுயர்வு அமைந்திருக்கின்றது. இதனால், வாகனங்களையே நம்பி பிழைப்பை ஓட்டி வரும் எளிய மக்கள் முதல் பலர் சொல்லிலடங்கா வேதனையில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே விவசாயிகளுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் புதிய மின்சார டிராக்டர் விரைவில் நாட்டில் அறிமுகமாக இருக்கின்றது. இது தற்போது இல்லையென்றால் எதிர்காலத்தில் நிச்சயம் விவசாயிகளின் பாக்கெட்டைக் காப்பாற்ற உதவும் என நம்பப்படுகின்றது.

புதிய எலெக்ட்ரிக் டிராக்டர் அறிமுகத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவரது டுவிட்டர் பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அடுத்த 15 நாளில் அறிமுகமாக இருக்கும் மின்சார டிராக்டர் அறிமுக நிகழ்வில் நான் கொள்வேன்" என கூறியிருக்கின்றார்.

இந்த நிகழ்வை முன்னிட்டு 'கோ எலெக்ட்ரிக்' பிரசாரத்தையும் அவர் தொடங்கி வைத்தார். விரைவில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கும் எலெக்ட்ரிக் டிராக்டர் பற்றிய எந்தவொரு விபரமும் வெளியிடப்படவில்லை. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், எந்த நிறுவனம் எலெக்ட்ரிக் டிராக்டரை அறிமுகம் செய்ய இருக்கின்றது என்கிற தகவல்கூட வெளியிடப்படவில்லை.

ஆகையால், புதுமுக எலெக்ட்ரிக் டிராக்டர் பற்றிய தகவல் மிகவும் ரகசியமான ஒன்றாக இருக்கின்றது. ஆகையால் இவ்வாகனம் பற்றிய அனைத்து தகவல்களும் அறிமுக நிகழ்வு அன்றே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம், இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் முதல் மின்சார டிராக்டர் என இதனை நினைத்துக் கொள்ள வேண்டாம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோனாலிகா டிராக்டர் நிறுவனம், அதன் முதல் மின்சார டிராக்டரை நாட்டில் விற்பனக்கு அறிமுகப்படுத்தியது. டைகர் எனும் பெயரில் அந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மின்சார டிராக்டரை சோனாலிகா நிறுவனம் ஐரோப்பிய தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் திறனைக் கொண்டு உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மின்சார வாகனத்தில் ஐபி67 தரத்திலான 25.5 kW இயற்கையாக கூலாகும் பேட்டரியையே நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது.

சோனாலிகா டைகர் மின்சார டிராக்டரை முழுமையாக சார்ஜ் செய்ய குறைந்தபட்சம் 10 மணி நேரம் தேவைப்படுகின்றது. வழக்கமான சார்ஜிங் போர்ட்டில் வைத்து சார்ஜ் செய்யும்போதே இந்த அதிகபட்ச நேரம் தேவைப்படுகின்றது. ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும் 4 மணி நேரங்களே போதும் என கூறப்படுகின்றது.

அவ்வாறு அதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 8 மணி நேர பயன்பாட்டை பெற்றுக் கொள்ள முடியுமாம். சுமார் 2 டன் வரையிலான எடையுள்ள பொருட்களைக் கூட இந்த வாகனம் அசால்டாக கையாளும். ரூ. 5.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இந்த டிராக்டரை நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.
குறிப்பு: புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்க வழங்கப்பட்டவை.