புதிய அவுட்லேண்டர் ப்ளக்-இன் ஹைப்ரீட் காரின் தோற்றத்தை வெளியிட்டது மிட்சுபிஷி!! அக்.28இல் உலகளவில் அறிமுகம்

மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனம் அதன் முற்றிலும் புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் மாடலான அவுட்லேண்டர் க்ராஸ்ஓவர் எஸ்யூவி காரின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்தினை வெளியிட்டுள்ளது. அவற்றை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய அவுட்லேண்டர் ப்ளக்-இன் ஹைப்ரீட் காரின் தோற்றத்தை வெளியிட்டது மிட்சுபிஷி!! அக்.28இல் உலகளவில் அறிமுகம்

உலகளவில் வருகிற அக்டோபர் 28ஆம் தேதி அவுட்லேண்டர் ஹைப்ரீட் காரை அறிமுகம் செய்ய மிட்சுபிஷி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதனை தொடந்து இந்த ப்ளக்-இன் ஹைப்ரீட் கார் ஜப்பான் நாட்டு சந்தையில் வருகிற டிசம்பர் மாத மத்தியில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என மிட்சுபிஷி நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய அவுட்லேண்டர் ப்ளக்-இன் ஹைப்ரீட் காரின் தோற்றத்தை வெளியிட்டது மிட்சுபிஷி!! அக்.28இல் உலகளவில் அறிமுகம்

தற்கால மாடர்ன் வாடிக்கையாளர்கள் மிகவும் கம்பீரமாக, அதிக வளைவுகளை கொண்ட கார்களையே பெரிதும் விரும்புகின்றனர். இதனாலேயே அத்தகைய வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய அவுட்லேண்டர் வாகனத்தை புதிய டிசைன் கான்செப்ட்டில் மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

புதிய அவுட்லேண்டர் ப்ளக்-இன் ஹைப்ரீட் காரின் தோற்றத்தை வெளியிட்டது மிட்சுபிஷி!! அக்.28இல் உலகளவில் அறிமுகம்

இதன்படி அப்கிரேட் செய்யப்பட்டுள்ள காரின் முன்பக்கம் பெரியதாக்கப்பட்ட டைனாமிக் ஷீல்டினால் முன்பை காட்டிலும் முரட்டுத்தனமானதாக மாறியுள்ளது. பக்கவாட்டில் ஓர் தடிமனான கேரக்டர் லைன் ஒன்று காரின் முன்பக்கத்தில் இருந்து பின்பக்கம் வரையில் செல்கிறது.

புதிய அவுட்லேண்டர் ப்ளக்-இன் ஹைப்ரீட் காரின் தோற்றத்தை வெளியிட்டது மிட்சுபிஷி!! அக்.28இல் உலகளவில் அறிமுகம்

இவற்றிற்கு ஏற்ப காரின் 20 இன்ச் சக்கரங்களுக்கு மேலாக கருப்பு நிறத்தில் பிளாஸ்டிக் வளைவுகளும், அவற்றிற்கு மேலாக சக்கரத்தின் விட்டத்திற்கு பார்டர் லைன்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பார்டர் லைன்கள் ஆனது காரின் பக்கவாட்டு லைன்களுடன் மிகவும் ஒன்றிப்போகின்ன்றன.

புதிய அவுட்லேண்டர் ப்ளக்-இன் ஹைப்ரீட் காரின் தோற்றத்தை வெளியிட்டது மிட்சுபிஷி!! அக்.28இல் உலகளவில் அறிமுகம்

மேலும், வாகனத்தை முரட்டுத்தனமானதாக காட்டும் இந்த லைன்கள் இது செயல்திறன்மிக்க மிட்சுபிஷி அவுட்லேண்டர் என்பதையும் மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றன. முன்பக்கத்தை போல் பின்பக்கத்தில் புதிய அவுட்லேண்டர் ஹைப்ரீட் கார் முழு அகலத்திற்கும் கிடைமட்டமான வடிவில் டெயில்லைட்கள் பெற்றுள்ளது.

புதிய அவுட்லேண்டர் ப்ளக்-இன் ஹைப்ரீட் காரின் தோற்றத்தை வெளியிட்டது மிட்சுபிஷி!! அக்.28இல் உலகளவில் அறிமுகம்

இவற்றுடன் புதிய அவுட்லேண்டர் எஸ்யூவி காரின் உட்புறமும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, உட்புற டேஸ்போர்டில் வழங்கப்படும் கிடைமட்டமான இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் முன்பை காட்டிலும் காரின் இருப்பிடத்தை தெளிவாக ஓட்டுனருக்கு காட்டுமாம். புதிய உட்புற கேபினின் தோற்றத்திற்கு ஏற்ப மைய கன்சோல் பகுதி சில மாற்றங்களை ஏற்றுள்ளது.

புதிய அவுட்லேண்டர் ப்ளக்-இன் ஹைப்ரீட் காரின் தோற்றத்தை வெளியிட்டது மிட்சுபிஷி!! அக்.28இல் உலகளவில் அறிமுகம்

கதவுகளின் உட்பக்கம் ஆனது மென்மையான பேடிங்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் அவ்வப்போது கவனிக்க வேண்டிய மானிட்டர்கள் மற்றும் அளவீடுகள் அனைத்தும் முந்தைய தலைமுறை அவுட்லேண்டர் காரில் வழங்கப்பட்டதை காட்டிலும் இந்த புதிய ஹைப்ரீட் வெர்சனில் ஓட்டுனரால் எளிதாக பார்க்கக்கூடிய இடத்தில் வழங்கப்பட்டுள்ளன.

புதிய அவுட்லேண்டர் ப்ளக்-இன் ஹைப்ரீட் காரின் தோற்றத்தை வெளியிட்டது மிட்சுபிஷி!! அக்.28இல் உலகளவில் அறிமுகம்

அதேபோல் தேர்ந்தெடுப்பான்கள், டயல்கள் மற்றும் ஸ்விட்ச்கள் உள்ளிட்டவையும் முன்பை விட நம்பிக்கையான பிடிமானத்தை வழங்கக்கூடியவைகளாக கொடுக்கப்பட்டுள்ளதாக மிட்சுபிஷி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய அவுட்லேண்டர் ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனம் 10 விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அவுட்லேண்டர் ப்ளக்-இன் ஹைப்ரீட் காரின் தோற்றத்தை வெளியிட்டது மிட்சுபிஷி!! அக்.28இல் உலகளவில் அறிமுகம்

இந்த 10 நிறத்தேர்வுகளில் சிவப்பு டைமண்ட், வெள்ளை டைமண்ட் மற்றும் புதிய கருப்பு டைமண்ட் என டைமண்ட் நிற வரிசைகளும் அடங்குகின்றன. இவை தவிர்த்து புதிய அவுட்லேண்டர் ஹைப்ரீட் காரின் தொழிற்நுட்ப அம்சங்கள் எதையும் இந்த ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை.

புதிய அவுட்லேண்டர் ப்ளக்-இன் ஹைப்ரீட் காரின் தோற்றத்தை வெளியிட்டது மிட்சுபிஷி!! அக்.28இல் உலகளவில் அறிமுகம்

உலகின் முதல் ப்ளக்-இன் ஹைப்ரீட் காராக மிட்சுபிஷி அவுட்லேண்டர் முதன்முதலாக கடந்த 2013ஆம் ஆண்டில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது. இந்த ஜப்பானிய ஹைப்ரீட் எஸ்யூவி காரில் இரட்டை மோட்டார் 4-சக்கர-ட்ரைவ் சிஸ்டமும், அதிக-திறன் கொண்ட பேட்டரி தேர்வுகளும் வெளிநாட்டு சந்தைகளில் வழங்கப்படுகின்றன. இந்த பேட்டரி தேர்வுகளில் 100 வோல்ட் மாறுதிசை மின்னோட்ட பேட்டரியும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Mitsubishi reveals design of new Outlander PHEV; global debut on October 28.
Story first published: Friday, October 15, 2021, 23:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X