கியா சொனெட் காரை வாங்கினால், இப்படி கஸ்டமைஸ்ட் செய்யணும்!! ஆரஞ்சு கலர் பளிச்சிடுது...

பிரத்யேகமான ஆரஞ்ச் நிறத்தில் கியா சொனெட் கார் ஒன்று கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த சொனெட் காரை கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கியா சொனெட் காரை வாங்கினால், இப்படி கஸ்டமைஸ்ட் செய்யணும்!! ஆரஞ்சு கலர் பளிச்சிடுது...

கியா நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் நிறுவனத்தின் மூன்றாவது கார் மாடலாக சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்டது.

கியா சொனெட் காரை வாங்கினால், இப்படி கஸ்டமைஸ்ட் செய்யணும்!! ஆரஞ்சு கலர் பளிச்சிடுது...

இந்திய சந்தையில் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் காம்பெக்ட் எஸ்யூவிகளின் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டதாலோ என்னவோ, மற்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்களை போன்று சொனெட்டிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கியா சொனெட் காரை வாங்கினால், இப்படி கஸ்டமைஸ்ட் செய்யணும்!! ஆரஞ்சு கலர் பளிச்சிடுது...

கவர்ச்சிகரமான தோற்றத்தை கொண்ட சொனெட்டை இந்திய சாலைகளுக்கு ஏற்ப கியா நிறுவனம் வடிவமைத்துள்ளதே இதற்கெல்லாம் காரணமாகும். இதன் விளைவாக சாலைகளில் செல்லும் சொனெட் கார்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியிருப்பதால், வாடிக்கையாளர்கள் தனது சொனெட் கார் மற்றவைகளில் இருந்து தனித்து தெரிவதற்கு மாடிஃபை செய்ய துவங்கியுள்ளனர்.

கியா சொனெட் காரை வாங்கினால், இப்படி கஸ்டமைஸ்ட் செய்யணும்!! ஆரஞ்சு கலர் பளிச்சிடுது...

இந்த வகையில் மாடிஃபை செய்யப்பட்ட சொனெட் காரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். இந்த சொனெட் காரில் ஒட்டுவதற்கு பளபளப்பான ஆரஞ்சு நிற வ்ராப் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.

கியா சொனெட் காரை வாங்கினால், இப்படி கஸ்டமைஸ்ட் செய்யணும்!! ஆரஞ்சு கலர் பளிச்சிடுது...

வ்ராப் வேலைப்பாடுகள் அனைத்தையும் டெல்லி என்சிஆர் பகுதியை சேர்ந்த வ்ராபஹாலிஸ் என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது. மேலும் அந்த கஸ்டமைஸ்ட் நிறுவனம் அதன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட படங்கள் தான் இவையாகும்.

கியா சொனெட் காரை வாங்கினால், இப்படி கஸ்டமைஸ்ட் செய்யணும்!! ஆரஞ்சு கலர் பளிச்சிடுது...

பளபளப்பான ஆரஞ்சு நிறத்திற்கு ஏற்ப காரின் முன்பக்க க்ரில் அமைப்பு பளபளப்பான கருப்பு நிறத்தை பெற்றுள்ளது. இந்த இரு மாற்றங்களை தவிர்த்து காரின் வெளிபுறத்தில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்பட்டது போல் தெரியவில்லை.

கியா சொனெட் காரை வாங்கினால், இப்படி கஸ்டமைஸ்ட் செய்யணும்!! ஆரஞ்சு கலர் பளிச்சிடுது...

ஆனால் சாலையில் செல்வோரை திரும்பி பார்க்க வைப்பதற்கு இவையே போதும். கார்களில் இப்போதெல்லாம் யாரும் கஸ்டம் கார் பெயிண்ட்டை உபயோகிப்பதில்லை. காரை கஸ்டமைஸ்ட் செய்ய நேராக வ்ராப்-களின் பக்கம் சென்றுவிடுகின்றனர்.

கியா சொனெட் காரை வாங்கினால், இப்படி கஸ்டமைஸ்ட் செய்யணும்!! ஆரஞ்சு கலர் பளிச்சிடுது...

ஏனெனில் வ்ராப் வாகனத்தின் மறு விலையின் மதிப்பை குறைக்காது, மேலும் வ்ராப் பிடிக்கவில்லை என்றால் நீக்கிவிடலாம். நாம் இந்த செய்தியில் பார்க்கும் சொனெட்டின் வெளிப்புறம் மட்டுமே வ்ராப்களை ஏற்றுள்ளது. உட்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை.

கியா சொனெட் காரை வாங்கினால், இப்படி கஸ்டமைஸ்ட் செய்யணும்!! ஆரஞ்சு கலர் பளிச்சிடுது...

இந்தியாவில் கியா சொனெட் மூன்று விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒன்றான 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

கியா சொனெட் காரை வாங்கினால், இப்படி கஸ்டமைஸ்ட் செய்யணும்!! ஆரஞ்சு கலர் பளிச்சிடுது...

இரண்டாவது என்ஜின் தேர்வான 1.5 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் 100பிஎஸ்/ 240என்எம் மற்றும் 115பிஎஸ்/250என்எம் என இரு விதமான ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது. இதில் குறைவான ஆற்றல் வெர்சனில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், அதிக ஆற்றல் வெர்சனில் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் இணைக்கப்படுகிறது.

கியா சொனெட் காரை வாங்கினால், இப்படி கஸ்டமைஸ்ட் செய்யணும்!! ஆரஞ்சு கலர் பளிச்சிடுது...

மூன்றாவது என்ஜின் தேர்வான 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் அதிகப்பட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இது 6-ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7-ஸ்பீடு டிசிடி என்ற இரு விதமான ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் கிடைக்கிறது.

Most Read Articles

English summary
Modified Kia Sonet Looks Stunning With Bright Orange Wrap. Read All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X