பார்க்கவே மெர்சலா இருக்கு!! உரிமையாளரால் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட மாருதி எர்டிகா!

மாருதி எர்டிகா இந்தியாவில் முதன்முதலாக 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் இந்த மாருதி எம்பிவி காரின் இரண்டாம் தலைமுறை கடந்த 2018ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

பார்க்கவே மெர்சலா இருக்கு!! உரிமையாளரால் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட மாருதி எர்டிகா!

மலிவான விலை, குறைவான எரிபொருள் செலவு மற்றும் விசாலமான உட்புற கேபினினால் வாடிக்கையாளர்களின் முதன்மையான எம்பிவி தேர்வாக விளங்கிவரும் எர்டிகாவையும் மற்ற மாருதி கார்களை போன்று உரிமையாளர்கள் தங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப கஸ்டமைஸ்ட் செய்து வருகின்றனர்.

பார்க்கவே மெர்சலா இருக்கு!! உரிமையாளரால் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட மாருதி எர்டிகா!

இந்த வகையில் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இரு பக்கங்களிலும் மாடிஃபை செய்யப்பட்ட மாருதி எர்டிகா காரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். விக் ஆட்டோ ஆக்ஸஸரீஸ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்படவுள்ள கீழுள்ள வீடியோவில் இந்த கஸ்டமைஸ்ட் எர்டிகா காரை மிக நெருக்கமாக பார்க்கலாம்.

Image Courtesy: VIG AUTO ACCESSORIES

காரின் முன்பக்கத்தில், ஹெட்லேம்ப் அமைப்பில் பல்வேறு நிறங்களில் எல்இடி டிஆர்எல் வளையங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு மத்தியில் வழங்கப்படும் சுஸுகி லோகோ தங்க நிற அவுட்லைனிங்கை கொண்டுள்ளது.

பார்க்கவே மெர்சலா இருக்கு!! உரிமையாளரால் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட மாருதி எர்டிகா!

முன் மற்றும் பின்பக்கத்தில் உள்ள பம்பர்கள் க்ரே, கருப்பு & கோல்டு என மூன்று விதமான நிறங்களில் அடிப்பாகங்களை கொண்டுள்ளன. முன் மற்றும் பின்பக்கம் மட்டுமின்றி காரை சுற்றிலும் கூடுதல் அடிப்பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பார்க்கவே மெர்சலா இருக்கு!! உரிமையாளரால் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட மாருதி எர்டிகா!

இதனால் மொத்த காரும் மிகவும் தாழ்வான தோற்றத்தை கொண்டது போல் நமக்கு காட்சியளிக்கிறது. காரின் முன்பக்கத்தில் ஹெட்லேம்ப் அமைப்பில் கூடுதல் எல்இடி டிஆர்எல்களும், முன் பம்பரில் எல்இடி ஃபாக் விளக்குகளும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன.

பார்க்கவே மெர்சலா இருக்கு!! உரிமையாளரால் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட மாருதி எர்டிகா!

இதேபோல் மேற்கூரையில் பொருட்களை கட்டி வைப்பதற்கு தண்டவாள கம்பிகளும், பக்கவாட்டில் சக்கரங்களுக்கு மேற்பகுதியில் தங்க நிறத்தில் சக்கர வளைவுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் எல்இடி ஃபாக் விளக்குகளுடன், ஸ்போர்டியான தோற்றத்தில் ஃபாக்ஸ் எக்ஸாஸ்ட் துளைகள் வழங்கப்பட்டுள்ளன.

பார்க்கவே மெர்சலா இருக்கு!! உரிமையாளரால் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட மாருதி எர்டிகா!

பின்பக்கத்தில் கோல்டு நிறத்தை பின்கதவு மற்றும் மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லரிலும் காணலாம். இவற்றுடன் இந்த எம்பிவி கார் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா, ஜன்னல் விஸர்கள், ஜன்னல் சில்களில் க்ரோம் கார்னிஷையும் பெற்றுள்ளன.

பார்க்கவே மெர்சலா இருக்கு!! உரிமையாளரால் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட மாருதி எர்டிகா!

தொழிற்நுட்ப அம்சமாக சாவியில்லா நுழைவு இந்த கஸ்டமைஸ்ட் காரில் கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிப்புறத்தை போல் அதிகளவில் மாடிஃபை செய்யப்பட்டுள்ள காரின் உட்புற கேபினில், கதவுகள் செர்ரி சிவப்பு நிற லெதர் பேட்களுடன் கருப்பு நிற உள்ளீடுகளை பெற்றுள்ளன.

பார்க்கவே மெர்சலா இருக்கு!! உரிமையாளரால் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட மாருதி எர்டிகா!

இதனுடன் டேஸ்போர்டு, மைய கன்சோல், ஸ்டேரிங் சக்கரம் மற்றும் கியர் க்னாப் உள்ளிட்டவையும் இந்த இரட்டை-நிற உள்ளமைவை ஏற்றுள்ளன. இருக்கைகள் கருப்பு, சிவப்பு மற்றும் கோல்டு என மூன்று-நிற கவர்களால் மூடப்பட்டுள்ளன. முன்பக்க மைய ஆர்ம்ரெஸ்ட் கோல்டு & கருப்பு நிறத்தில் உள்ளது.

பார்க்கவே மெர்சலா இருக்கு!! உரிமையாளரால் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட மாருதி எர்டிகா!

இவற்றுடன் கேபினில் புதியதாக வழக்கப்பட்டுள்ள மற்ற சிறப்பம்சங்களாக ஆண்ட்ராய்டு தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஒளிரக்கூடிய நுழைவு படிக்கட்டு தட்டுகள் மற்றும் 7டி தரை பாய்கள் உள்ளிட்டவற்றை சொல்லலாம். இவ்வாறு இயந்திர பாகங்களில் கை வைக்காமல், வாகனத்தின் தோற்றத்தை மட்டும் மெருக்கேற்றி கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Modified Maruti Ertiga Looks FAB With Sporty Body Kit & Premium Interior.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X