இந்தியர்களின் இரசனையே தனி... மாருதி ஜிப்ஸி இவ்வாறான தோற்றத்திலா...!!

மாருதி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த தனித்துவமான வாகனங்களுள் நிச்சயம் ஜிப்ஸியும் ஒன்றாகும். பல வெளிநாட்டு சந்தைகளில் இந்த மாருதி தயாரிப்பு பல்வேறான பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்தியர்களின் இரசனையே தனி... மாருதி ஜிப்ஸி இவ்வாறான தோற்றத்திலா...!!

பிஎஸ்6 மாற்றத்தாலும், இந்தியாவில் விற்பனை குறைந்ததினாலும் மாருதி ஜிப்ஸியின் விற்பனை நிறுத்தப்பட்டாலும், வெளிநாடுகளில், குறிப்பாக ஜப்பானில் சுஸுகி ஜிம்னி என்கிற பெயரில் விற்பனையாகும் இந்த சிறிய ரக 4x4 எஸ்யூவி வாகனத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தியர்களின் இரசனையே தனி... மாருதி ஜிப்ஸி இவ்வாறான தோற்றத்திலா...!!

இதனால் இந்தியாவிலும் ஜிம்னி மாடலை கொண்டுவர மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டு வரும் நிலையில், அவ்வப்போது மாடிஃபை செய்யப்பட்ட ஜிப்ஸி வாகனங்களை பற்றி நமது செய்தியில் பார்த்து வருகிறோம். இந்த வகையில் ராலி குழு ஒன்றால் மாடிஃபை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் ஜிப்ஸி வாகனத்தை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

Image Courtesy: Small Town Rider

ஸ்மால் டவுன் ரைடர் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள மேல் உள்ள வீடியோவின் மூலம் இந்த குறிப்பிட்ட ஜிப்ஸியின் உரிமையாளர் ஆஃப்-ரோடு பிரியர் என்பதும், அவர் ராலி போட்டிகளில் கலந்துகொண்டு வருவதும் நமக்கு தெரிய வருகிறது.

இந்தியர்களின் இரசனையே தனி... மாருதி ஜிப்ஸி இவ்வாறான தோற்றத்திலா...!!

இந்த மாடிஃபை வாகனத்தை பார்த்ததும் நம்மை வசீகரிப்பது அதன் மண் பழுப்பு நிற பெயிண்ட்டும், அதற்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள கருப்பு நிற ஹைலைட்களுமே ஆகும். முன்பக்கத்தில் புதிய எல்இடி ஹெட்லேம்ப்களை எல்இடி வளைவுகளுடன் கொண்டுள்ள இந்த மாடிஃபை ஜிப்ஸி வாகனத்தின் க்ரில் பகுதியில் எந்த மாற்றமுமில்லை, மாருதி வழங்கிய க்ரில் அப்படியே உள்ளது.

இந்தியர்களின் இரசனையே தனி... மாருதி ஜிப்ஸி இவ்வாறான தோற்றத்திலா...!!

ஆனால் முன் பம்பர், டர்ன் இண்டிகேட்டர்களை கொண்ட ஆஃப்-ரோடு பம்பர் ஒன்றினால் மாற்றப்பட்டுள்ளது. இவற்றுடன் ஆஃப்-ரோடு பயணங்களின் போது சேற்றில் சிக்கி கொண்டால் வாகனத்தை இழுப்பதற்கு எலக்ட்ரானிக் வின்ச் ஒன்றும் பம்பர் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியர்களின் இரசனையே தனி... மாருதி ஜிப்ஸி இவ்வாறான தோற்றத்திலா...!!

வாகனத்தின் பக்கவாட்டிலும் விளக்குகளை இந்த வீடியோவில் பார்க்கலாம். பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் மஹிந்திரா பொலிரோவில் இருந்து பெறப்பட்டிருக்கலாம். வெளிப்புறத்தை காட்டிலும் வாகனத்தின் முக்கிய அம்சங்கள் உட்பக்க கேபினில் தான் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியர்களின் இரசனையே தனி... மாருதி ஜிப்ஸி இவ்வாறான தோற்றத்திலா...!!

கேபின், வாகனத்தின் இறுதிமுனை வரையில் பெரியதாக உள்ளது. இதனை ராலி கேபின் என்பார்கள். இதனால் பின்பகுதியில் காலியிடம் உள்ளது. ராலி போட்டிகளுக்கென இதன் கேபின் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் கவர்ச்சிகரமான தொழிற்நுட்ப அம்சங்கள் எதனையும் இதன் கேபினில் பார்க்க முடியவில்லை.

இந்தியர்களின் இரசனையே தனி... மாருதி ஜிப்ஸி இவ்வாறான தோற்றத்திலா...!!

வெளிப்புறத்திற்கு ஏற்ப டேஸ்போர்டு பழுப்பு நிறத்திலும், இருக்கைகளும் அதே நிறத்தில் கூடுதல் குஷின் உடனும் காட்சியளிக்கின்றன. வாகனத்தின் மேற்கூரை முற்றிலுமாக கருப்பு நிறத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக வெளிப்புற தோற்றத்திற்கு இணையாக இதன் உட்புற கேபின் உள்ளது.

இந்தியர்களின் இரசனையே தனி... மாருதி ஜிப்ஸி இவ்வாறான தோற்றத்திலா...!!

இந்த மாடிஃபிகேஷன் மாற்றங்களுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம் வரையில் செலவானதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி ஜிப்ஸிக்கு இப்போதும் இந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர். இதனால் இவ்வளவு செலவு செய்து ஜிப்ஸி ஒன்று மாடிஃபை செய்யப்பட்டதில் எந்த ஆச்சிரியமும் இல்லை.

Most Read Articles
English summary
Modified Maruti Gypsy with rally cabin in a walkaround video. Read All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X