வெறும் 2 கதவுகளுடன் வித்தியாசமான தோற்றத்தில் வலம் வரும் டாடா இண்டிகா கார்!! யாருப்பா அந்த மெக்கானிக்?!

வெறும் 2 கதவுகளுடன் டாடா இண்டிகா கார் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை காரை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 2 கதவுகளுடன் வித்தியாசமான தோற்றத்தில் வலம் வரும் டாடா இண்டிகா கார்!! யாருப்பா அந்த மெக்கானிக்?!

டாடா இண்டிகா, முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கார் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். 1998ல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டாடா கார் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுவந்தது.

வெறும் 2 கதவுகளுடன் வித்தியாசமான தோற்றத்தில் வலம் வரும் டாடா இண்டிகா கார்!! யாருப்பா அந்த மெக்கானிக்?!

இதனால் கிட்டத்தட்ட 20 வருடங்களாக சந்தைப்படுத்தப்பட்டு வந்த இண்டிகா கார்களின் விற்பனை கடந்த 2018ல் முற்றிலுமாக நிறுத்தி கொள்ளப்பட்டது. டாடா இண்டிகா 4 கதவுகளை கொண்ட கார் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

வெறும் 2 கதவுகளுடன் வித்தியாசமான தோற்றத்தில் வலம் வரும் டாடா இண்டிகா கார்!! யாருப்பா அந்த மெக்கானிக்?!

ஆனால் இங்கு ஒரு இண்டிகா கார் வெறும் 2 கதவுகளுடன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. வாஷிம் க்ரேயேஷன் என்ற யுடியுப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இதுதொடர்பான வீடியோவில் இரு கதவுகள் நீக்கப்பட்டதால், பின்பக்க இருக்கை வரிசை காரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், கார் இரண்டாக வெட்டப்பட்டுள்ளது. பிறகு பின்பக்கத்தில் தேவையான பாகங்கள் மட்டுமே வெல்டிங் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக காரின் நீளம் சுமார் 3.5 அடி (1 மீட்டர்) குறைந்துள்ளது.

வெறும் 2 கதவுகளுடன் வித்தியாசமான தோற்றத்தில் வலம் வரும் டாடா இண்டிகா கார்!! யாருப்பா அந்த மெக்கானிக்?!

அதேநேரம் காரின் முன்பக்க பொனெட்டின் மேல் ஹுட் ஸ்கூப், மேற்கூரையில் பொருட்களை கட்டி வைப்பதற்கான தண்டவாளங்கள் மற்றும் பின்பக்கத்தில் கருப்பு நிற ஸ்பாய்லர் உள்ளிட்டவற்றை மாடிஃபை செய்தவர் புதியதாக பொருத்தியுள்ளார்.

வெறும் 2 கதவுகளுடன் வித்தியாசமான தோற்றத்தில் வலம் வரும் டாடா இண்டிகா கார்!! யாருப்பா அந்த மெக்கானிக்?!

அதேபோல் காரின் பக்கவாட்டிலும் கருப்பு நிற க்ளாடிங்குகளை காரின் குறைக்கப்பட்ட நீளத்திற்கு ஏற்ப இணைத்துள்ளார். உட்புறத்தில் பின் இருக்கை வரிசை நீக்கப்பட்டது மட்டுமில்லாமல், கேபினின் நிறத்தையும், கருப்பு & சில்வர் என இரட்டை நிறத்திற்கு மாற்றியுள்ளார்.

வெறும் 2 கதவுகளுடன் வித்தியாசமான தோற்றத்தில் வலம் வரும் டாடா இண்டிகா கார்!! யாருப்பா அந்த மெக்கானிக்?!

இந்த மாடிஃபை மாற்றங்கள் அனைத்தும் சாதாரண ஒரு மெக்கானிக் கடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாடிஃபிகேஷன் பணிக்கு தேவைப்பட்ட பணம் குறித்த விபரங்களை காரின் உரிமையாளர் வெளியிடவில்லை. நமக்கு தெரிந்தவரை காரின் என்ஜின் அமைப்பில் கை வைத்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறோம்.

வெறும் 2 கதவுகளுடன் வித்தியாசமான தோற்றத்தில் வலம் வரும் டாடா இண்டிகா கார்!! யாருப்பா அந்த மெக்கானிக்?!

மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜினில் விற்பனை செய்யப்பட்டுவந்த இண்டிகாவில் பிறகு 1.2 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஃபியாட்டின் 1.3 லிட்டர் டீசல் உள்ளிட்ட என்ஜின்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

Most Read Articles

English summary
Modified Tata Indica Now Sports Only 2 Doors. Read In Tamil.
Story first published: Wednesday, March 10, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X