குறைவான விலையில் வருகிறது உலகளவில் பிரபலமான போர்ஷே டைகன் கார்!! இதன் டாப் ஸ்பீடே இவ்வளவா?!

விலை குறைவான டைகன் வேரியண்ட்டின் தயாரிப்பு பணியில் உள்ளதாக டீசர் ஒன்றின் மூலமாக போர்ஷே அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

குறைவான விலையில் வருகிறது உலகளவில் பிரபலமான போர்ஷே டைகன் கார்!! இதன் டாப் ஸ்பீடே இவ்வளவா?!

போர்ஷே அதன் பிரபலமான டைகனின் புதிய ஆரம்ப நிலை வேரியண்ட்டை அறிமுகப்படுத்தவுள்ளதாக கடந்த ஆண்டில் தகவல்கள் வெளியாகி இருந்தன. டைகனின் ஆரம்ப விலை தற்சமயம் ரூ.74 லட்சம் என்ற அளவில் உள்ளது.

குறைவான விலையில் வருகிறது உலகளவில் பிரபலமான போர்ஷே டைகன் கார்!! இதன் டாப் ஸ்பீடே இவ்வளவா?!

தற்போது போர்ஷே வெளியிட்டுள்ள டீசர் படத்தில் டைகனின் புதிய வேரியண்ட் ஃப்ரோஸன் பெர்ரி நிறத்தில் காட்சி தருகிறது. பின்பக்க-சக்கர-ட்ரைவ் காராக வெளிவரும் இந்த புதிய வேரியண்ட் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சீன சந்தையில் பிரத்யேகமாக அறிமுகமாகிவிட்டது.

குறைவான விலையில் வருகிறது உலகளவில் பிரபலமான போர்ஷே டைகன் கார்!! இதன் டாப் ஸ்பீடே இவ்வளவா?!

சீனாவில் இந்த பின்சக்கர ட்ரைவ் டைகன் காரில் 79.2kWh பேட்டரி தொகுப்பு (408 பிஎஸ்) வழங்கப்படுகிறது. இதனுடன் கூடுதல் தேர்வாக 93.4kWh செயல்திறன்மிக்க பேட்டரி ப்ளஸ் என்ற பேட்டரி தொகுப்பும் (476 பிஎஸ்) கொடுக்கப்படுகிறது.

குறைவான விலையில் வருகிறது உலகளவில் பிரபலமான போர்ஷே டைகன் கார்!! இதன் டாப் ஸ்பீடே இவ்வளவா?!

இதில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் 414கிமீ ரேஞ்சையும், செயல்திறன் வேரியண்ட் 489கிமீ ரேஞ்சையும் சீன சந்தையில் வழங்குகிறது. டைகனின் மற்ற வேரியண்ட்களுக்கு வழங்குவதுபோல் இந்த மலிவான வேரியண்ட்டிற்கும் 800 வோல்ட் சார்ஜிங் செட்அப் வழங்கப்படுகிறது.

குறைவான விலையில் வருகிறது உலகளவில் பிரபலமான போர்ஷே டைகன் கார்!! இதன் டாப் ஸ்பீடே இவ்வளவா?!

டைகுன் தற்சமயம் 4எஸ், டர்போ மற்றும் டர்போ எஸ் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தற்போதைய ஆரம்ப நிலை வேரியண்ட்டான அனைத்து-சக்கர-ட்ரைவ் 4எஸ்-இல் மேற்கூறப்பட்ட பேட்டரி தேர்வுகள் மேற்கூறப்பட்ட அளவுகளை காட்டிலும் முறையே 122 பிஎஸ் மற்றும் 95 பிஎஸ் ஆற்றலை அதிகமாக வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படுகின்றன.

குறைவான விலையில் வருகிறது உலகளவில் பிரபலமான போர்ஷே டைகன் கார்!! இதன் டாப் ஸ்பீடே இவ்வளவா?!

இந்த என்ஜின் ஆற்றல்களினால் 0-வில் இருந்து 100kmph வேகத்தை 4எஸ் வேரியண்ட் பின்சக்கர ட்ரைவ் காரை காட்டிலும் 1.4 வினாடிகள் விரைவாகவும், 20kmph கூடுதலாக அதிகப்பட்சமாக மணிக்கு 250கிமீ வேகத்திலும் இயங்கக்கூடியதாக உள்ளது.

குறைவான விலையில் வருகிறது உலகளவில் பிரபலமான போர்ஷே டைகன் கார்!! இதன் டாப் ஸ்பீடே இவ்வளவா?!

இந்த வகையில் பார்த்தால் டைகனின் புதிய மலிவான வேரியண்ட்டின் அதிகப்பட்ச வேகம் 230kmph ஆகும். இந்த டீசர் படத்தில் புதிய டைகுன் காரின் அறிமுக தேதி குறித்த எந்த விபரத்தையும் போர்ஷே வெளியிடவில்லை.

Most Read Articles
மேலும்... #போர்ஷே #porsche
English summary
A More Affordable Entry-level Taycan Is In The Works
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X