விண்டேஜ் வாகனங்களுக்கான புதிய பதிவு விதி அறிமுகம்! இனி தைரியமா சாலையில் ஓட்டி போகலாம்!

விண்டேஜ் கார்களுக்கான புதிய பதிவு முறையை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுபற்றிய விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

விண்டேஜ் வாகனங்களுக்கான புதிய பதிவு விதி அறிமுகம்! இனி தைரியமா சாலையில் ஓட்டி போகலாம்!

பழமையான (விண்டேஜ்) வாகனங்களுக்கான புதிய பதிவு முறையை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) வெளியிட்டிருக்கின்றது. விண்டேஜ் வாகன உரிமையாளர்கள் சந்தித்து வரும் இன்னல்களைக் குறைக்கும் நோக்கில் இப்புதிய பதிவு முறை நாட்டில் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

விண்டேஜ் வாகனங்களுக்கான புதிய பதிவு விதி அறிமுகம்! இனி தைரியமா சாலையில் ஓட்டி போகலாம்!

தற்போதைய விதிகளின்படி, விண்டேஜ் வாகன உரிமையாளர்கள், அந்த வாகனங்களை ஏதேனும் நிகழ்வில் காட்சிப்படுத்த அல்லது வேறு சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக மட்டுமே பயன்படுத்த (ஓட்டிச் செல்ல) முடியும். ஆகையால், பெரும் பொருட் செலவில் பராமரிக்கப்படும் விண்டேஜ் வாகனங்கள் திரை மறைவிலோ அல்லது பார்கிங் பகுதியிலோ முடங்கி கிடக்கும் நிலை இந்தியாவில் தென்படுகின்றது.

விண்டேஜ் வாகனங்களுக்கான புதிய பதிவு விதி அறிமுகம்! இனி தைரியமா சாலையில் ஓட்டி போகலாம்!

இதனை மாற்றியமைக்கும் வகையிலேயே புதிய பதிவு அமைந்துள்ளது. குறிப்பாக, புதிய பதிவு விதி விண்டேஜ் வாகனங்கள் வலம் வர அனுமதிக்கின்றது. ஆனால், அவற்றை வழக்கமான வாகனங்களைபோல் அனுமதிப்பதில்லை. அதேசமயம், தேவைக்கேற்ப பெரிய இடைவெளிக்கு இடையில் விண்டேஜ் வாகனங்களை பயன்படுத்தலாம் என புதிய பதிவு விதி கூறுகின்றது.

விண்டேஜ் வாகனங்களுக்கான புதிய பதிவு விதி அறிமுகம்! இனி தைரியமா சாலையில் ஓட்டி போகலாம்!

இந்த மாற்றத்தை விண்டேஜ் வாகன பயனர்களின் கோரிக்கை மற்றும் கருத்துகளின் அடிப்படையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கொண்டு வந்திருக்கின்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதுகுறித்த ஓர் அறிவிப்பை அமைச்சகம் வெளியிட்டிருந்தது.

விண்டேஜ் வாகனங்களுக்கான புதிய பதிவு விதி அறிமுகம்! இனி தைரியமா சாலையில் ஓட்டி போகலாம்!

அதில், பயன்பாட்டில் இருக்கும் கடுமையான விண்டேஜ் வாகனம் பதிவு குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறியிருந்தது. தொடர்ந்து, பழைய வாகனங்கள் விஷயத்தில் மிகக் கடுமையான விதிகளைக் கொண்டு வருவதற்கான வேலைகளையும் அமைச்சகம் மேற்கொண்டது.

விண்டேஜ் வாகனங்களுக்கான புதிய பதிவு விதி அறிமுகம்! இனி தைரியமா சாலையில் ஓட்டி போகலாம்!

இதன்படி, ஒன்றிய மற்றும் மாநில அளவில் அதிகாரிகள் குழுக்களை அமைத்து விண்டேஜ் மற்றும் விண்டேஜ் அல்லாத வாகனங்களைக் கண்டறியும் பணிகளையும் அமைச்சகம் முடுக்கியது. இத்துடன், விண்டேஜ் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் பயன்படுத்தும் வகையிலும் புதிய விதி இருக்க வேண்டும் என்பதில் அமைச்சகம் அதிக கவனத்துடன் செயல்பட்டது.

விண்டேஜ் வாகனங்களுக்கான புதிய பதிவு விதி அறிமுகம்! இனி தைரியமா சாலையில் ஓட்டி போகலாம்!

இதனடிப்படையிலேயே புதிய விண்டேஜ் வாகன பதிவு விதி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் விதியின்படி, விண்டேஜ் வாகனங்கள் செயல் விளக்கம் செய்து காட்ட, தொழில்நுட்ப ஆராய்ச்சி, எரிபொருள் நிரப்புதல், பராமரிப்பு, கண்காட்சிகள், விண்டேஜ் பேரணிகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் வகையில் மட்டுமே உள்ளது.

விண்டேஜ் வாகனங்களுக்கான புதிய பதிவு விதி அறிமுகம்! இனி தைரியமா சாலையில் ஓட்டி போகலாம்!

இதில் இன்னும் சில தளர்வுகளைத் தரும் வகையிலேயே புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது. விண்டேஜ் வாகனங்களை வர்த்தக பயன்படுத்துவதை தவிர்த்து பிற பயன்பாட்டுகளுக்கு உபயோகப்படுத்த புதிய விதி வழி வகுத்துள்ளது. புதிய பதிவு முறையான புதிய பதிவெண்ணிற்கான ஓர் விதியல்ல.

விண்டேஜ் வாகனங்களுக்கான புதிய பதிவு விதி அறிமுகம்! இனி தைரியமா சாலையில் ஓட்டி போகலாம்!

பழைய பதிவெண்ணுடனே அவை இயங்கும். இது ஏற்கனவே விண்டேஜ் வாகனங்களுக்கு இருப்பவற்றிற்கு மட்டுமே பொருந்தும். புதிதாக விண்டேஜ் வாகனத்தில் நுழைய இருக்கும் வாகனங்களுக்கு புதிய பதிவெண் வழங்கப்படும். அதாவது, இறக்குமதி செய்யப்படும் விண்டேஜ் வாகனம் அல்லது புதிதாக 50ஆம் ஆண்டை எட்டும் விண்டேஜ் வாகனங்களுக்கு புதிய பதிவெண் வழங்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

விண்டேஜ் வாகனங்களுக்கான புதிய பதிவு விதி அறிமுகம்! இனி தைரியமா சாலையில் ஓட்டி போகலாம்!

மாநிலத்தை குறிக்கக் கூடிய இரு எழுத்துகள், விண்டேஜ் என குறிப்பதற்கு 'விஏ' (VA) எழுத்துகள், பின்னர் இரு எழுத்து வரிசை, இவற்றுடன் கடைசியாக மாநிலத்தால் ஒதுக்கப்பட்ட நான்கு இலக்க எண்களே புதிய விண்டேஜ் வாகனங்களுக்கு பதிவெண்ணாக வழங்கப்பட இருக்கின்றது.

விண்டேஜ் வாகனங்களுக்கான புதிய பதிவு விதி அறிமுகம்! இனி தைரியமா சாலையில் ஓட்டி போகலாம்!

புதிய பதியப்படும் விண்டேஜ் வாகனங்கள் பற்றிய விவரங்களும் பாரிவாஹன் தளத்தில் கிடைக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிதாக இதில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு முதல் முறை கட்டணமாக ரூ. 20 ஆயிரம் வசூலிக்கப்பட இருக்கின்றது. இதன் பின்னர் மறுபதிவு அல்லது புதுப்பித்தல் செய்ய ரூ. 5 ஆயிரம் வரை வசூலிக்கப்பட இருக்கின்றது.

விண்டேஜ் வாகனங்களுக்கான புதிய பதிவு விதி அறிமுகம்! இனி தைரியமா சாலையில் ஓட்டி போகலாம்!

புதிதாக விண்டேஜ் வாகனம் பதிவு செய்யப்பட வேண்டுமானால் காப்பீடு கட்டாயம் இருக்க வேண்டும். இறக்குமதி செய்யப்பட்ட வாகனமாக இருந்தால் நுழைவு பில் மற்றும் அதற்கான வரி செலுத்தியிருத்தல் அவசியம். இதுவே இந்தியாவிலேயே பதிவு செய்யப்பட்ட வாகனமாக இருந்தால் பழைய ஆவணங்கள் அனைத்து இருத்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

விண்டேஜ் வாகனங்களுக்கான புதிய பதிவு விதி அறிமுகம்! இனி தைரியமா சாலையில் ஓட்டி போகலாம்!

இவற்றைக் கொண்டு பதிவு செய்யப்படும் சான்றிதழ் 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் பின்னர் மீண்டும் புதுப்பித்தல் செய்ய வேண்டும். இந்த வாகனங்களை பிறருக்கு விற்பனைச் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் அந்தந்த மாநில போக்குவரத்துத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
MoRTH Announced New Set Of Rules For Vintage Car Registration. Read In Tamil.
Story first published: Tuesday, July 20, 2021, 20:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X