லாரியோட முன்பக்கம் மாதிரி இருக்கு! அலிபாபா தளத்தில் மிக மிக மலிவான விலையில் மின்சார கார்... ஆனா நமக்கு இல்ல!

பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான அலிபாபாவில் மிக மிக குறைவான விலையில் ஓர் எலெக்ட்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த உலகின் மிக மிக குறைந்த விலை எலெக்ட்ரிக் கார்குறித்த முக்கிய விபரங்களை இப்பதிவில் காணலாம், வாங்க.

லாரியோட முன்பக்கம் மாதிரி இருக்கு! அலிபாபா தளத்தில் மிக மிக குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்! சீனர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

உலகின் மிக மிக மலிவு விலைக் கொண்ட எலெக்ட்ரிக் கார் இந்த உலகத்தில் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. electricKar (எலெக்ட்ரிக்கார்) எனும் நிறுவனமே உலகின் மிக மிக விலை குறைந்த எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்திருக்கும் நிறுவனம் ஆகும். K5 (கே5) எனும் பெயரில் அக்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

லாரியோட முன்பக்கம் மாதிரி இருக்கு! அலிபாபா தளத்தில் மிக மிக குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்! சீனர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

கார் உருவத்தில் இருக்கும் இது கார் அல்ல. இது ஓர் குவாட்ரி சைக்கிள் ரக வாகனமாகும். இருவர் மட்டுமே செல்லக் கூடியது. மிகவும் அடக்கமான உருவத்தையும், மிகக் குறைவான பயன்பாட்டையும் கொண்ட வாகனமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. எனவேதான் மிக மிக குறைந்த விலையில் எலெக்ட்ரிக்கார்-இன் கே5 மின்சார கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

லாரியோட முன்பக்கம் மாதிரி இருக்கு! அலிபாபா தளத்தில் மிக மிக குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்! சீனர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

அதேசமயம், இந்த மின்சார காரில் என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவல்கள் வெளியிடவில்லை. 2,100 அமெரிக்க டாலர்கள் எனும் விலை இக்காருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 1.54 லட்சம் ஆகும். இது தோராயமாக வழங்கப்பட்ட விலை மதிப்பு மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய குறைவன விலையிலேயே கே5 மின்சார கார் இந்த உலகில் விற்பனைக்கு வந்துள்ளது.

லாரியோட முன்பக்கம் மாதிரி இருக்கு! அலிபாபா தளத்தில் மிக மிக குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்! சீனர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

இதில் சோகம் என்ன என்னவென்றால் நமது அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் மட்டுமே கே5 விற்பனைக்கு வந்திருக்கின்றது. பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா வாயிலாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. மணிக்கு 40 கிமீ வேகம் எனும் உச்சபட்ச வேகத்தில் இக்கார் பயணிக்கும் திறன் கொண்டது.

லாரியோட முன்பக்கம் மாதிரி இருக்கு! அலிபாபா தளத்தில் மிக மிக குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்! சீனர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 52 கிமீ தொடங்கி 66 கிமீ வரை பயணிக்க முடியும். ஆனால், இந்த ரேஞ்ஜ் திறனை பெற 8 மணி நேரம் வரையாவது இக்காரை நாம் சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். அதாவது, கே5 எலெக்ட்ரிக் காரை முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு மணி நேரம் தேவைப்படுமாம்.

லாரியோட முன்பக்கம் மாதிரி இருக்கு! அலிபாபா தளத்தில் மிக மிக குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்! சீனர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

இந்த காரையே எலெக்ட்ரிக்கார் நிறுவனம் ரீகல் ரேப்டர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாயிலாக உற்பத்தி செய்து வருகிறது. இது ஓர் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் பிரத்யேக நிறுவனம் ஆகும். இதன் வாயிலாக உலகிலேயே மிக மிக குறைவான விலையில் எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்து எலெக்ட்ரிக்கார் நிறுவனம் சீனாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

லாரியோட முன்பக்கம் மாதிரி இருக்கு! அலிபாபா தளத்தில் மிக மிக குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்! சீனர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

மிக மிக சிறிய உருவம், துள்ளியமாகக் கூற வேண்டுமானால் பழங்கால லாரியின் முன்பக்கத்தைப் போன்ற மிக எளிமையான உருவம், குறைவான அம்சங்கள் ஆகியவற்றினால் இது மிக மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் இந்திய அறிமுகம் கேள்விக் குறியே. அதேசமயம், ஆன்லைன் வாயிலாக இதனை இறக்குமதி செய்தால், ஆர்டிஓ-வின் அனுமதி இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

லாரியோட முன்பக்கம் மாதிரி இருக்கு! அலிபாபா தளத்தில் மிக மிக குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்! சீனர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக Tata Nexon EV (டாடா நெக்ஸான் இவி) இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை மாடலின் விலையே ரூ. 13.99 லட்சம் ஆகும். அண்மையில் தான் இந்த குறைந்த விலை எலெக்ட்ரிக் காரின் விலையை டாடா உயர்த்தியது. இருப்பினும், தற்போதும் டாடா நெக்ஸான் இவி-யே நாட்டின் குறைந்த விலை மின்சார காராக இருக்கின்றது.

லாரியோட முன்பக்கம் மாதிரி இருக்கு! அலிபாபா தளத்தில் மிக மிக குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்! சீனர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

ஆம், டாடா நெக்ஸான் இவி-யின் ஆரம்ப நிலை மாடலின் விலையில் எந்த மாற்றத்தையும் நிறுவனம் செய்யவில்லை. இது பழைய விலையிலேயே விற்கப்பட்டு வருகின்றது. அதேசமயம், எலெக்ட்ரிக் காரின் உயர்நிலை வேரியண்டுகளான எக்ஸ்இசட்ப்ளஸ் (XZ+) மற்றும் எக்ஸ்இசட்ப்ளஸ் லக்ஸ் (XZ+ LUX) ஆகியவற்றின் விலையில் ரூ. 9 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

லாரியோட முன்பக்கம் மாதிரி இருக்கு! அலிபாபா தளத்தில் மிக மிக குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்! சீனர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

இவற்றின் விலையை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே நிறுவனம் உயர்த்தியிருந்தது. இந்த நிலையில் மீண்டும் நடப்பு மாதமும் (ஆகஸ்டு) இதன் விலையை உயர்த்தி இந்தியர்களை டாடா அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் விளைவாக ரூ. 15.56 லட்சத்திற்கு விற்கப்பட்டு வந்த XZ+ தற்போது ரூ. 15.65 லட்சமாக உயர்ந்துள்ளது. இதோபோல் முன்னதாக ரூ. 16.56 லட்சம் என்ற விலையில் விற்கப்பட்டு வந்த XZ+ Lux தற்போது ரூ. 16.65 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகின்றது.

Most Read Articles
English summary
Most affordable electric quadricycle k5 goes Sale in china via alibaba
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X