மக்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... புதிய உச்சத்தில் ஹூண்டாய் வென்யூ கார் விற்பனை... ஆச்சரியத்தில் வாகன சந்தை

ஹூண்டாய் வென்யூ கார் விற்பனையில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மக்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... புதிய உச்சத்தில் ஹூண்டாய் வென்யூ கார் விற்பனை... ஆச்சர்யத்தில் வாகன சந்தை!

ஹூண்டாய் நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களில் வென்யூ-வும் ஒன்று. இது ஓர் சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இப்பிரிவில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களிலேயே இந்த கார்தான் மிக சிறந்த விற்பனையாகும் கார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... புதிய உச்சத்தில் ஹூண்டாய் வென்யூ கார் விற்பனை... ஆச்சர்யத்தில் வாகன சந்தை!

2021 ஜனவரி மாதத்தில் இக்காருக்கு கிடைத்த விற்பனை எண்ணிக்கையை வைத்தே இத்தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றது. அதாவது, 2020 ஜனவரி மாதத்தைக் காட்டிலும் 2021ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இக்கார் அமோகமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... புதிய உச்சத்தில் ஹூண்டாய் வென்யூ கார் விற்பனை... ஆச்சர்யத்தில் வாகன சந்தை!

மிக தெளிவாக கூற வேண்டுமானால் 2020 ஜனவரியில் 6,733 யூனிட்டுகளாக விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டின் ஜனவரி மாத இறுதியில் 11,779 ஆக மாறியிருக்கின்றது. இது 75 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். இந்த தரவை வைத்தே நாட்டின் மிக சிறப்பான விற்பனையைப் பெறும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் என ஹூண்டாய் வென்யூவை அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

மக்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... புதிய உச்சத்தில் ஹூண்டாய் வென்யூ கார் விற்பனை... ஆச்சர்யத்தில் வாகன சந்தை!

இதற்கு அடுத்த இடத்தில் மாருதி சுசுகியின் விட்டாரா ப்ரெஸ்ஸா கார் இருக்கின்றது. 10,623 யூனிட்டுகளுக்கான விற்பனையைப் பெற்று இரண்டாம் இடத்தை இக்கார் பிடித்திருக்கின்றது. இது கடந்த 2020ம் ஆண்டைக் காட்டிலும் 4.82 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் சமீபத்திய அறிமுகமான கியா சொனெட் கார் இருக்கின்றது.

மக்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... புதிய உச்சத்தில் ஹூண்டாய் வென்யூ கார் விற்பனை... ஆச்சர்யத்தில் வாகன சந்தை!

8,859 யூனிட்டுகளை விற்பனைச் செய்து இவ்விடத்தை இக்கார் பிடித்திருக்கின்றது. தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா இக்காரை கடந்த ஆண்டின் இறுதியிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அதன் புகழ்மிக்க செல்டோஸ் எஸ்யூவி காரின் அம்சங்களைத் தழுவியவாறு இக்காரை அறிமுகப்படுத்தியது.

மக்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... புதிய உச்சத்தில் ஹூண்டாய் வென்யூ கார் விற்பனை... ஆச்சர்யத்தில் வாகன சந்தை!

இதற்கு அடுத்தபடியாக டாடா நிறுவனத்தின் மிகுந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட காரான நெக்ஸான் உள்ளது. சுமார் 143.19 சதவீத விற்பனையை வளர்ச்சியைப் பெற்று இக்கார் நான்காம் இடத்தைப் பிடித்திருக்கின்றது. அதாவது, 2020ம் ஆண்டில் வெறும் 3,382 யூனிட்டுகளாக மட்டுமே காணப்பட்ட இதன் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2021 ஆண்டில் 8,225 ஆக மாறியிருக்கின்றது.

மக்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... புதிய உச்சத்தில் ஹூண்டாய் வென்யூ கார் விற்பனை... ஆச்சர்யத்தில் வாகன சந்தை!

இது மிகப்பெரிய விற்பனை வளர்ச்சி என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அதீத வளர்ச்சியைப் பார்த்து ஒட்டுமொத்த இந்திய வாகன சந்தையுமே மிரண்டுநிற்கின்றது. தொடர்ந்து, ஐந்தாவது இடத்தில் நிஸான் மேக்னைட் கார் உள்ளது. இக்காருக்கு டஃப் கொடுக்கும் விதமாக ரெனால்ட் நிறுவனம் அதன் கைகர் காரை விரைவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

மக்கள் மத்தியில் செம்ம ரெஸ்பான்ஸ்... புதிய உச்சத்தில் ஹூண்டாய் வென்யூ கார் விற்பனை... ஆச்சர்யத்தில் வாகன சந்தை!

இந்த கார் நிஸான் மேக்னைட் காருக்கு மட்டுமின்றி சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிற கார்களுக்கும் கடுமையான போட்டியளிக்க இருக்கின்றது. இந்த கார் மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், ரூ. 5 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Most Top Selling SubCompact SUV In January 2021; Hyundai Venue Gets No 1 Place. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X