Just In
- 14 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
தேனியில் டிடிவி தினகரன் தங்க வீடு பார்க்கும் அமமுகவினர்.. கலக்கத்தில் இரண்டு தலைகள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எம்பிவி கார் விற்பனையில் தொடர்ந்து ஜொலிக்கும் மாருதி கார்கள்!! எப்போதும் போல் எர்டிகா டாப்!
கடந்த 2021 ஜனவரி மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எம்பிவி கார்களை பற்றிய விபரங்கள் தெரியவந்துள்ளன. அவை என்னென்ன என்பதை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உள்நாட்டு பயணிகள் கார் விற்பனை ஒட்டுமொத்தமாக கடந்த 3 மாதங்களில் 3 லட்சத்தை கடந்துள்ளது. இதற்கு காம்பெக்ட் மற்றும் நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களின் பங்கு மிக பெரியது என்றால் அது மிகையில்லை.

இதற்காக எம்பிவி கார்கள் விற்பனையையும் நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. இந்தியாவில் எம்பிவி கார் என்றாலே பலருக்கு மனதில் சட்டென்று தோன்றும் மாடல் மாருதி சுஸுகி எர்டிகா தான்.

இதனால் இந்த மாருதி தயாரிப்பின் விற்பனை ஒவ்வொரு மாதத்திலும் உச்சத்திலேயே உள்ளது. கடந்த 2021 ஜனவரி மாதத்தில் கூட மொத்தம் 9,565 எர்டிகா எம்பிவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை 4,997 எர்டிகா கார்கள் விற்பனையான 2020 ஜனவரி மாதத்தை காட்டிலும் 91.4 சதவீதம் அதிகமாகும். கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட இரண்டாவது கார் மாடலாக மஹிந்திரா பொலிரோ உள்ளது.
Rank | Model | Jan'21 | Jan'20 | Growth (%) |
1 | Maruti Ertiga | 9,565 | 4,997 | 91.4 |
2 | Mahindra Bolero | 7,567 | 7,223 | 4.7 |
3 | Renault Triber | 4,062 | 4,119 | -1.38 |
4 | Toyota Innova Crysta | 3,939 | 2,575 | 52.9 |
5 | Maruti XL6 | 3,119 | 770 | 305 |
6 | Kia Carnival | 328 | 450 | -27.1 |
7 | Mahindra Marazzo | 175 | 1,267 | -86 |
8 | Datsun Go+ | 30 | 55 | -45 |
9 | Toyota Vellfire | 0 | 0 | 0 |

கடந்த மாதத்தில் 7,567 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள இந்த மஹிந்திரா எம்பிவி காரின் 2020 ஜனவரி மாத விற்பனையும் இதே அளவில் தான் இருந்துள்ளது. ரெனால்ட் ட்ரைப்பர் மூன்றாவது இடத்தை 4,062 யூனிட்கள் விற்பனையுடன் பிடித்துள்ளது.

இதன் விற்பனையும் 2020 ஜனவரி மாதத்தை காட்டிலும் வெறும் 1.38 சதவீதம் மட்டுமே அதிகமாக உள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, எல்லா மாதங்களிலும் சீராக விற்பனையாகும் கார்களுள் ஒன்று.

2020 ஜனவரியில் 2,575 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில் கடந்த 2021 ஜனவரியில் 3,939 இன்னோவா கார்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. மாருதி சுஸுகியின் மற்றொரு எம்பிவி கார் மாடலான எக்ஸ்எல்6-ன் விற்பனை கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

எந்த அளவிற்கு என்றால், மாருதியின் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்படும் எக்ஸ்எல்6 2020 ஜனவரியில் வெறும் 770 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இந்த எண்ணிக்கையை காட்டிலும் சுமார் 305 சதவீதம் அதிகமாக 3,119 எக்ஸ்எல்6 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த ஐந்து எம்பிவி கார்களை தவிர்த்து மற்றவைகளின் விற்பனை பெரிய அளவில் இல்லை. கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா கார்னிவல் 328 யூனிட்களும், மஹிந்திரா மராஸ்ஸோ 175 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. 30 டட்சன் கோ+ கார்கள் கடந்த மாதத்தில் விற்பனையாகி உள்ளன.