2021 ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்டின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் துவக்கம்!! சரியும் ஆடியின் விற்பனையை உயர்த்துமா?

2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் சொகுசு காரின் தயாரிப்பு பணிகளை ஆடி நிறுவனம் இந்தியாவில் அதன் தொழிற்சாலையில் துவங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நமக்கு கிடைக்க பெற்றுள்ள படங்களினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்டின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் துவக்கம்!! சரியும் ஆடியின் விற்பனையை உயர்த்துமா?

இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி கொண்டிருந்த ஆடி எஸ்யூவி கார்களுள் ஒன்றாக க்யூ5 மாடல் விளங்கியது. ஆனால் அதன்பின் கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வந்த புதிய மாசு உமிழ்வு விதிகளினால் இந்த சொகுசு எஸ்யூவி காரின் விற்பனையை இந்திய சந்தையில் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய சூழல் ஆடி நிறுவனத்திற்கு ஏற்பட்டது.

2021 ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்டின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் துவக்கம்!! சரியும் ஆடியின் விற்பனையை உயர்த்துமா?

தற்போது மீண்டும் க்யூ5 எஸ்யூவி மாடலை ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் கொண்டுவரும் பணிகளில் ஆடி நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. புதிய ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் காரின் முதல் மாதிரி தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்யப்பட்டு ஆடியின் இந்திய, அவ்ரங்காபாத் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

2021 ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்டின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் துவக்கம்!! சரியும் ஆடியின் விற்பனையை உயர்த்துமா?

பாகங்களாக இறங்குமதி செய்யப்பட்டு, இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவதால், இந்த புதிய ஆடி எஸ்யூவி கார் சிகேடி முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் கார் கடந்த 2020ஆம் ஆண்டில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலினால் இந்த 1 வருட தாமதமாகும்.

2021 ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்டின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் துவக்கம்!! சரியும் ஆடியின் விற்பனையை உயர்த்துமா?

திருத்தியமைக்கப்பட்ட வெளிப்புறம் மற்றும் புத்துணர்ச்சியான உட்புறத்தை பெற்றுவரும் இந்த அப்டேட் செய்யப்பட்ட ஆடி எஸ்யூவி காரில் பிஎஸ்6-க்கு இணக்கமான என்ஜின் வழங்கப்பட உள்ளது. புதிய மாசு உமிழ்வு விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால் க்யூ5 மட்டுமின்றி க்யூ3, க்யூ7 உள்பட ஆடி நிறுவனம் அதன் பெரும்பாலான டீசல் கார்களின் விற்பனையையும் இந்தியாவில் நிறுத்தி இருந்தது.

2021 ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்டின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் துவக்கம்!! சரியும் ஆடியின் விற்பனையை உயர்த்துமா?

இந்த மாற்றம் ஆடி இந்தியா நிறுவனத்தின் விற்பனையில் மிக பெரிய சரிவை கொண்டுவந்துள்ளது. அப்டேட் செய்யப்பட்ட க்யூ5 காரில் மாற்றியமைக்கப்பட்ட ஸ்டைலில் முன்பக்க க்ரில், புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள் & டெயில்லேம்ப்கள் மற்றும் மறுவடிவம் பெற்ற முன் & பின்பக்க பம்பர்கள் அடங்குகின்றன.

2021 ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்டின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் துவக்கம்!! சரியும் ஆடியின் விற்பனையை உயர்த்துமா?

கடந்த ஆண்டில் வெளியீடு செய்யப்பட்ட புதிய ஆடி க்யூ5 காரின் சர்வதேச மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி தொழிற்நுட்பம் முக்கிய அம்சங்களுள் ஒன்றாக வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இது இந்திய சந்தையில் வழங்கப்படுமா என்பது சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது. புதிய க்யூ5-இன் உட்புறத்தில் லேஅவுட் தோற்றம் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

2021 ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்டின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் துவக்கம்!! சரியும் ஆடியின் விற்பனையை உயர்த்துமா?

இதன் உட்புற டேஸ்போர்டில் எம்ஐபி3 ப்ளாட்ஃபாரத்துடன் பெரிய அளவில், 10.1 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அமேசான் அலெக்ஸா ஒருங்கிணைப்புடன் இணைப்பு கார் தொழிற்நுட்பமும் கூடுதல் வசதியாக இதன் கேபினில் சேர்க்கப்பட்டுள்ளது.

2021 ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்டின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் துவக்கம்!! சரியும் ஆடியின் விற்பனையை உயர்த்துமா?

ஆடி இந்தியா நிறுவனம் 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் காரை நடப்பு 2021ஆம் ஆண்டின் நவம்பர் மாத இறுதியில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கிறோம். வருகிற நவம்பர் மாத இறுதியிலோ அல்லது டிசம்பர் மாத துவக்கத்திலோ அறிமுகப்படுத்தப்பட்டால் கூட, புதிய க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டு கிட்டத்தட்ட 1.5 வருடங்கள் நிறைவடைந்திருக்கும்.

2021 ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்டின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் துவக்கம்!! சரியும் ஆடியின் விற்பனையை உயர்த்துமா?

ஆடி நிறுவனம் அதன் டீசல் கார்கள் அனைத்தின் விற்பனையையும் இந்தியாவில் நிறுத்தி கொண்டுள்ளதாக முன்பே கூறியிருந்தோம். இதனால் புதிய க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்டிலும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினே பொருத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது. புதிய மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப டீசல் என்ஜின்களை பிஎஸ்6-க்கு இணக்கமானதாக மாற்றுவது செலவு மிகுந்த விஷயமாக உள்ளது.

2021 ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்டின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் துவக்கம்!! சரியும் ஆடியின் விற்பனையை உயர்த்துமா?

என்ஜினை தயாரிப்பதில் அதிக செலவு செய்தால், வாகனத்தின் விலையினை அதற்கேற்ப அதிகமாக நிர்ணயிக்க வேண்டி இருக்கும். இதனாலேயே இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியில் இருந்து சொகுசு கார்களை மட்டுமே விற்பனை ஆடி வரையில் பிஎஸ்6 டீசல் என்ஜினை வழங்குவதை விரும்புவதில்லை.

2021 ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்டின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் துவக்கம்!! சரியும் ஆடியின் விற்பனையை உயர்த்துமா?

அதிகப்பட்சமாக 242 குதிரை ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2021 க்யூ5-இன் இந்த 2.0 டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. என்ஜினின் ஆற்றலானது குவாட்ரோ அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டத்தின் வாயிலாக காரின் நான்கு சக்கரங்களுக்கும் வழங்கப்படும். இந்தியாவில் இந்த ஆடி எஸ்யூவி காருக்கு விற்பனையில் போட்டியாக லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி உள்ளிட்டவை உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi India has today commenced local production of the soon to be launched Audi Q5 at the SAVWIPL plant in Aurangabad.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X