அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ஆடி ஏ4 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

அதிக சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள புதிய ஆடி ஏ4 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த மாடலின் முக்கிய அம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ஆடி ஏ4 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

கடந்த 2007ம் ஆண்டிலிருந்து ஆடி ஏ4 கார் இந்தியாவில் விற்பனையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்தததையடுத்து, ஆடி ஏ4 கார் இந்தியாவில் விற்பனையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், வடிவமைப்பில் மாற்றங்களுடன், பிஎஸ்-6 தரத்திற்கு இணையான புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வில் புதிய ஆடி ஏ4 சொகுசு கார் மீண்டும் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ஆடி ஏ4 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஆடி ஏ4 கார் வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்தித்துள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. புதிய டிசைனில் கொடுக்கப்பட்டுள்ள ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் மற்றும் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் மற்றும் அளவில் பெரிதாக காட்சி தரும் புதிய க்ரில் அமைப்பு ஆகியவை தோற்றத்தை வசீகரமாக மாற்றி இருக்கின்றன.

அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ஆடி ஏ4 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் புதிய அலாய் வீல்கள் மற்றும் சரிவக அமைப்பிலான புகைப்போக்கி குழல் முனைகள் ஆகியவையும் இந்த காரின் மதிப்பை உயர்த்தும் வகையில் இருக்கின்றன.

அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ஆடி ஏ4 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஆடி ஏ4 சொகுசு காரின் இன்டீரியர் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் 10.11 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. வாய்ஸ் கமாண்ட் வசதி மூலமாக கட்டுப்படுத்தலாம். அதேபோன்று, வெர்ச்சுவல் காக்பிட் முறையில் தகவல்களை வழங்கும் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது.

அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ஆடி ஏ4 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளும் உள்ளன. கால் அசைவு மூலமாக பூட் ரூம் மூடியை தானியங்கி முறையில் திறக்கும் வசதியும் உள்ளது. இந்த காரில் 460 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது.

அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ஆடி ஏ4 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஆடி ஏ4 சொகுசு காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி (எஸ் ட்ரோனிக்) கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 150 எச்பி பவரை வழங்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்ட நிலையில், தற்போது சக்திவாய்ந்த பெட்ரோல் எஞ்சின் தேர்வில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ஆடி ஏ4 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 7.3 வினாடிகளில் எட்டிவிடும். ஆடி ட்ரைவ் செலக்ட் மூலமாக கம்ஃபோர்ட், ஆட்டோ, இன்டிவிஜுவல் என பல விதமான டிரைவிங் மோடுகளில் வைத்து இயக்குவதற்கான வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ஆடி ஏ4 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஆடி ஏ4 சொகுசு கார் நீலம், வெள்ளை, கருப்பு, சில்வர் மற்றும் சாம்பல் ஆகிய 5 வண்ணங்களில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும்.

அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ஆடி ஏ4 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த கார் பிரிமீயம் ப்ளஸ் மற்றும் டெக்னாலஜி என இரண்டு வேரியண்ட் தேர்வுகளில் கிடைக்கும். ஏற்கனவே இந்த காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. ரூ.2 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ஆடி ஏ4 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஆடி ஏ4 காரின் பிரிமீயம் ப்ளஸ் வேரியண்ட்டிற்கு ரூ.42.34 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டெக்னாலஜி வேரியண்ட் ரூ.46.67 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles
--

மேலும்... #ஆடி #audi
English summary
German luxury carmaker Audi has launched A4 facelift model in India and starting at Rs.42.34 lakhs (Ex-showroom).
Story first published: Tuesday, January 5, 2021, 10:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X