Just In
- 40 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
தேனியில் டிடிவி தினகரன் தங்க வீடு பார்க்கும் அமமுகவினர்.. கலக்கத்தில் இரண்டு தலைகள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செக்மெண்ட்டின் நீளமான கார்... பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்...
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் (BMW 3 Series Gran Limousine) இந்தியாவில் இன்று (ஜனவரி 21ம் தேதி) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய தலைமுறை 3 சீரிஸ் காரின் லாங் வீல்பேஸ் வெர்ஷனான இது, இந்திய சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்பட இரண்டு இன்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஸ்டாண்டர்டு 3 சீரிஸ் காருடன் ஒப்பிடும்போது, 3 சீரிஸ் க்ரான் லிமோசின் மாடலின் வீல்பேஸ் நீளம் 110 மிமீ அதிகம். இதன் மூலம் இந்த செக்மெண்ட்டில் நீளமான கார் என்ற பெருமையை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் பெற்றுள்ளது. 320எல்டி லக்ஸரி லைன், 330எல்ஐ லக்ஸரி லைன் மற்றும் 330எல்ஐ எம்-ஸ்போர்ட் (ஃபர்ஸ்ட் எடிசன்) ஆகிய வேரியண்ட்களில் இந்த கார் கிடைக்கும்.

2.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் என மொத்தம் இரண்டு இன்ஜின் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 258 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனை வழங்க வல்லது.

இந்த இரண்டு இன்ஜின் தேர்வுகளுடனும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது. இன்ஜின் சக்தியை இது பின் சக்கரங்களுக்கு செலுத்தும். இந்த லாங் வீல்பேஸ் 3 சீரிஸ், ரெகுலர் 3 சீரிஸ் உடன் இணைந்து விற்பனை செய்யப்படும். பீரிமியம் செடான் செக்மெண்ட்டின் எண்ட்ரி-லெவலில் ஜாகுவார் எக்ஸ்இ, மெர்சிடிஸ்-பென்ஸ் சி-க்ளாஸ் மற்றும் ஆடி ஏ4 உள்ளிட்ட கார்களுடன் போட்டியிடும்.

புதிய ஆடி ஏ4 சொகுசு செடான் கார் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் காரின் விலைகள் இன்று அறிவிக்கப்பட்டன. வேரியண்ட் வாரியாக விலை விபரத்தை நீங்கள் கீழே காணலாம்.
- பிஎம்டபிள்யூ 330எல்ஐ லக்ஸரி லைன் - 51.50 லட்ச ரூபாய்
- பிஎம்டபிள்யூ 320எல்டி லக்ஸரி லைன் - 52.50 லட்ச ரூபாய்
- பிஎம்டபிள்யூ 330எல்ஐ எம்-ஸ்போர்ட் (ஃபர்ஸ்ட் எடிசன்) - 53.90 லட்ச ரூபாய்
இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். அத்துடன் இவை அனைத்தும் அறிமுக சலுகை விலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த காரின் பெட்ரோல் இன்ஜின் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.2 வினாடிகளில் எட்டி விடும். அதே சமயம் டீசல் இன்ஜின் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 7.6 வினாடிகளில் எட்டி விடும். புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் காருக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டது.

அதே சமயம் புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் காரின் டெலிவரி பணிகளும் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளன. இந்த காரில் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்களுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பிஎம்டபிள்யூ நிறுவன கார்களுக்கே உரித்தான பெரிய கிட்னி க்ரில் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்டைலான ட்யூயல்-டோன் அலாய் வீல்கள், 3டி எல்இடி டெயில்லைட்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர பனரோமிக் சன்ரூஃப் மற்றும் பல்வேறு கூடுதல் வசதிகளும் இந்த புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் உட்புறத்தில் தாராளமான இட வசதியையும் இந்த புதிய மாடல் பெற்றுள்ளது.