பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ்30ஐ ஸ்போர்ட் எக்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்ஷோரூம் விலை ரூ.56.50 லட்சம்

எக்ஸ்3 கார்களின் வரிசையை விரிவுப்படுத்தும் நோக்கில் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ்30ஐ ஸ்போர்ட் எக்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ்30ஐ ஸ்போர்ட் எக்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்ஷோரூம் விலை ரூ.56.50 லட்சம்!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ்30ஐ ஸ்போர்ட்எக்ஸ் காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.56.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த புதிய எக்ஸ்3 காருக்கு ரூ.1.50 லட்சம் வரையிலான சலுகைகளையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ்30ஐ ஸ்போர்ட் எக்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்ஷோரூம் விலை ரூ.56.50 லட்சம்!

இந்த பிப்ரவரி 28ஆம் தேதி வரையில் மட்டுமே செல்லப்படியாகும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையின்படி புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ்30ஐ ஸ்போர்ட் எக்ஸ் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1.50 லட்சம் வரையிலான பணத்தை சேமிக்க முடியும்.

அதேநேரம் ஏற்கனவே விற்பனையில் உள்ள எக்ஸ்ட்ரைவ்30ஐ லக்சரி லைன் மற்றும் எக்ஸ்ட்ரைவ்20டி லக்சரி லைன் வேரியண்ட்களிலும் தொடர்ந்து பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார் விற்பனைக்கு கிடைக்கும். இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.61.80 லட்சம் மற்றும் ரூ.62.50 லட்சம் என்ற அளவில் உள்ளன.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ்30ஐ ஸ்போர்ட் எக்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்ஷோரூம் விலை ரூ.56.50 லட்சம்!

புதிய எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ்30ஐ காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரைவ்30ஐ லக்சரி லைனிலும் வழங்கப்படுகின்ற இதே பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 252 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இவற்றில் பொருத்தப்படுகிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ்30ஐ ஸ்போர்ட் எக்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்ஷோரூம் விலை ரூ.56.50 லட்சம்!

இந்த என்ஜினின் உதவியுடன் இந்த இரு வேரியண்ட்டிலும் 0-வில் இருந்து 100kmph வேகத்தை 6.3 வினாடிகளில் எட்டிவிட முடியும். இந்த பெட்ரோல் என்ஜின் உடன் இணைக்கப்படுகின்ற 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஸ்டெப்ட்ரானிக் ஸ்போர்ட் ட்ரான்ஸ்மிஷன் ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும்.

எக்ஸ்ட்ரைவ்20டி லக்சரி லைனில் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் அதே 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஸ்டெப்ட்ரானிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ்30ஐ ஸ்போர்ட் எக்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்ஷோரூம் விலை ரூ.56.50 லட்சம்!

இந்த டீசல் வேரியண்ட்டில் 100kmph வேகத்தை பெட்ரோல் வேரியண்ட்களை காட்டிலும் 8 வினாடிகள் முன்னதாக எட்டிவிட முடியும். புதிய எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ்30ஐ ஸ்போர்ட் எக்ஸ் வேரியண்ட்டில் வழக்கமான பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அடையாளமான கிட்னி வடிவிலான க்ரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள், ஆட்டோமேட்டிக் டெயில்கேட் மற்றும் 18 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ்30ஐ ஸ்போர்ட் எக்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்ஷோரூம் விலை ரூ.56.50 லட்சம்!

இந்த புதிய வேரியண்ட்டை மினரல் வெள்ளை, சோபிஸ்டோ க்ரே, ப்ளாக் சபையர் மற்றும் பைட்டோனிக் நீலம் என்ற நான்கு விதமான நிறங்களில் பெறலாம். எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ்30ஐ லக்சரி லைனில் பிஎம்டபிள்யூ லைவ் காக்பிட் ப்ரோஃபெஷ்னலும், புதிய எக்ஸ்ட்ரைவ்30ஐ ஸ்போர்ட் எக்ஸ் வேரியண்ட்டில் பிஎம்டபிள்யூ லைவ் காக்பிட் ப்ளஸும் வழங்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ லைவ் காக்பிட் ப்ளஸினால் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 8.8 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முப்பரிமாண நாவிகேஷன் மற்றும் அனலாக் ஸ்பீடோ மற்றும் டச்சோ உடன் 5.1 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றை இந்த புதிய வேரியண்ட் பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ்30ஐ ஸ்போர்ட் எக்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்ஷோரூம் விலை ரூ.56.50 லட்சம்!

இவற்றுடன் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் மற்றும் பயணிகள் இருக்கைகள், 3-நிலை ஆட்டோமேட்டிக் ஏசி, பார்க்கிங் உதவிக்கு பின்பக்கத்தை காட்டும் கேமிரா, சுற்றிலும் ஹை-ஃபை சவுண்ட் சிஸ்டம், தானியங்கி ஸ்டார்ட்-ஸ்டாப், சுற்றிலும் விளக்குகள் மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவையும் புதிய எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ்30ஐ ஸ்போர்ட் எக்ஸ் வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ்30ஐ ஸ்போர்ட் எக்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!! எக்ஸ்ஷோரூம் விலை ரூ.56.50 லட்சம்!

இதன் உட்புற கேபினை சென்சாடெக் கான்பெர்ரா பழுப்பு மற்றும் சென்சாடெக் கருப்பு நிறத்தேர்வுகளில் பெறலாம். பயணிகளின் பாதுகாப்பிற்கு இந்த புதிய வேரியண்ட்டில் 6 காற்றுப்பைகள், கார்னரிங் ப்ரேக்கிங் கண்ட்ரோல் உடன் டைனாமிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஆட்டோ ஹோல்ட் உடன் எலக்ட்ரிக் பார்க்கிங் ப்ரேக், எலக்ட்ரானிக் வாகன இம்பொளிசர் மற்றும் க்ராஷ் சென்சார் மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தைக்கான இருக்கை உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
The new BMW X3 xDrive30i SportX launched in India.
Story first published: Tuesday, February 16, 2021, 23:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X