இதுதான் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரா? செம்மமையா இருக்கு!!

விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் காட்சி தந்துள்ளது. இது தொடர்பான நமக்கு கிடைக்க பெற்றுள்ள ஸ்பை படத்தினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இதுதான் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரா? செம்மமையா இருக்கு!!

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டில் இருந்து தற்சமயம் எதிர்பார்க்கப்படும் கார்களுள் ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட்டும் ஒன்று. முதன்முதலாக இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் கடந்த ஜூலை மாத மத்தியில் இந்திய சாலையில் சோதனை செய்யப்பட்டது.

இதுதான் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரா? செம்மமையா இருக்கு!!

இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றிருந்த ஸ்பை படங்களை பற்றி நமது செய்திதளத்தில் கூட பார்த்திருந்தோம். இந்த நிலையில் தற்போது ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் ஒன்று டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் காட்சி தந்துள்ளதாக, ஷோரூமில் புத்துணர்ச்சியான தோற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் படத்தினை கார்வாலே செய்திதளம் வெளியிட்டுள்ளது.

இதுதான் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரா? செம்மமையா இருக்கு!!

இந்த ஸ்பை படத்தில் கார் முழுவதுமாக பளபளப்பான கருப்பு நிறத்தில் காட்சி தருகிறது. செய்தியை வெளியிட்ட கார்வாலே செய்திதளம் உடனடியாக தனது செய்தியினை நீக்கிவிட்டதால், இது உண்மையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் தானா? என்கிற சந்தேகம் எழுகிறது.

இதுதான் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரா? செம்மமையா இருக்கு!!

அதுமட்டுமின்றி, ஃபாக் விளக்கு பகுதியில் மஞ்சள் நிற விளக்குகளுடன் வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பெக்ட் எஸ்யூவி காரை போன்று இது காட்சியளிக்கிறது. இதனால் இந்த ஸ்பை படம் வெளிநாட்டில் உள்ள ஏதேனும் ஒரு டீலர்ஷிப் மையத்தில் எடுக்கப்பட்டிருப்பதற்கும் வாய்ப்புள்ளது.

இதுதான் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரா? செம்மமையா இருக்கு!!

தோற்றத்தை பொறுத்தவரையில், ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால் பெரிய மாற்றங்களை காரின் முன்பக்கத்தில் தான் எதிர்பார்க்க முடியும். மற்றப்படி காரின் பக்கவாட்டு மற்றும் பின்பகுதி, விற்பனையில் இருக்கும் ஈக்கோஸ்போர்ட் காரை ஒத்து காணப்படவே வாய்ப்புள்ளது.

இதுதான் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரா? செம்மமையா இருக்கு!!

கடந்த ஜூலையின் போது கிடைத்த ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரின் சோதனை ஓட்ட ஸ்பை படங்களில் கார் முன்பக்கத்தில் புதிய எல்இடி டிஆர்எல்-களை கொண்டிருந்தது. அதேபோல் முன் பம்பரின் இரு முனைகளிலும் ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தன.

இதுதான் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரா? செம்மமையா இருக்கு!!

சோதனை காரின் முன்பக்கம் மறைப்பால் மறைக்கப்பட்டு இருந்தாலும், ஹெட்லைட் பகுதி சற்று வித்தியாசமாக இன்னோரு டிஆர்எல் தொகுப்பை கொண்டிருப்பதை போன்று காட்சியளித்தது. இவற்றுடன் க்ரில் பகுதியில் தடிமனான பார்டரையும், புதிய டிசைனில் அலாய் சக்கரங்களையும் ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்று வரலாம்.

இதுதான் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரா? செம்மமையா இருக்கு!!

2012ல் இருந்து இந்தியாவில் விற்பனையில் இருக்கும் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு ஃபோர்டு நிறுவனம் வழங்கிய அப்கிரேட்கள் என்று பார்த்தால், குறைவு தான். உட்புற கேபினிலும் பெரிய அளவில் எந்த அப்கிரேடும் இல்லை என்பதால், ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காருக்கும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இதுதான் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரா? செம்மமையா இருக்கு!!

ஏனெனில் ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்பகுதியில் புதிய சிங்க் 3 இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம். அப்டேட் செய்யப்பட்ட டிசைனிலான டேஸ்போர்டுடன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல் ஈக்கோஸ்போர்டில் வழங்கப்பட்டுவரும் பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வும் திருத்தியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரா? செம்மமையா இருக்கு!!

என்ஜின் மொத்தமாக மாற்றப்படாவிடினும், என்ஜின் காருக்கு வழங்கும் ஆற்றல் சிறிது வேறுப்படலாம். தற்சமயம் ஈக்கோஸ்போர்ட்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ற இரு என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இதில் பெட்ரோல் என்ஜின் 121 பிஎச்பி மற்றும் 149 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இதுதான் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரா? செம்மமையா இருக்கு!!

டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 99 பிஎச்பி மற்றும் 215 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்குகிறது. இந்த ஆற்றல் அளவுகளில் சற்று அதிகரிப்பு அல்லது குறைக்கப்படலாம். டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (பெட்ரோல் என்ஜின் மட்டும்) வழங்கப்படுகின்றன.

இதுதான் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரா? செம்மமையா இருக்கு!!

கிட்டத்தட்ட 10 வருடங்களாக விற்பனையில் இருப்பதால் அவ்வப்போது இவ்வாறான அப்கிரேட்களை கொண்டுவர வேண்டியது அவசியமாகும். தற்சமயம் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.19 லட்சத்தில் இருந்து ரூ.11.70 லட்சம் வரையில் உள்ளன.

இதுதான் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரா? செம்மமையா இருக்கு!!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில் பாதுகாப்பு அம்சங்களாக இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், பாதுகாப்பான க்ளட்ச் ஸ்டார்ட், வேக எல்லையுடன் க்ரூஸ் கண்ட்ரோல், என்ஜின் இம்பொளிசர், ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக பார்க்கிங் சென்சார்கள், குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை செட்அப், காரின் வேகத்தை உணர்ந்து லாக் ஆகும் கதவுகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
Is this the new Ford EcoSport facelift?.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X