ஃபோர்டின் பிரபலமான அமெரிக்க பிக்அப் ட்ரக்... எஃப்-150 ராப்டர்!! 2021 வெர்சனில் வருகிறது...

அமெரிக்க சந்தையில் பிரபலமான ஃபோர்டு பிக்அப் ட்ரக்கான எஃப்-150 ராப்டரின் 2021 வெர்சன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 2021 எஃப்-150 ராப்டரை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோர்டின் பிரபலமான அமெரிக்க பிக்அப் ட்ரக்... எஃப்-150 ராப்டர்!! 2021 வெர்சனில் வருகிறது...

முந்தையை தலைமுறையை காட்டிலும் புதிய தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள 2021 ஃபோர்டு எஃப்-150 ராப்டரில் அதேநேரம் கூடுதலான தொழிற்நுட்ப வசதிகளையும் தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

ஃபோர்டின் பிரபலமான அமெரிக்க பிக்அப் ட்ரக்... எஃப்-150 ராப்டர்!! 2021 வெர்சனில் வருகிறது...

இதனால் முன்பை விட மேம்பட்ட ஆஃப்-ரோடு திறனை பெற்றுள்ள புதிய ராப்டரின் முன்பக்கம் பெரிய கருப்பு நிற க்ரில் மற்றும் எல்இடி ஹெட்லைட்களுடன் முற்றிலும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. முன்பக்க பொனெட்டின் மூடி எஃப்-22 ராப்டர் ஃபைட்டர் ஜெட்டின் சில அம்சங்களை பெற்றுள்ளது.

உட்புற கேபின் வாகனத்தின் வெளிப்புறத்திற்கு ஏற்ப இரு 12 இன்ச் திரைகளுடன் திருத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு திரைகளில் ஒன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கும், மற்றொன்று ஃபோர்டின் சிங்க் 4 மற்றும் ஃபோர்டு இணைப்பு கார் தொழிற்நுட்ப வசதியை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் திரைக்கும் ஆகும்.

ஃபோர்டின் பிரபலமான அமெரிக்க பிக்அப் ட்ரக்... எஃப்-150 ராப்டர்!! 2021 வெர்சனில் வருகிறது...

அலுமினியத்தின் தொடுதல்களை பெடல் ஷிஃப்டர்ஸ், கதவுகளின் உட்பக்கம், இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் மற்றும் மைய கன்சோலில் பார்க்க முடிகிறது. வெளிப்புறத்தை போல் உட்புறத்திலும் கார்பன்-ஃபைபர் ட்ரிம் மற்றும் ரெக்காரோ இருக்கைகளை கூடுதல் தேர்வாக ஃபோர்டு நிறுவனம் வழங்கவுள்ளது.

ஃபோர்டின் பிரபலமான அமெரிக்க பிக்அப் ட்ரக்... எஃப்-150 ராப்டர்!! 2021 வெர்சனில் வருகிறது...

உட்புறத்தில் மற்ற அம்சங்களாக வயர் இல்லா ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 18-ஸ்பீக்கர் பாங்க் & ஒலுஃப்சன் ஸ்டேரியோ, 360-கோண பார்க்கிங் கேமிரா மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவைகளை பெற்றுள்ள புதிய எஃப்-150 ராப்டரில் வழக்கமான இரட்டை-டர்போ 3.5 லிட்டர் ஈக்கோபூஸ்ட் வி6 என்ஜின் தான் திருத்தியமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

ஃபோர்டின் பிரபலமான அமெரிக்க பிக்அப் ட்ரக்... எஃப்-150 ராப்டர்!! 2021 வெர்சனில் வருகிறது...

10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்படவுள்ள இந்த திருத்தியமைக்கப்பட்ட என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளை தற்போதைக்கு ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை.

ஃபோர்டின் பிரபலமான அமெரிக்க பிக்அப் ட்ரக்... எஃப்-150 ராப்டர்!! 2021 வெர்சனில் வருகிறது...

நமக்கு தெரிந்தவரை, தற்போதைய எஃப்-150 ராப்டரின் அதே 450 பிஎச்பி மற்றும் 691 என்எம் டார்க் திறனில்தான் அதிகப்பட்சமாக அதன் 2021 வெர்சனும் இயக்கும் வகையில் வழங்கப்படும். வழுக்கும், கயிறு/ஹால், ஸ்போர்ட், நார்மல், ஆஃப்-ரோடு, பாஜா மற்றும் ராக் க்ரௌல் என்ற ஏழு விதமான ட்ரைவிங் மோட்களை பெற்றுவரும் புதிய எஃப்-150 ராப்டரில் புதிய பாதை மேலாண்மை சிஸ்டத்துடன் ஏராளமான ஆஃப்-ரோடு தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஃபோர்டின் பிரபலமான அமெரிக்க பிக்அப் ட்ரக்... எஃப்-150 ராப்டர்!! 2021 வெர்சனில் வருகிறது...

புதிய ராப்டரை இந்தியாவிற்கு கொண்டுவர ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனத்திடம் தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை. அதற்கு பதிலாக இந்தியாவில் ரேஞ்சர் ராப்டர் பிக்அப் ட்ரக் வாகனத்தை சிபியூ முறையில் கொண்டுவர இந்த அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
New Ford F-150 Raptor unveiled.
Story first published: Sunday, February 7, 2021, 23:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X