சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... அதுக்குள்ள இவ்வளவு அமேஸ் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? கெத்து காட்டும் ஹோண்டா!

ஹோண்டா அமேஸ் கார் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... அதுக்குள்ள இவ்வளவு அமேஸ் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? கெத்து காட்டும் ஹோண்டா!

சப்-4 மீட்டர் செடான் காரான அமேஸ் புதிய விற்பனை மைல்கல்லை எட்டியிருப்பதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா அமேஸ் கார் முதல் முறையாக கடந்த 2013ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்தே அதிகம் விற்பனையாகும் செடான் கார்களில் ஒன்றாக அமேஸ் திகழ்ந்து வருகிறது.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... அதுக்குள்ள இவ்வளவு அமேஸ் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? கெத்து காட்டும் ஹோண்டா!

இதற்கிடையே புதிய தலைமுறை அமேஸ் செடான் காரை ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த சூழலில் புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் கார் தற்போது விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு சுமார் 3 ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... அதுக்குள்ள இவ்வளவு அமேஸ் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? கெத்து காட்டும் ஹோண்டா!

அதற்குள்ளாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய தலைமுறை அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுதான் புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் விற்பனையில் எட்டியிருக்கும் புதிய மைல்கல். அதே நேரத்தில் தற்போது வரை ஒட்டுமொத்தமாக எத்தனை ஹோண்டா அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்ற தகவலும் கிடைத்துள்ளது.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... அதுக்குள்ள இவ்வளவு அமேஸ் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? கெத்து காட்டும் ஹோண்டா!

இதன்படி முதல் தலைமுறை மற்றும் இரண்டாம் தலைமுறை என ஒட்டுமொத்தமாக பார்த்தால் தற்போது வரை 4.6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹோண்டா அமேஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக அமேஸ் திகழ்ந்து வருகிறது.

பொதுவாக இந்தியாவில் தற்போது செடான் கார்களுக்கு வரவேற்பு குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு மாறாக எஸ்யூவி கார்கள்தான் அதிகளவில் விற்பனையாகின்றன. குறிப்பாக சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. அப்படி இருக்கும்போது செடான் கார் ஒன்று இந்தளவிற்கு விற்பனையாவது சிறப்பான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... அதுக்குள்ள இவ்வளவு அமேஸ் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? கெத்து காட்டும் ஹோண்டா!

இதுகுறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான காகு நகாநிசி கூறுகையில், ''ஹோண்டா அமேஸ் எங்களுக்கு மிக முக்கியமான ஒரு தயாரிப்பு. இந்த செக்மெண்ட்டில் சிறப்பான சந்தை நிலையை ஹோண்டா அமேஸ் கொண்டுள்ளது. ஹோண்டா அமேஸ் இந்திய வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பு.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... அதுக்குள்ள இவ்வளவு அமேஸ் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? கெத்து காட்டும் ஹோண்டா!

இரண்டாவது தலைமுறை அமேஸ் காரின் 2 லட்சமாவது யூனிட்டை டெலிவரி செய்திருப்பது ஹோண்டா கார்ஸ் இந்தியா குடும்பத்திற்கு பெருமை மிகு தருணம் ஆகும்'' என்றார். புதிய தலைமுறை இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் லைன்அப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய தலைமுறை அமேஸ் காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... அதுக்குள்ள இவ்வளவு அமேஸ் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? கெத்து காட்டும் ஹோண்டா!

இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 88 ஹெச்பி பவரையும், 4,800 ஆர்பிஎம்மில் 110 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் டீசல் இன்ஜின் மாடலானது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வேரியண்ட்டில் 80 ஹெச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... அதுக்குள்ள இவ்வளவு அமேஸ் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? கெத்து காட்டும் ஹோண்டா!

அதே சமயம் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மாடலில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 ஹெச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். ஹோண்டா அமேஸ் காரில் வழங்கப்படும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மாடலானது, இந்தியாவில் கிடைக்கும் கார்களிலேயே சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் மாடல்களில் ஒன்றாகும்.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... அதுக்குள்ள இவ்வளவு அமேஸ் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? கெத்து காட்டும் ஹோண்டா!

ஹோண்டா அமேஸ் காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே அனைத்து வகைகளிலும் இது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனம் சற்று தடுமாறி வருகிறது என்பதுதான் யதார்த்தம். புதிதாக வந்த ஒரு சில நிறுவனங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... அதுக்குள்ள இவ்வளவு அமேஸ் கார்கள் சேல்ஸ் ஆயிருச்சா? கெத்து காட்டும் ஹோண்டா!

எம்ஜி மோட்டார் மற்றும் கியா போன்ற நிறுவனங்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். ஆனால் மிக நீண்ட காலமாக சந்தையில் இருந்து வரும் ஹோண்டா போன்ற ஒரு சில நிறுவனங்கள் தடுமாற்றத்தைதான் சந்தித்து கொண்டுள்ளன. ஆனால் ஹோண்டா நிறுவனத்திற்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு தயாரிப்பாக அமேஸ் திகழ்கிறது.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
New gen honda amaze achieves 2 lakh sales milestone
Story first published: Friday, December 17, 2021, 18:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X